தொடர் 02:
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
وأخرجوا سهلَ بنَ عبد الله التُّسْتَرِي من بلده إلى البصـرة، ونَسَبُوه إلى قبائِحَ وكفَّرُوه مع إمامتِه وجلالتِه، ولم يزل بالبصـرة إلى أن مات بها،
ஸஹ்ல் இப்னு அப்தில்லாஹ் துஸ்தரீ அவர்களை தங்களின் ஊரிலிருந்து “பஸறா” என்ற ஊருக்கு விரட்டினார்கள். அவர் பல கூடாத வேலைகள் செய்வதாக குற்றம் சாட்டினார்கள். அவர்கள் பெரும் அறிவுள்ள மேதையாகவும், இமாமாக இருந்தும் கூட அவரை “காபிர்” ஆக்கி வைத்தார்கள். அவர்கள் இறுதி வரை “பஸறா” என்ற ஊரிலேயே இருந்து மரணித்தார்கள்.
وَرَموا أبا سعيد الخَرّازْ بالعَظَائم، وأفتى العلماء بكفره بالألفاظ وجدُوها فى كُتبه، وشهِدُوا على الجنيد بالكُفر مرارا حين كان يتكلّم فى علم التوحيدعلى رؤوسِ الأشهاد، فصار يُقرِّرُه فى قعر بيتِه إلى أن مات،
இறைஞானி அபூ ஸயீத் அல் கர்ராஸ் அவர்களை விலங்குகளின் முற்களால் அடித்தார்கள். அவரின் நூல்களில் அவர்கள் கண்ட சில சொற்களுக்காக இவ்வாறெல்லாம் செய்தார்கள். இதேபோல் ஸூபீகளின் தலைவர் என்று புகழப்பட்ட ஜுனைத் பக்தாதீ அவர்கள் “தவ்ஹீத்” தொடர்பாக மக்கள் மத்தியில் பகிரங்கமாகப் பேசியதற்காக பலமுறை அவருக்கு “காபிர்” என்று தீர்ப்புக் கூறினார்கள். அதன் பின் அவர் தனது மரணம் வரை தங்களின் வீட்டில் மறைவான இடத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தார்.
وكان من أشدِّ المنكرين عليه وعلى رُويمٍ وعلى سَمنون وعلى ابن عطاءٍ ومشائِخ العراق ابنُ دانيال، كان يحُطُّ عليهم أشدَّ الحطِّ، وكان إذا سمِعَ أحدا يذكرهم تَغَيَّطَ وتغيَّرَ لونُه،
இறைஞானியான ஜுனைத், றுவைம், ஸம்னூன், இப்னு அதா, மற்றும் இறாக் நாட்டு ஞான மேதைகளுக்கு கடுமையான எதிரியாக இப்னு தானியால் என்பவன் இருந்தான். இவன் மேற்கண்ட இறைஞான மேதைகளை கடுமையாக எதிர்த்து அவர்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்தான். பொது மக்களில் யாராவது அவர்களைப் புகழ்ந்து பேசினால் அவர்கள் மீது கோபம் கொள்பவனாகவும் இருந்தான். அவர்களை யாராவது புகழ்ந்து பேசுவதை அவன் செவியேற்றால் அவனின் நிறமே மாறிவிடும். (இவன் போன்ற சிலர் நான் பிறந்த ஊரான காத்தான்குடியிலும் உள்ளார்கள் என்பது இஙகு குறிப்பிடத்தக்கது)
وأخرجوا محمد بن الفضل البَلْخِيْ من بَلْخَ، لكون مذهبِه كان مذهبَ أهل الحديث، من إجرائات آيات الصِّفات وأخبارِها على ظاهرها بلا تأويلٍ، والإِيمان بها على علم الله فيها، ولمّا أرادوا إخراجَه قال لا أخرجُ إلّا إن جعلتُم فى عُنقي حبلا ومررتُمْ بي على أسواق البلد وقلتم هذا مُبْتَدِعٌ، نُريد أن نُخرجَه من بلدنا، ففعلوا ذلك وأخرجُوه، فالتفت إليهم وقال، يا أهلَ بَلْخَ نَزَعَ اللهُ من قلوبكم معرِفَتَه، قال الأشياخ فلم يخرج بعد دعوتِه عليهم تلك مِن بَلخَ صوفيٌّ أبدا مع أنّها كانت أكثر بلاد الله صوفيّة،
“பல்கு” என்ற ஊரில் இருந்து இறைஞானி முஹம்மத் இப்னுல் பழ்ல் என்பவரை வெளியேற்றினார்கள். அவர் “அஹ்லுல் ஹதீத்” போக்குடையவர் என்பதற்காக அவர்கள் அவ்வாறு செய்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் “ஸிபாத்” தன்மை தொடர்பாக அருளப்பட்ட திருமறை வசனங்களுக்கு வலிந்துரை கொள்ளாமல் அவற்றுக்கு நேரடிப் பொருள் கூறுகிறார் என்று குற்றம் சுமத்தினார்கள். அவரை அவ்வூரை விட்டும் வெளியேற்றுவதற்காக திட்டமிட்ட போது அவர் அவர்களை அழைத்து நீங்கள் என்னை வெளியேற்ற முடியாது. ஆயினும் நான் சொல்வது போல் செய்தீர்களாயின் வெளியேற்றலாம். அதாவது எனது கழுத்தில் ஒரு கயிறைக் கட்டி இவ் ஊரின் கடைத் தெருவில் என்னை இழுத்துச் செல்ல வேண்டும். அவ்வேளை இவர் ஒரு “பித்அத்” காரன். ஆகையால் இவரை இவ்வூரை விட்டும் நாங்கள் வெளியேற்றப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னார். அவ்வாறே அவர்களும் செய்து அவரை வெளியேற்றினார்கள். அப்போது அவர் தன்னை இழுத்துச் சென்றவர்களை விழித்து “பல்கு” வாசிகளே! உங்களின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் தனது ஞானத்தை எடுத்துவிடுவானாக என்று சாபமிட்டார். இந்த நிகழ்வின் பின் அவ் ஊரிலிருந்து ஓர் இறைஞானி கூடத் தோன்றவில்லை என்று அவ் ஊரிலுள்ளவர்கள் கூறியுள்ளார்கள்.
