Sunday, May 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பணப்பரிசு அன்பளிப்பு!

பணப்பரிசு அன்பளிப்பு!

சரியான விடை எழுதும் முதல் நபருக்கு மட்டும் 10 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்படும்.

ஒரு பறவை உண்டு. அதன் இறகை எடுத்து வீட்டில் அல்லது கடையில் புகை போட்டால் அங்கு புழு, பூச்சி, விஷஜந்து எதுவும் வராது.

அந்தப் பறவையின் ஓர் இறகைப் பிடுங்கி எடுத்து ஒரு வீட்டில் அல்லது கடையில் வைத்தால் அவ் இடம் பாழடைந்து விடும். பிடுங்காமல் எடுத்தால் பயன் தராது.

அந்தப் பறவையின் சொண்டை எடுத்து ஒருவன் தன்னோடு வைத்துக் கொண்டு ஓர் அரசனிடம் சென்றால் அவன் இவனை வரவேற்று இவனின் தேவையை முடித்து வைப்பான்.

அந்தப் பறவையின் கூட்டிலுள்ள மண்ணை எடுத்து ஒரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவனின் பெயர் சொல்லி அங்கு வைத்தால் அவன் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவான்.

அந்தப் பறவையின் இரு கால் நகங்களில் ஒன்றை எடுத்து ஒரு சிறுவனின் கழுத்தில் கட்டினால் அவனுக்கு கண்ணூறு ஏற்படாது. அதோடு அது அவனில் இருக்கும் வரை ஒரு நோயும் வரவும் மாட்டாது.

அந்தப் பறவையின் வாலையும், அதன் குருதியையும் எடுத்து ஒரு மரத்தில் தொங்கவிட்டால் அந்த மரம் காய்க்காது.

அந்தப் பறவையின் நாக்கை எடுத்து எள்ளெண்ணெயில் கலந்து ஒருவன் அதை தனது நாக்கின் கீழ் வைத்த நிலையில் இன்னொருவனிடம் ஒரு தேவையை கேட்டால் அவன் அதை நிறைவேற்றி வைப்பான்.

அந்தப் பறவையின் இறகை எடுத்து ஒருவன் தனது உடலில் எங்கேயாவது வைத்துக் கொண்டு வழக்குப் பேசினால் எதிரியை வென்றுவிடுவான். அவனின் தேவைகள் யாவும் நிறைவேறும்.

அந்தப் பறவையின் சொண்டையும், அதன் நாக்கையும் எடுத்து பின்னால் கூறப்பட்டுள்ள எழுத்துக்களை மான் தோலில் எழுதி அவ்விரண்டையும் அதில் வைத்து வெள்ளை அல்லது சிவப்பு கம்பளிக் கயிறால் அதைக் காட்டி நீ யாரிடமிருந்து எதை எதிர் பார்க்கிறாயோ அவரின் வீட்டு வாசற் படியில் அவர் அதைக் கடந்து செல்லும் வகையில் மண்ணில் புதைத்து வைத்தால் நீ அவரிடமிருந்து எதிர்பார்த்ததை அடைந்து கொள்ளலாம்.

மான் தோலில் எழுத வேண்டிய எழுத்துக்கள்.

فطيطم مرنون
ما نيل وصعا نيل

அந்தப் பறவையின் வலது கண்ணை எடுத்து பாவிக்காத புதிய துணியில் வைத்து வலது கை மேற் பகுதியில் கட்டிக் கொண்டால் பார்ப்பவர்கள் அனைவரும் அவனை விரும்புவார்கள்.

இந்தப் பறவையின் பெயர் என்ன? அறபியிலும், தமிழிலும் எழுதுதல் வேண்டும். நீங்கள் எழுதும் விடை என்ன கிதாபில் எத்தனையாம் பக்கத்தில் வந்துள்ளதென்றும் குறிப்பிட வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments