Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மனிதர்கள் தமக்குத் தெரியாத ஒன்றின் விரோதிகள்.

மனிதர்கள் தமக்குத் தெரியாத ஒன்றின் விரோதிகள்.

தொடர் 03:
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
وكذلك سَلَخُوا النَّسِيْمِي بِحَلَبَ، وعملوا له حيلة حين كان يقطَعُهُم بالحُجَجِ، وذلك أنّهم كتبوا سورة الإخلاص وأرشَوا مَن يَخِيْطُ النِّعال، وقالوا هذه ورَقَة محبّة وقبول، فضَعْهَا لنا فى أطباق النَّعل، ثمّ أخذوا ذلك النَّعل، وأَهْدَوْه للشّيخ من طريق بعيدة، فلبِسَه وهو لا يشعر، ثمّ طلعُوا لنائب حَلَبَ، وقالوا له بَلَغَنَا من طريق صحيحة أنّ النَّسِيميَّ كَتَبَ قل هو الله أحد وجعلها فى طِباقِ نَعلِه، وإن لمْ تُصدِّقْ فأرسِلْ ورائَهُ وانظُرْ ذلك، ففعل فاسْتَخْرَجُوْا الورقةَ، فسلَّمَ الشّيخُ لله تعالى ولم يُجِبْ عن نفسه، وعلِمَ أنّه لا بُدَّ أن يُقتلَ على تلك الصورة، وأخبرني بعضُ تلامذةِِ تلامِذَتِه أنّه صار يُنشِدُ مُوَشَّحَات فى التّوحيد وهم يَسلخونه حتّى عمِلَ خمسمأة بيتٍ، وكان ينظر إلى الّذي يسلخُه ويتبسَّمُ،
(அவ்வாறே இறைஞானி நஸீமீ என்பவரையும் “ஹலப்” எனும் ஊரில் தோலுரித்துக் கொன்றார்கள். இவரைக் கொல்வதற்கு வேறு வழி எதுவுமின்றி தந்திரமான வழியொன்றை கையாண்டார்கள்.
 
அதாவது திருக்குர்ஆனின் “ஸூறதுல் இக்லாஸ்” அத்தியாயத்தை ஒரு தாளில் எழுதி செருப்பு தைக்கும் செம்மானிடம் அதைக் கொடுத்து அவனுக்கு லஞ்சமும் கொடுத்து, இது ஒருவரை வசப்படுத்துவதற்கான ஒரு பேப்பர் – தாள். இதை நாங்கள் தருகின்ற புதிய செருப்பின் அடிப்பக்கத்தில் வைத்து தைத்துத் தர வேண்டும் என்று சொன்னார்கள். அவன் அவ்வாறே செய்து கொடுத்தான். அதை அவர்கள் இறைஞானி நஸீமீ அவர்களுக்கு தந்திரமான வகையில் அன்பளிப்பாக கொடுத்தார்கள். அவரும் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு காலில் அணிந்து கொண்டார். இதன் பிறகு “ஹலப்” என்ற ஊரின் பிரதித் தலைவரிடம் அவர்கள் வந்து தலைவரே! நமது பிரதேசத்திலுள்ள இறைஞானி “நஸீமீ” என்பவர் திருக்குர்ஆனை அவமதிக்கும் பாணியில் தனது செருப்பின் அடிப்பக்கத்தில் “இக்லாஸ்” அத்தியாயம் எழுதப்பட்ட ஒரு தாளை வைத்து தைத்து அதை அணிந்து நடக்கின்றார். இது ஆதாரமான செய்தியாகும். இதை நீங்கள் நம்பவில்லையானால் ஒருவரை அனுப்பி பரீட்சித்துப் பாருங்கள் என்று கூறினார்கள். அவரும் அவ்வாறே செய்தார். ஆயினும் இறைஞானி நஸீமீ ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌனியாயிருந்தார். நடப்பது நடக்கட்டும். எல்லாம் இறைவன் செயல் என்ற இடத்தில் அசையாமல் இருந்து கொண்டார். இறுதியில் “நஸீமீ” கொலை செய்யப்படுகிறார். அவரின் கொலைச் சம்பவத்தை நேரில் அவதானித்த இறைஞானியின் சிஷ்யர்களின் சிஷ்யர்கள் சிலர் கொலை செய்யப்பட்ட இடத்தில் நடந்த சில நிகழ்வுகளை வெளிப்படுத்திக் கூறினார்கள்)
 
நஸீமீ அவர்கள் கொலைக் களத்திற்குக் கொண்டு வரப்பட்டு அவர் தலைகீழாய்த் தொங்கவிடப்பட்டு அவரின் தோலை உரிக்கத் தொடங்கிய போது அவர் இறைஞானம் பற்றியும், “தவ்ஹீத்” பற்றியும் பாடத் தொடங்கினார். உரித்து முடியும் வரை ஐநூறு (500) பாடல்கள் பாடி முடித்தார். இடையிடையே உரித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து சிரித்துக் கொண்டுமிருந்தார்.
 