وأخرجوا الإمام يوسف بن الحسين الرازي، وقام عليه زُهّادُ الرّيِّ وصُوفيُّها وأخرجوا أبا عُثمان المغربي من مكّة مع كثرة مجاهدتِه وتَمام علمه وحالِه، وضربُوه ضربا مُبرِّحا وطافوا به على جملٍ، فأقام ببغداد إلى أن مات بها،
இறைஞானி அல் இமாம் யூசுப் இப்னுல் ஹுஸைன் அவர்களை “றை” என்ற ஊரிலிருந்து விரட்டினார்கள். “றை” என்ற அவ்வூரிலுள்ள துறவிகளும், அங்கு வாழ்ந்த ஸூபீகளும் அவருக்கு எதிராகச் செயல்பட்டார்கள். இதேபோல் திரு மக்கா நகரில் மிகப் பிரசித்தி பெற்றிருந்த இறைஞானி அபூ உத்மான் அல் மக்ரிபீ அவர்கள் கடுமையான மார்க்கப் பற்றும், இறைஞானமும், ஆன்மிக உயர் நிலை அடைந்தவராயிருந்தும் கூட அவரைக் கடுமையாக அடித்து ஓர் ஒட்டகை மீது அவரை ஊரெல்லாம் சுற்றி அவமானப் படுத்தி பின் அவரை “பக்தாத்” நகருக்கு விரட்டினார்கள். அவர் அங்கேயே வசித்து இறையடியடைந்தார்.
وشهِدُوا على الشِّبلي بالكفر مرارا مع كمال علمه وكَثرةِ مجاهداتِه، وأدخلَهُ أصحابُه البِيمارُسْتَانْ ليرجع النّاس عنه مُدَّةً طويلة،
இறைஞானி அபூ பக்ர் ஷிப்லீ அவர்களுக்கு “முர்தத்” என்று பலமுறை “பத்வா” வழங்கினார்கள். அவர்கள் பெரும் அறிஞராயிருந்தும், “நப்ஸ்” உடன் போராடும் பெரும் மகானாயிருந்தும் கூட அவர்களைக் கேவலப் படுத்தினார்கள். அவர்களின் முரீதுகள் – சிஷ்யர்கள் அவர்களை மருத்துவமனையில் வைத்தார்கள்.
وأخرجوا الإمام أبا بكر النّابلسـي مع فضلِه وكثرةِ علمه واستِقامتِه فى طريقتِه من الغرب إلى مصـر، وشهدوا عليه بالزَّنْدَقَةِ عند سلطان مصر، فأمرَ بسَلخِهِ مَنكوسا، فصار يقرأ القرآن وهم يسلخُونَه بتدبُّرٍ وخُشُوعٍ حتّى قطع قلوب النّاس، وكادوا أن يفتتنوا به،
இறைஞானி அபூ பக்ர் அந்நாபலஸீ அவர்கள் பெரும் அறிஞராக, சிறப்புள்ளவராக, அவர்களின் ஆன்மிக வழியில் செவ்வனே நடந்தவர்களாக இருந்தும் கூட அவர்களை மொறோக்கோ நாட்டிலிருந்து மிஸ்ர் நாட்டுக்கு விரட்டினார்கள். இவர் “சிந்தீக்” காபிர் என்று மிஸ்ர் நாட்டின் அரசனிடம் முறையிட்டார்கள். அந்த அரசன் அவரை தலைகீழாய் தொங்க விட்டு அவரின் தோல் உரிக்கப்பட வேண்டுமென்று கட்டளையிட்டான். அவ்வாறே அவர் உரிக்கப்பட்டார். அவர் உரித்து முடிக்கப்படும் வரை திருக்குர்ஆனை பக்தியுடனும், சிந்தனையோடும் ஓதிக் கொண்டே இருந்தார். அவரின் நிலை அங்கு கூடியிருந்த மக்களின் உள்ளங்களை உருக்கி அவர்களுக்கு “பித்னா” குழப்பத்தை ஏற்படுத்தியது.
(தொடரும்) 3ம் பக்கம் பார்க்க…