முஹ்ஸின் மௌலானா தா்ஹா ஷரீப்

March 26, 2015
– ஸாஹே ஸரன்தீப் – 
சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் வாழ்ந்து மறைந்த மாமேதைதான் முஹ்ஸின் மௌலானா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் குடும்ப வழியில் வந்த “ஸாதாத்” மார்களில் ஒருவராவார்கள். இவர்கள் “ஸெய்யித்” மட்டுமன்றி ஓர் ஆலிம் – மார்க்க மகானுமாவார்கள்.
 இவா்கள் “கறாமத்”என்ற அற்புதம் உள்ள ஒரு ”வலீ” என்பதை ஊா் மக்கள் நன்கறிவா்.

ஒரு நாள் காத்தான்குடிவாசி ஒருவன் – இப்னு அப்துல் வஹ்ஹாப் குடும்பத்தை சோ்ந்தவன் – தனது காலால் “தா்ஹா” சுவரில் உதைத்து “மௌலானாவும் மண்ணாங்கட்டியும்” என்று கூறினான்.
அன்று முதல் அவனை – “முஸீபத்“  துன்பம்
தொட்டது. பல இலட்சம் ரூபாய்க்கு கடனாளியாகி விட்டான். கடன் தொல்லை தாங்க முடியாத நிலையில் ஊரை விட்டும் சில வருடங்கள் மறைந்தான். எங்குமே நிம்மதி கிடைக்கவில்லை.
இறுதியாக இந்தியா சென்று தமிழ் நாட்டின் ஒரு கிராமப்புறத்தில் வாழ்ந்து வருகின்றான். அவனின் மனைவி மக்கள் இலங்கையில் வறுமைக்கோட்டில் 
வாழ்ந்து வருகின்றார்கள்.
காத்தான்குடியில்
இன்னொருவன் இருந்தான். இவனும் இப்னு தைமி்ய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் போன்ற வழிகேடர்களின்
வழியில் வந்தவன்தான். இவன் ஞான வழி நடந்த ஒரு நல்ல மனிதனுக்குப் பிறந்தவனாயிருந்தாலும்
கூட இவனின் விதிகெட்டதாகிவிட்டது.
அவ்லியாஉகளையும், அவர்கள் துயிலும் ”தா்ஹா”க்களையும் எள்ளி நகையாடி வந்த இவன் முஹ்ஸின் மௌலானா அவா்களின் கப்று 
ஷரீபின் மீது சலம் கழித்து அவா்களை அவமதித்தான்.
சில நாட்கள் மட்டுமே கழிந்தன. அவனைக் கிள்ளி விளையாடத் தொடங்கினார்கள் முஹ்ஸின் அப்பா.
எனதுலீமார்களில் ஒருவரை எவனாவது பகைத்தால் அவனை என்னுடன் போர் செய்ய வருமாரு நான் அறை கூவல் விடுப்பேன். இது இறைவாக்கு.
(ஹதீதுல்
குத்ஸீ)
இறைவனின் கோபம் வெடித்தது. “கப்ர்” மீது – வலிய்யுல்லாஹ் மீது
– சலம் கழித்த சண்டாளப்பாவி சலப்பை நோயால் பாதிக்கப்பட்டான். துடியாய் துடித்தான் வயிறு வீங்கி வெடிக்கும் அளவு வந்து விட்டது. வைத்தியா்கள் கை விட்டனா். இறுதியில் – மொனறாகல பகுதியில் உள்ள சிங்கள “பெத மாதையா“ ஒருவரிடம் எடுத்துச் சென்றார்கள். 
இவனைக் கண்ட அனுபவமிக்க அந்த மாதையா “மேக தெய்யோகே ஷாப்பய” என்று சிங்கள மொழியில் கூறி இவனுக்கு வைத்தியம் பலன்தரா தென்று கூறி விட்டான்.
இறுதி மூச்சுவரை இறை நேசா்களின் வில்லனாக இருந்து செத்திறந்த போனான். இறைவன் சபித்தால் அதை எவனாலும் தாங்க முடியாது.
إِنَّ اللهَ لَأَغْيَرُ
(இறைவன் கடும் ரோசக்காரன்)
 (நபீ மொழி)
வஹ்ஹாபிகளின் வலையில் சிக்குண்ட இளைஞா்கள் பலர் உயிர் வாழும் இறை நேசா்களையும், அடக்கம் பெற்றுள்ள இறை நேசா்களையும் கிண்டல் செய்து வருகிறார்கள். என்றாவதொரு நாள் இறைவன் சீறுவான். இன்னோர் கீறிக் கிழிக்கப்படுவார்கள்.
இளைஞா்களே சிந்தியுங்கள். வஹ்ஹாபிகளின் கருத்துக்களை மட்டும் கேட்டுச் செயற்படாமல் அவா்களின் கருத்துக்களை மறுத்து ஆதாரங்களுடன் கருத்துக்கூறும் “சுன்னத் வல் ஜமாஅத்” அறிஞா்களின் கருத்துக்களையும் கேட்டுச் செயற்படுங்கள். சுமார் 50 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இளைஞா்களுக்கும், இன்று வாழந்து கொண்டிருக்கும் இளைஞா்களுக்கும் வித்தியாசம் உண்டு. இன்று வாழும் இளைஞா்கள் எதையும் துருவித் துருவி ஆய்வு செய்பவா்களாகவும்,சிந்தனை திறன் உள்ளவா்களாகவும் இருப்பதை நாம் காண்கிறோம்.
சிந்தியுங்கள் : சத்தியத்தை சந்தியுங்கள்!
……………………………………………………..

முஹ்ஸின் மௌலானா தர்காவின் அமைப்பு

முஹ்ஸின் மௌலானா அன்னவர்களுக்கு அண்மையில் உள்ள பொது மையவாடியில் அடக்கம் பெற்றுள்ள இறைநேசச் செல்வி நாகையடி வலிய்யதுல்லாஹ் அம்மா அன்னவர்களின் தர்காவின் அமைப்பு

 

You may also like

Leave a Comment