وكذلك أخرجوا الشّيخ أبا الحسن الشّاذلي من الغرب إلى مصر، وشهدوا عليه بالزّندقة، وسلّمه الله من كيدهم، ورموا الشّيخ عزَّ الدّين بنَ عبد السّلام بالكُفر وعَقَدوا له مجلسا فى كلمة قالها فى عقيدتِه وحرشوا عليه، ثمّ حصل له اللُّطف، ذكره ابن أيمن فى رسالته،
ورموا الشّيخ تاج الدين السّبكي بالكفر وشهدوا عليه إنّه يقول بإباحة الخمر واللِّواط، وأنّه يَلْبَسُ فى اللّيل الغيار والزُّنَّارَ، وأتوا به مغلولا مقيّدا، من الشّام إلى مصـر، وخرج الشّيخ جمال الدّين الأسنوي فَتَلَقَّاهُ من الطّريق وحكم بِحِقْنِ دمه،
இவ்வாறே ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அபுல் ஹஸன் ஷாதுலீ அவர்களை “மொறோக்கோ”விலிருந்து “மிஸ்ர்” நாட்டுக்கு நாடு கடத்தினார்கள். அத்துடன் அவர்கள் “சிந்தீக்” என்று பலர் சாட்சியும் சொன்னார்கள். எனினும் அவர்களின் சூட்சியிலிருந்து ஷாதுலீ நாயகம் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். இறைஞானிகளில் மிகப் பிரசித்தி பெற்ற ஒருவரான அஷ்ஷெய்கு அபூ மத்யன் மக்ரிபீ அவர்களையும் “சிந்தீக்” என்று அந்த நயவஞ்சகர்கள் சொன்னார்கள். இந்த மா பெரும் மகானை அவர்களின் “பஜாயா” எனும் ஊரிலிருந்து “திலம்ஸான்” என்ற ஊருக்கு கடத்தினார்கள். (இந்த மகான் இப்னு அறபீ நாயகம் உள்ளிட்ட பல குத்புமார்களின் “உஸ்தாத்” ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது) இறைஞானியும் “ஷரீஆ”வின் ஆழ் கடலுமான இமாம் இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் அவர்களுக்கு “காபிர்” என்று தீர்ப்புக் கூறினார்கள். அவர்கள் “அகீதா” கொள்கை தொடர்பான விடயத்தில் கூறிய ஒரு வார்த்தைக்காக ஒரு கூட்டத்தை கூட்டி அந்த நாட்டு அரசனைத் தூண்டிவிட்டார்கள். பின்னர் அவர் மீது அன்பு காட்டப்பட்டது. (இந்த தகவலை இப்னு ஐமன் என்பவர் தனது நூலில் எழுதியுள்ளார்)
 
சட்ட மேதை இமாம் தாஜுத்தீன் அஸ்ஸுப்கீ அவர்களை “முர்தத்” என்று சொன்னார்கள். அவர் மதுபானம் ஆகுமென்று சொல்கிறார் என்றும், தன்னினச் சேர்க்கை ஆகுமென்று சொல்கிறார் என்றும், இரவு நேரத்தில் பிற மதத்தவர்கள் அணியும் பூ நூல் போன்றவற்றை அணிகிறார் என்றும் பொய்ச் சாட்சிகள் கூறினார்கள். அந்த மகானை கை, கால் விலங்கிடப்பட்டவர்களாக “ஷாம்” சிரியாவிலிருந்து “மிஸ்ர்” நாட்டிற்கு கொண்டு வந்தார்கள். இச் செய்தி கேள்விப்பட்ட அஷ்ஷெய்கு ஜமாலுத்தீன் அல் அஸ்னவீ அவர்கள் இடை வழியில் அவர்களைச் சந்தித்து அவர்கள் கொலை செய்யப்படாமல் பாதுகாத்தார்கள்.
 
இதுவரை اَلنَّاسُ أَعْدَاءُ مَا جَهِلُوْا “மனிதர்கள் தமக்கு தெரியாதவற்றின் எதிரிகள்” என்ற தலைப்பில் தொடர் ஒன்றிலிருந்து தொடர் 03 வரை நான் எழுதியுள்ள விடயங்கள் யாவும் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்களின் “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” எனும் நூல் முதலாம் பாகம் 12ம் பக்கத்திலிருந்து 14ம் பக்கம் வரை எடுக்கப்பட்ட தகவல்களாகும்.
 
இறைஞானிகளினதும், ஸூபிஸ தத்துவத்தின் எதிரிகளுமான போலி உலமாஉகளும், பொறாமையுள்ள உலமாஉகளும் அவர்களுக்குச் செய்த கொடுமைகள், மற்றும் அநீதிகளை விபரமாக எழுதிய இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃறானீ அவர்கள் இறுதியாக எழுதியுள்ள வசனங்களை ஆய்வாளர்களின் கவனத்திற்காக இங்கு தருகிறேன்.
 
وإنّما ذكرنا لك يا أخي مِحَنَ هذه الأمة من المُتقدِّمين والمتأخّرين تأنيسا لك، لتُقبِلَ على مطالعة كُتُبِ الصوفية، لا سيّما الشّيخ محي الدين، لأنّ هؤلاء الأئمّة ثنائهم عندنا كالمسك الأذفر، فكما لا يقدح فى كمالهم ما قِيل فيهم، كذلك لا يقدح ما قيل فى كمال الشّيخ محي الدين، والله سبحانه وتعالى أعلم،
இறுதியாக “யவாகீத்” நுலாசிரியர் அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள்.
முன்னோர், பின்னோர்களில் மேலே எழுதப்பட்ட நபீமார், நபீ தோழர்கள், மத்ஹபுடைய நான்கு இமாம்கள், மற்றும் இறைஞான மேதைகள் ஆகியோருக்கு எதிரிகளால் நடந்த சோதனைகளையும், வேதனைகளையும் நான் எழுதிக் காட்டியதற்கான காரணம் நீங்கள் ஸூபீ மகான்களின் நூல்களைப் பார்க்க வேண்டும் என்றும், குறிப்பாக இப்னு அறபீ அவர்களின் நூலைப் பார்க்க வேண்டும் என்பதற்குமேயாகும். மேற்கண்ட மகான்கள் தொடர்பாக அவர்கள் பற்றி எதிரிகளால் கூறப்பட்ட குற்றச் சாட்டுக்கள் எதுவும் எக்குறையையும் அவர்கள் விடயத்தில் ஏற்படுத்தாதிருப்பது போல் அவர்கள் இப்னு அறபீ விடயத்தில் கூறிய குற்றச் சாட்டுக்கள் ஒன்றும் அவர்களுக்கு எந்த ஒரு குறையையும் ஏற்படுத்தாது.
அல்யவாகீத் வல் ஜவாஹிர்,
பாகம் 01, பக்கம்: 12, 13, 14.
 
அன்புள்ள முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
“மனிதர்கள் தமக்குத் தெரியாதவற்றின் எதிரிகள்” என்ற தலைப்பில் நபீமார்கள் எழு பேர்களுக்கும், நபீ தோழர்களில் ஐந்து பேர்களுக்கும், இமாம்களில் இருபத்தைந்து பேர்களுக்கும் – மொத்தம் 37 பேர்களுக்கும் அநீதி செய்தவர்களும், அவர்களைத் துன்புறுத்தியவர்களும், நாடு கடத்தியவர்களும், இங்கு கூறப்படாத பல இறைஞானிகளைக் கொலை செய்தவர்களும் யஹூதிகளும், நஸாறாக்களும் என்று உங்களில் யாரும் நினைத்துவிடாதீர்கள். அவர்கள் ஓதிப்படித்த, உலமாஉகள் என்று பிரசித்தி பெற்றவர்களேயாவர்.
 
மேலே குறிப்பிட்ட நல்லடியார்கள் ஏன் மற்றவர்களால் எதிர்க்கப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் என்பதற்கான காரணம் என்ன?
அவர்கள் தொழாமல் இருந்தார்களா? இல்லை. தொழ வேண்டாமென்று பிறரைத் தடுத்தார்களா? இல்லை. மார்க்க கடமைகள் எதுவும் செய்யக் கூடாதென்று சொன்னார்களா? இல்லை. பொய் சொல்லலாம், புறம் சொல்லலாம், குடிக்கலாம், விபச்சாரம் செய்யலாம் என்று சொன்னார்களா? இல்லை. அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று சொன்னார்களா? இல்லை. இவற்றில் எதற்காகவும் அவர்கள் துன்புறுத்தப்படவில்லை.
 
எதற்காக மகான்கள் துன்புறுத்தப்பட்டார்கள்?
“எல்லாம் அவனே” என்று சொன்னதற்காகவே துன்புறுத்தப்பட்டார்கள். அவ்வாறாயின் இவ்வாறு சொல்வது பிழையா? இல்லை. ஆனால் இவ்வாறு சொல்வது பிழையென்று அவர்கள் விளங்கிக் கொண்டார்கள். அல்லது இறைஞான மகான்கள் மீது பொறாமை கொண்டதால் அவ்வாறு நடவடிக்கை எடுத்தார்கள். இதனால்தான் தலைப்பில் اَلنَّاسُ أَعْدَاءُ مَا جَهِلُوْا “மனிதர்கள் தமக்குத் தெரியாதவற்றின் எதிரிகள்” என்று எழுதினேன்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments