Friday, April 26, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் – 02

அஸ்ஸெய்யித் அபூதல்ஹதல்அன்ஸாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள்

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் பத்ர் போரில் கலந்து கொண்ட ஓர் ஸஹாபீ. அம்பு எய்வதில் சிறந்த வீரர், உஹத் யுத்தத்தின் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை நோக்கி வந்த அம்புகளை தனது நெஞ்சைக் கொண்டு காத்தவர்கள். ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்னவர்களின் தாய் அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸுலைம் றழியல்லாஹு அன்ஹா அன்னவர்களை திருமணம் செய்தவர்கள். அவர்களின் சாச்சா அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள்மிக்க புனித முடிகளை பாதுகாப்பதில் மிக ஆர்வமாக செயற்பட்டவர்கள்.

عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا حَلَقَ رَأْسَهُ كَانَ أَبُوْطَلْحَةَ أَوَّلَ مَنْ أَخَذَ شَعْرَهُ.
அனஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் தலை முடியை மழித்த போது அபூதல்ஹா அவர்களே முதன் முதலில் அவர்களின் முடிகளில் சிலவற்றை எடுத்தவர்களாகும்.
                                                ஸஹீஹுல் புஹாரி 171
இந்த ஹதீதிலிருந்து ஸெய்யிதுனா அபூதல்ஹதல் அன்ஸாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடிகளை சேகரிப்பதிலும், அவற்றைக் காப்பதிலும் மிகவும் ஆர்வமாக செயற்பட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இது மாத்திரமின்றி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் முடிகளைக் களைந்து இவர்களிடமே ஒப்படைத்தார்கள். அவற்றை மக்கள் மத்தியில் பங்கு வைக்கும் படி இவர்களையே பணித்தார்கள். இது இவர்கள் பெற்றுக் கொண்ட பெரும் பாக்கியமாகும்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ ثُمَّ انْصَرَفَ إِلَى الْبُدْنِ فَنَحَرَهَا وَالْحَجَّامُ جَالِسٌ وَقَالَ بِيَدِهِ عَنْ رَأْسِهِ فَحَلَقَ شِقَّهُ الْأَيْمَنَ فَقَسَمَهُ فِيْمَنْ يَلِيْهِ ثُمَّ قَالَ اِحْلِقِ الشِّقَّ الْاَخَرَ فَقَالَ أَيْنَ أَبُوْطَلْحَةَ؟ فَأَعْطَاهُ إِيَّاهُ.
அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டுஅறுக்கும் இடத்திற்கு வந்து அதில் அறுத்தார்கள்இரத்தம் குத்தி எடுப்பவனும் அங்கு அமர்ந்திருந்தான்பின்னர் தனது கையினால் தனது தலையை மழிக்கும் படி கூறினார்கள்அவர்களின் வலது பகுதியை அவன் மழித்தான்அதை அங்கிருந்தோர் மத்தியில் பங்கிட்டார்கள்பின்னர் மற்றப் பகுதியை மழி என்று கூறினார்கள்அபூதல்ஹா எங்கேஎன்று கேட்டு அதை அவர்களிடம் கொடுத்தார்கள்.
                                               ஸஹீஹ் முஸ்லிம் 3141
இந்த ஹதீதிலிருந்து நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் திரு முடிகளை தாங்களாகவே ஸஹாபஹ் – தோழர்கள் மத்தியில் பங்கு வைத்திருக்கிறார்கள் என்பதும், அபூதல்ஹா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள் என்பதும் நிரூபணமாகிறது.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ لَمَّا رَمَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَمْرَةَ وَنَحَرَ نُسُكَهُ وَحَلَقَ نَاوَلَ الْحَالِقَ شِقَّهُ الْأَيْمَنَ فَحَلَقَهُ. ثُمَّ دَعَا أَبَاطَلْحَةَ الْأَنْصَارِيَّ فَأَعْطَاهُ إِيَّاهُ. ثُمَّ نَاوَلَهُ الشِّقَّ الْأَيْسَرَ فَقَالَ اِحْلِقْ فَحَلَقَهُ فَأَعْطَاهُ أَبَاطَلْحَةَ فَقَالَ اِقْسِمْهُ بَيْنَ النَّاسِ.
அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஜம்றாவில் கல்லெறிந்துஅறுத்து முடிகளை மழித்த போது மழிப்பவனிடம் தனது வலது பகுதியை கொடுத்தார்கள்அவன் அதை மழித்தான்பின்பு அபூதல்ஹதல் அன்ஸாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை அழைத்து அதை அவர்களிடம் கொடுத்தார்கள்பின்னர் இடது பகுதியைக் கொடுத்து மழி என்று சொன்னார்கள்அவன் அதை மழித்தான்அதை அபூதல்ஹா அவர்களிடம் கொடுத்துஇதை மக்கள் மத்தியில் பங்கு வைத்து விடுங்கள் என்று சொன்னார்கள்.
                                               ஸஹீஹ் முஸ்லிம் 3142
மேற்கூறப்பட்ட ஹதீத் மூலமும் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனிதம் நிறைந்த முடிகள் ஸெய்யிதுனா அபூதல்ஹா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் வழங்கப்பட்டது நிரூபணமாகிறது.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் முடிகளின் அருள் அனைத்து ஸஹாபஹ் – தோழர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தனது தோழர் அபூதல்ஹா றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை நியமித்து ஏனைய ஸஹாபஹ் – தோழர்களுக்கும் அவற்றைக் கிடைக்கச் செய்திருக்கிறார்கள்.
தனது முடிகளில் எந்த விதப் பயனுமில்லையெனில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவற்றை ஸஹாபஹ் – தோழர்கள் மத்தியில் விநியோகிக்கும் படி பணித்திருக்கமாட்டார்கள். நிச்சயமாக அவற்றில் அருள் நிறைந்திருந்த காரணத்தினால் தான் இவ்வாறு அவர்கள் செய்தார்கள்.
மேற்கூறப்பட்ட ஹதீதுக்கு விரிவுரை எழுதியவர்களில் சிலர் “நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடிகள் கொண்டும், அவர்கள் விட்டுச் சென்ற அனைத்துச் சின்னங்கள் கொண்டும் அருள் பெறுவது ஆகும் என்று கூறுகிறார்கள்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் தாய் ஸெய்யிததுனா உம்மு ஸுலைம் றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களுக்கு தங்களின் திரு முடிகளை வழங்கினார்கள் அருள் ஜோதி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்.
அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸுலைம் றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள்

ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் தாய். ஆரம்பத்தில் மாலிக் இப்னுன் நழ்ர் என்பவரை திருமணம் செய்திருந்தார்கள். இவர்கள் மீது கோபமுற்ற அவர் சிரியாவுக்குச் சென்று அங்கேயே மரணித்து விட்டார். அதன் பின் அபூதல்ஹதல் அன்ஸாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை திருமணம் செய்தார்கள். இவர்களில் ஓர் ஆண்குழந்தையை பெற்றெடுத்தார்கள். அவர்கள் சிறு வயதிலேயே மரணித்து விட்டார்கள். அவர்களின் பெயர் அபூஉமைர். பின்னர் அப்துல்லாஹ் என்ற குழந்தையை பெற்றெடுத்தார்கள். இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகளையும், வாசம் நிறைந்த அவர்களின் வியர்வையையும் பாதுகாத்த ஓர் ஸஹாபிய்யஹ் பெண்மணி.

أَخْبَرَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ هِشَامٍ بِهذَا الْإِسْنَادِ أَمَّا أَبُوْبَكْرٍ فَقَالَ فِيْ رِوَايَتِهِ لِلْحَلاَّقِ هَا وَأَشَارَ بِيَدِهِ إِلَى الْجَانِبِ الْأَيْمَنِ هَكَذَا. فَقَسَمَ شَعْرَهُ بَيْنَ مَنْ يَلَيْهِ. قَالَ ثُمَّ أَشَارَ إِلَى الْحَلاَّقِ وَإِلَى الْجَانِبِ الْأَيْسَرِ. فَحَلَقَهُ فَأَعْطَاهُ أُمُّ سُلَيْمٍ.
அபூபக்ர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களின் ரிவாயத்தில் கூறியதாக ஹிஷாம் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
மழிப்பவனிடம் தனது வலது பக்க முடிகளை மழிக்கும் படி கூறிய நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவற்றை அவர்களுக்கு அருகிலிருந்தோருக்கு பங்கு வைத்தார்கள். பின்னர் மழிப்பவனிடம் தனது இடது பக்க முடிகளை மழிக்கும் படி சுட்டினார்கள். அவன் அதை மழித்தான். அதை உம்மு சுலைம் றழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களுக்கு கொடுத்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 3140
அஸ்ஸெய்யிதஹ் உம்மு சுலைம் றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் தனக்குக் கிடைத்த அருள் மிக்க அந்த முடிகளை தங்களின் இல்லத்தில் மிகவும் கண்ணியமாகப் பாதுகாத்தார்கள். அவற்றைக் கொண்டு அருள் பெற்றார்கள்.
அது மாத்திரமன்றி அவர்கள் அண்ணல் எம்பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த உடலிலிருந்து வழிகின்ற வியர்வையைக் கூட சேமிப்பதில் மிக ஆர்வமுடையவர்களாகத் திகழ்ந்தார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சில சந்தர்ப்பங்களில் இவர்களின் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுப்பார்கள். அந் நேரம் அவர்களின் அருள் நிறைந்த உடலிலிருந்து வெளியாகின்ற வியர்வையை சிறு போத்தலில் சேமித்துக் கொள்வார்கள். அதை மணமாக உபயோகிப்பார்கள். அருள் பெற்றவர்கள் கண்ணியமிக்க ஸஹாபஹ் – தோழர்கள்.
அஸ்ஸெய்யித் அனஸ் இப்னு மாலிக் இப்னுன் நழ்ர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு பத்து வருடங்களுக்கு மேல் பணி செய்த ஓர் ஸஹாபீ – தோழர் தனது பத்து வயதில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பணியாளராக இணைந்தார்கள். பத்ர் யுத்தத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் பணியாளராகப் புறப்பட்டார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அதிக ஹதீஸ்களை இவர்கள் ரிவாயத் செய்திருக்கிறார்கள்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இவர்களுக்கு விஷேடமாக துஆ செய்திருக்கிறார்கள்.
செய்யிதுனா அனஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக தாபித் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். எனது தாய் உம்மு ஸுலைம் அவர்கள் நான் சிறுவனாக இருக்கும் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் அழைத்துச் சென்று, யாரஸுலல்லாஹ் எனது மகன் அனஸுக்கு துஆ செய்யுங்கள் என்றார்கள். அப்பொழுது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “இறைவா! இவருடைய பொருளாதாரத்தையும், இவருடைய பிள்ளைகளையும் அதிகரிக்கச் செய்வாயாக, இவரை சுவர்க்கத்தில் நுழைவிப்பாயாக” என்று பிராத்தித்தார்கள்.
அல் இஸாபஹ் பீதம்யீஸிஸ்ஸஹாபஹ்
பக்கம் 83
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் துஆ பறக்கத்தைப் பெற்றுக் கொண்ட ஸெய்யிதுனா அனஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் மிக அருள் பெற்று வாழ்ந்தார்கள். இவர்களுக்கு ஒரு தோட்டம் இருந்தது. இதில் வருடத்தில் இரண்டு தடவைகள் பழம் தரக்கூடிய மரங்கள் காணப்பட்டன. அதே போன்று கஸ்தூரி வாடை வீசக்கூடிய மலர்களும் காணப்பட்டன. இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடிகளை மிகக் கண்ணியமாக பாதுகாத்தார்கள். தான் மரணித்தால் அந்த திரு முடிகளின் அருள் தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவற்றை தனது நாவின் கீழ் வைக்கும் படியும் இறுதி விருப்பம் தெரிவித்தார்கள்.
தனது தந்தை சொன்னதாக ஸப்வான் இப்னு ஹுபைறா றழியல்லாஹு தஆலா அன்ஹு கூறியதை இப்னுஸ் ஸகன் ரிவாயத் செய்துள்ளார்கள்.
அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு கூறியதாக தாபித் அல்புனானீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் எனக்கு கூறினார்கள்.
இது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகளில் ஒரு முடி இதை எனது நாவின் கீழ் வையுங்கள்.
தாபித் அல்புனானீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறுகிறார்கள். அதைஅவர்களின் நாவின் கீழ் வைத்தேன். அதன் கீழ் அது இருக்கின்ற நிலையிலேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
அல் இஸாபஹ் பீ தமயீஸிஸ் ஸஹாப் பக்கம் 83
இன்னுமொரு ரிவாயத்தில் ஸெய்யிதுனா அனஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தனது தாய் அஸ் ஸெய்யிதஹ் உம்மு ஸுலைம் றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் பாதுகாத்து வைத்த நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடியும், அருள் வியர்வையும் கலந்த போத்தலிலிருந்து தனது கபனில் பூசப்பட வேண்டுமென்று இறுதி விருப்பம் தெரிவித்தார்கள்.
عَنْ ثُمَامَةَ عَنْ أَنَسٍ أَنَّ أُمَّ سُلَيْمٍ كَانَتْ تَبْسُطُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِطَعًا فَيَقِيْلُ عِنْدَهَا عَلَى ذَالِكَ النِّطَعُ. قَالَ فَإِذَا نَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَتْ مِنْ عَرَقِهِ وَشَعَرِهِ. فَجَمَعَتْهُ فِيْ قَارُوْرَةٍ. ثُمَّ جَمَعَتْهُ فِيْ سُكٍّ وَهُوُ نَائِمٌ. قَالَ فَلَمَّا حَضَرَ أَنَسَ بْنَ مَالِكٍ الْوَفَاةُ أَوْصَى إِلَيَّ أَنْ يُجْعَلَ فِيْ حَنُوْطِهِ مِنْ ذَالِكَ السِّكِّ. قَالَ فَجُعِلَ فِيْ حَنُوْطِهِ.                                             
அனஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக துமாமா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறுகிறார்கள்.
உம்மு ஸுலைம் றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்காக தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் உறங்கி விட்டால் அவர்களின் வியர்வையையும், முடியையும் எடுத்து ஒரு போத்தலில் சேகரிப்பார்கள். பிறகு அதை வாசனைப் பொருளில் வைப்பார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் உறங்குகின்ற நிலையில் இதனை செய்வார்கள்.
துமாமா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களுக்கு மரண வேளை நெருங்கிய போது தமது கபன் துணியில் பூசப்படும் நறுமணத்தில் இந்த நறுமணத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு என்னிடம் விருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்களின் கபனில் பூசப்பட்ட நறுமணத்துடன் இதுவும் சேர்க்கப்பட்டது.
ஸஹீஹுல் புஹாரீ 6281
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடியிலும், வியர்வையிலும் அருள் உண்டு என்பதை நம்பியிருந்தார்கள். ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தனது வீட்டில் கண்ணியத்துடன் பாதுகாக்கப்பட்ட அவற்றின் அருள் தான் மரணித்த பின்பும் தனக்கு கிடைக்க வேண்டுமென்பதை விரும்பினார்கள். எனவே அவற்றைத் தனது ஜனாஸாவுடன் சேர்த்து அடக்கும் படி பணித்தார்கள். பாக்கியஸாலிகள் நபீகளாரின் சமூகம் வாழந்த ஸஹாபஹ் – தோழர்கள்.
ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் அடிமையாக இருந்த ஸெய்யிதுனா ஸீரீன் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடமும் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடி காணப்பட்டது இது பற்றி அவர்களின் புதல்வர் ஸெய்யிதுனா அபூபக்ர் முஹம்மத் இப்னு ஸீரீன் றழியல்லாஹு தஆலா அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
عَنِ ابْنِ سِيْرِيْنَ قَالَ قُلْتُ لِعَبِيْدَتَ عِنْدَنَا مِنْ شَعَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَبْنَاهُ مِنْ قِبَلِ أَنَسٍ أَوْ مِنْ قِبَلِ أَهْلِ أَنَسٍ. فَقَالَ لَأَنْ تَكُوْنَ عِنْدِيْ شَعْرَةٌ مِنْهُ أَحَبُّ إِلَيَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيْهَا.
முஹம்மத் இப்னு ஸீரீன் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறுகிறார்கள்.
நான் அபீதா றழியல்லாஹு தஆலா அன்னவர்களிடம் “அனஸ் றழியல்லாஹு தஆலா அன்னவர்களிடமிருந்து அல்லது அனஸின் குடும்பத்தாரிடமிருந்து நாங்கள் பெற்ற நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சில முடிகள் எங்களிடமிருக்கின்றன” என்று சொன்னேன். அதற்கு அபீதா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் “நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகமும், அதிலுள்ளவற்றையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது” என்று கூறினார்கள்.
ஸஹீஹுல் புஹாரீ 170
ஸெய்யிதுனா அனஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் குடும்பத்தில் பாதுகாக்கப்பட்ட திருமுடிகள் அவர்களின் அடிமையாக இருந்த காரணத்தினால் ஸெய்யிதுனா ஸீரீன் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களுக்கு கிடைத்தது. அதை அவர்கள் தங்களின் இல்லத்தில் மிக கண்ணியமாகப் பாதுகாத்தார்கள். இந்த அருள் முடிகள் பற்றியே ஸெய்யிதுனா முஹம்மத் இப்னு ஸீரீன் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள்.
மேற் கூறப்பட்டவற்றின் மூலம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் ஸெய்யிதுனா அனஸ் றழியல்லாஹு தஆலா அன்னவர்களின் குடும்பத்தினூடாக ஏனைய ஸஹாபஹ் – தோழர்களுக்கும்வழங்கப்பட்டிருப்பதை அறிய முடியும். ஸஹாபஹ் – தோழர்கள் மூலம் அவை தாபியீன்களை வந்தடைந்தன. அவர்களிடம் அவை பாதுகாக்கப்பட்டன. அவை கண்ணியப்படுத்தப்பட்டன. பொதுவாக இன்றும் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன என்றால் ஸஹாபஹ் – தோழர்களே அவற்றின் சிறப்பைப் பெறுகிறார்கள்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளைக் கொண்டு மக்கள் அருள் பெற வேண்டுமென்பதற்காக, அவற்றைக் கொண்டு அவர்கள் நோய் நிவாரணம் பெற வேண்டுமென்பதற்காக அவற்றைத் தங்களிடம் பாதுகாத்து வைத்திருந்தார்கள் கண்ணியத்திற்குரிய உம்மஹாதுல் முஃமினீன் – நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அன்பு மனைவிமார் றழியல்லாஹு தஆலா அன்ஹுன்ன.
அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள்

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அன்பு மனைவிமார்களில் ஒருவர் அபூஸலமா என்பவரை முதலில் திருமணம் செய்திருந்தார்கள். அவர் மரணித்த பின் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைத் திருமணம் செய்தார்கள்.
இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை மிகவும் கண்ணியத்துடன் தங்களிடம் பாதுகாத்தார்கள். அவை சாயமிடப்பட்டவையாகவும், சிவப்பு நிறம் உடையவையாகவும் காணப்பட்டன.
عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ مَوْهَبٍ قَالَ دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ فَأَخْرَجَتْ إِلَيْنَا شَعَرًا مِنْ شَعَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَخْضُوْبًا.
உத்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னு மவ்ஹப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
நான் உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் சென்றேன்அவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகளிலிருந்து சாயமிடப்பட்ட முடியை எங்களுக்கு எடுத்துக் காட்டினார்கள்.
ஸஹீஹுல் புஹாரீ 5897
عَنِ ابْنِ مَوْهَبٍ أَنَّ أُمَّ سَلَمَةَ أَرَتْهُ شَعَرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْمَرَ.
உத்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னு மவ்ஹப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னலர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
அன்னை உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சிவப்பான முடியை எனக்குக் காட்டினார்கள்.
ஸஹீஹுல் புஹாரீ 5898
عن عثمان بن عبد الله بن موهب قال دخلنا على أمّ سلمة فأخرجت لنا صرّة فيها شعر النّبيّ صلّى الله عليه وسلّم مخضوب بحنّاء. فقالت هذا من شعرالنّبيّ صلّى الله عليه وسلّم.
உத்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னு மவ்ஹப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
நாங்கள் உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் சென்றோம்அவர்கள் ஒரு முடிச்சியை எங்களுக்கு வெளிப்படுத்தி காட்டினார்கள்அதில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடி இருந்ததுஅது மருதோன்றி கொண்டு சாயமிடப்பட்டிருந்ததுஇது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடி என்று அவர்கள் கூறினார்கள்.
அல் முஃஜமுல் கபீர் லித்தபறானீ
பாகம் – 23 / இலக்கம் 764
மேற்சொல்லப்பட்ட ஹதீத்கள், அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் காணப்பட்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் மருதோன்றி கொண்டு சாயமிடப்பட்டவையாகவும், சிவப்பானவையாகவும் காணப்பட்டன என்பதை தெளிவாக்குகின்றன.
அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் காணப்பட்ட திருமுடிகளில் அண்ணல் எம்பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த தாடி முடிகளும் காணப்பட்டன. அவற்றை அவர்கள் மிகவும் கண்ணியமாக பாதுகாத்தார்கள். வெள்ளிப்பாத்திரத்தில் மிக மரியாதையுடன் அதை பாதுகாத்தார்கள்.
அது மாத்திரமன்றி தன்னிடமுள்ள அருள் நிறைந்த முடிகளைக் கொண்டு ஏனைய ஸஹாபஹ் – தோழர்களும் அருள் பெற வேண்டுமென்பதற்காக அவர்களுக்கும் அதை எடுத்துக் காட்டினார்கள். ஏனைய ஸஹாபஹ்கள் அவற்றைக் கொண்டு அருள் பெற்றார்கள். தங்களின் நோய்களுக்கு அவற்றைக் கொண்டு நோய் நிவாரணம் பெற்றார்கள்.
عَنْ إِسْرَائِيْلَ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ مَوْهَبٍ قَالَ أَرْسَلَنِيْ أَهْلِيْ إِلَى أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحٍ مِنْ مَاءٍ. وَقَبَضَ إِسْرَائِيْلُ ثَلَاثَ أَصَابِعَ مِنْ فِضَّةٍ فِيْهِ شَعَرٌ مِنْ شَعَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَكَانَ إِذَاأَصَابَ الْإِنْسَانَ عَيْنٌ أَوْشَيْئٌ بَعَثَ إِلَيْهَا مَخْضَبَهُ. فَاطَّلَعْتُ فِيْ الْجُلْجُلِ فَرَأَيْتُ شَعَرَاتٍ حُمْرًا.
உத்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னு மவ்ஹப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக இஸ்ராயீல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறுகிறார்கள்.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மனைவி உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் என்னை என் குடும்பத்தினர் ஒரு தண்ணீர் பாத்திரத்தை கொடுத்து அணுப்பி வைத்தார்கள்.
உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் ஒரு சிமிழியை கொண்டு வந்தார்கள். அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது.
ஒருவருக்கு கண்ணேறு அல்லது ஏதாவது ஒரு நோய் ஏற்பட்டுவிட்டால் அவர் தனது நீர்ப்பாத்திரத்தை உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தன்னிடம் இருந்த நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடியை தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.)
நான் அந்த சிமிழியை எட்டிப் பார்த்தேன் அதில் சிவப்பு நிற முடிகளைக் கண்டேன்.
ஸஹீஹுல் புஹாரீ 5896
மேற் கூறப்பட்ட ஹதீதுக்கு விரிவுரை எழுதியோர் பின்வருமாறு கூறுகின்றனர்.
அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சில முடிகள் இருந்தன. அவை சிவப்பு நிறம் உடையவையாகக் காணப்பட்டன. வெள்ளிப் பாத்திரத்தில் அவற்றை அவர்கள் பாதுகாத்து வைத்திருந்தார்கள். மக்களுக்கு நோய் ஏற்படும் போது அந்த திருமுடிகளைக் கொண்டு அவர்கள் அருள் – பறகத் பெறுவார்கள். அவற்றின் பறக்கத்தினால் நோய் நிவாரணம் பெறுவார்கள். அந்தத்  திருமுடிகளை எடுத்து தண்ணீர்ப் பாத்திரத்தில் அவற்றை வைத்து அந்த திருமுடிகள் இருக்கின்ற பாத்திரத்திலுள்ள நீரைக் குடிப்பார்கள். அவர்களுக்கு நோய் நிவாரணம் கிடைக்கும்.
