05 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு.
நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களுடன் பயணித்த இளைஞன் “யூஷஉ” என்பவரும் எடுத்துச் சென்ற பொரித்த மீன் ஓர் இடத்தில் அவர்களின் கூடையிலிருந்து உயிர் பெற்று கடலுக்குள் சென்றது. இது திருக்குர்ஆன் கூறும் வரலாறு.
அந்த மீனின் நீளம் எவ்வளவு? அகலம் எவ்வளவு? அதற்கு முல், எலும்பு இருந்தனவா? ஆதாரத்துடன் தரும் முதல் நபருக்கு 05 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்படும்.
#வெற்றியாளர்!
இரண்டாவதாக நாம் கேட்ட நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட மீன் தொடர்பானதாகும்.
அந்த மீனின் நீளம், அகலம் எவ்வளவு? அந்த மீனுக்கு முள், எலும்பு இருந்தனவா?
இந்தக் கேள்விக்கு சரியான விடையை இதுவரைக்கும் இருவர் மாத்திரமே அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில் முதலாவதாக அனுப்பி வைத்து பரிசினைப் பெற்றுக் கொள்ளும் அதிர்ஷ்டசாலி:
Mrs. MACF பர்ஹத் ஹன்ஸாத்.
கைறாத் லேன், ஆரையம்பதி.
சரியான விடை:
மீனின் நீளம்: ஒரு முழத்திற்கும் மேல். (طولها اكثر من ذراع)
மீனின் அகலம்: ஒரு சாண் (عرضها شبر)
மீனுக்கு எலும்பு முள் இருந்தனவா?: ஆம் இருந்தன
كتاب: حياة الحيوان الكبرى
مألّف: كمال الدّين محمّد بن موسى الدّميرى ( ٧٤٢ – ٨٠٨ هـ)
صفحة: ٣٨٣ – 383