உத்மான் இப்னு அப்தில்லாஹ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் குடும்பத்தினர் அந்த திருமுடிகளை எடுத்து, அவற்றை வெள்ளிப் பாத்திரத்தில் வைத்தார்கள். அதிலுள்ள நீரைக் குடித்தார்கள். அவர்களுக்கு நோய் நிவாரணம் கிடைத்தது. பின்னர் அந்தப் பாத்திரத்தை உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அதை எடுத்து வெள்ளிச் சிமிழியில் வைத்தார்கள். உத்மான் இப்னு அப்தில்லாஹ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தார்கள். அதில் பல சிவப்பு முடிகளைக் கண்டார்கள்.
மக்களில் யாராவது ஒருவருக்கு நோய் ஏற்பட்டு விட்டால் பெரிய பாத்திரம் ஒன்றில் நீரை எடுத்து அதில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை வைப்பார்கள். நோயாளி அருள் நிறைந்த நோயாளி அந்த அருள் நிறைந்த முடிகள் வைக்கப்பட்டிருக்கின்ற நீர்ப் பாத்திரத்தில் அமர்வார். அவருக்கு நோய் நிவாரணம் கிடைத்து விடும். பின்னர் அந்தத் திருமுடிகளை வெள்ளிச்சிமிழியில் வைக்கப்படும்.
உம்ததுல் காரீ பாகம் – 15, பக்கம் – 94
அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சிவப்பு நிற முடிகள் காணப்பட்டன. அவை சிமிழ் போன்ற ஒன்றில் வைக்கப்படிருந்தன.
மக்கள் தங்களுக்கு நோய் ஏற்படும் போது அவற்றைக் கெண்டு நோய் நிவாரணம் பெறுவார்கள். சில நேரம் அந்த அருள் முடிகளை ஓர் நீரப்பாத்திரத்தில் வைத்து அந்த நீரைக் குடிப்பார்கள். சில நேரம் சிறப்பு மிக்க முடிகள் வைக்கப்படிருக்கின்றன. சிமிழை ஓர் நீர்ப்பாத்திரத்தில் வைத்து அதில் உட்காருவார்கள்.
இர்ஷாதுஸ்ஸாரீ பாகம் – 12, பக்கம் – 593
அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் காணப்பட்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் வெள்ளியினாலான ஓர் சிமிழில் வைக்கப்பட்டருந்தன. அவ்வாறு வெள்ளிச்சிமிழில் வைக்கப்பட்டதற்குக் காரணம் அந்த அருள் நிறைந்த முடிகளைப் பாதுகாப்பதற்கேயாகும்.
ஒருவருக்கு நோய் ஏற்பட்டு விட்டால் ஓர் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, அதை உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் அனுப்பி வைப்பார்கள். அவர்கள் அருள் நிறைந்த அந்த முடிகளை அந்த நீரினுள் முக்கி, அவற்றைக் கழுவி, உரியவரிடம் அதைக் கொடுப்பார்கள். நோய் நிவாரணம் பெறும் நோக்கில் அவர் அதைக் குடிப்பார். அல்லது அந்த நீரைக் கொண்டு குளிப்பார். அருள் நிறைந்த அந்த முடிகளின் பறகத் அவருக்குக் கிடைக்கும்.
பத்ஹுல் பாரீ பாகம் – 10, பக்கம் – 398

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளின் சிறப்புக்களை இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். அவர்களின் முடிகள் எங்களைப் போன்றவர்களின் முடிகள் போன்றவையல்ல. அவை தெய்வீகத் தன்மை கொண்டவை. அவை ஆன்மீக சக்தி வாய்ந்தவை. அவை நோய் நிவாரணம் வழங்கக் கூடியவை. ஸஹாபாக்கல் அவற்றின் அருள் கொண்டு நோய் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மனைவிமாருட்பட பெரும்பாலான ஸஹாபஹ் – தோழர்கள் அவர்களின் அருள் நிறைந்த முடிகளைப் பாதுகாத்திருக்கிறார்கள். அவை கொண்டு அருள் பெற்றிருக்கிறார்கள். இது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகளின் சிறப்பை எமக்கு எடுத்துக் காட்டுகிறது.
தொடரும்…….
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments