Saturday, May 4, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மனிதர்கள் தமக்குத் தெரியாத ஒன்றின் விரோதிகள்.

மனிதர்கள் தமக்குத் தெரியாத ஒன்றின் விரோதிகள்.

தொடர் 01:
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
اَلنَّاسُ أَعْدَاءُ مَا جَهِلُوْا
 
قال الجلال السُّيُوطي رحمه الله، واعلم أنّه ما كان كبيرٌ فى عَصرٍ قطُّ، إلّا كان له عدوٌّ من السَّفَلَة، إذ الأشرافُ لم تزَلْ تُبتَلَى بالأطراف،
இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
(எந்த ஒரு காலமாயினும் அக்காலத்தில் ஓர் அறிஞன் இருந்தாராயின் அவருக்கு கீழ்த்தரமானவர்களில் ஒருவன் எதிரியாக இருப்பான்) என்று. இது அன்று ஸூயூதீ சொன்னது. ஆனால் அது இன்று நடைமுறையில் உள்ளது. இந்நிலையை முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கியவர்கள் வஹ்ஹாபீகளேயாவர்.

வஹ்ஹாபிஸம் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுமுன் பொது மக்கள் உலமாஉகளுக்கு மரியாதை, கண்ணியம் செய்து கொண்டே இருந்தார்கள். அந்த முஸீபத் வந்த பிறகு உலமாஉகளுக்கு கௌரவம், கண்ணியம் என்பவை இல்லாமலேயே போய்விட்டன. இன்று சபைகளில் உலமாஉகள் சிறுவர்கள் விளையாடும் காற்பந்து போலாகிவிட்டார்கள்.
كان لآدم عليه السّلام إبليسُ،
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இப்லீஸ் எதிரியாக இருந்தான்.
وكان لنوح حامٌ وغيرُه،
நபீ நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “ஹாம்” என்பவனும், இன்னும் பலரும் எதிரிகளாக இருந்தார்கள்.
وكان لداؤود جالوتُ وأضرابُه
நபீ தாஊத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “ஜாலூத்” எதிரியாக இருந்தான்.
وكان لسُليمان عليه السلام صَخَرُ
நபீ சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “ஸகர்” என்பவன் எதிரியாக இருந்தான்.
وكان لعيسى عليه السلام فى حياتِه الأولى بُختُنَصْرْ وفى الثانية الدّجّالُ،
நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அவர்களின் முதல் வாழ்வில் “புக்து நஸ்ர்” என்பவன் விரோதியாயிருந்தான். அவர்களின் இரண்டாவது வாழ்வில் “தஜ்ஜால்” எதிரியாக இருப்பான்.
وكان لإبراهيم عليه السّلام النُّمرُودُ،
நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “நும்றூத்” என்பவன் எதிரியாயிருந்தான்.
وكان لموسى عليه السّلام فِرعونُ
நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிர்அவ்ன் எதிரியாயிருந்தான்.
وهكذا إلى نبيّنا محمدٍ صلّى الله عليه وسلّم وكان له أبو جهل،
இவ்வாறே நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரை தோன்றிய நபீமார் அனைவருக்கும் எதிரிகள் இருந்தே வந்துள்ளார்கள். நபீ பெருமானார் அவர்களுக்கு அபூ ஜஹ்ல் எதிரியாக இருந்தான்.
وكان لابن عُمر عدوٌّ يَعْبَثُ به كلّما مرّ عليه،
நபீ தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களுக்கு ஒரு எதிரி இருந்தான். அவர்களைக் காணும் போதெல்லாம் அவர்களை நையாண்டி பண்ணுவான்.
 
ونسبُوا عبدَ الله بن الزُّبير إلى الرّياء والنّفاق فى صلاتِه، فصبُّوا على رأسِه ماءًا حميما فزلعَ وجهُه ورأسُه وهو لا يشعُرُ، فلمّا سلّم من صلاتِه فقال ما شأنِيْ؟ فذكروا له القِصَّةَ، فقال حسبُنا الله ونعم الوكيل، ومَكَثَ زمانا يتئلَّمُ من رأسِه ووجهه،
நபீ தோழர் அப்துல்லாஹ் இப்னுஸ் ஸுபைர் அவர்கள் தொழுகையில் முகத்துதியும், “நிபாக்” நயவஞ்சகமும் உள்ளவர் என்று குறை சொன்னார்கள். ஒரு சமயம் அவர்கள் தொழுது கொண்டிருந்த நேரம் அவர்களின் தலையிலும், முகத்திலும் கொதிக்கும் நீரை ஊற்றினார்கள். அவர்கள் அறியாமலேயே அவர்களின் தலையும், முகமும் உரிந்து போயிற்று. அவர்கள் தொழுது முடித்தபின் எனக்கு என்ன நடந்தது என்று கேட்டார்கள். இருந்தவர்கள் நடந்ததைச் சொன்ன போது حسبنا الله ونعم الوكيل அல்லாஹ் போதுமானவன் என்று அவர்கள் கூறினார்கள். சில நாட்கள் உயிருடன் வாழ்ந்து பின்னர் மரணித்து விட்டார்கள்.
 
وكان لابن عبّاس رضي الله عنهما نافِعُ بنُ الأزرق، كان يؤذيه أشدّ الأذى، ويقول إنّه يفسِّرُ القرآن بغير عِلمٍ،
நபீ தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்களுக்கு “நாபிஉ இப்னு அஸ்றக்” என்பவன் எதிரியாக இருந்தான். அவன் அவர்களுக்கு கடும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான். அவர் அறிவில்லாமல் திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்கிறார் என்றும் கேலி செய்து கொண்டிருந்தான்.
 
وكان لسعد بن أبي وقّاص جَهَلَةٌ مِن جُهّالِ الكُوفة، يُؤذُونَه مع أنّه مشهودٌ له بالجنّة، وشَكَوْهُ إلى عمر بن الخطّاب، وقالوا إنّه لا يُحسن أن يصلّي،
நபீ தோழர் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் அவர்களுக்கு “கூபா” வாசிகளில் சில மடையர்கள் எதிரிகளாக இருந்தனர். அவர்கள் நபீ பெருமானார் அவர்களால் சுவர்க்கத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்டவராக இருந்தும் கூட அவருக்கு கடுமையான தொல்லை கொடுத்து வந்தார்கள். கலீபா உமர் இப்னுல் கத்தாப் அவர்களிடம் அவருக்கு தொழத் தெரியாதென்றும் முறையிட்டார்கள்.
இதுவரை நபீமாரின் எதிரிகள் பற்றியும், அவர்கள் நபீமாருக்குச் செய்த அநீதிகள், தொல்லைகள் பற்றியும், நபீ தோழர்களான ஸஹாபாக்களின் எதிரிகள் பற்றியும், அவ் எதிரிகள் நபீ தோழர்களுக்கு செய்த அநீதிகள் பற்றியும் எழுதினேன்.
 
இப்போது இமாம்களின் எதிரிகள் பற்றியும், அவர்கள் இமாம்களுக்குச் செய்த அநீதிகள், தொல்லைகள் பற்றியும் எழுதுகிறோம்.
وأمّا الأئمّة المجتهدون فلا يخفى ما قاسَاه الإمام أبو حنيفةَ مع الخلفاء، وما قاساه الإمامُ مالكٌ واستِخفائُه خمسا وعشـرين سنةً لا يخرج لجُمُعةٍ ولا جماعة،
இமாம்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்களையும் சற்று அறிந்து கொள்வோம். இமாம் அபூ ஹனீபா அவர்கள் கலீபாஉகளால் அனுபவித்த கஷ்ட நஷ்டங்களோ அதிகம். இமாம் மாலிக் அவர்கள் எதிரிகளின் தொல்லை தாங்க முடியாமல் இருபத்தைந்து வருடங்கள் ஜும்ஆவுக்குச் செல்லாமலும், ஜமாஅத்திற்குச் செல்லாமலும் மறைந்திருந்தார்கள்.
 
وكذلك ما قاساه الإمام الشافعي من أهل العراق ومِن أهل مصر، وكذلك لا يخفى ما قاساه الإمام أحمد بن حنبل من الضّرب والحبس،
இவ்வாறுதான் இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இறாக் வாசிகளாலும், மிஸ்ர் வாசிகளாலும் அனுபவித்த துன்பங்களும், கஷ்டங்களுமாகும். இவ்வாறுதான் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள் அனுபவித்த கஷ்டங்களுமாகும். இவர்கள் அடிக்கப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டார்கள்.
 
وما قاساهُ البُخاري حِين أخرجوه مِن بُخارى إلى خَرْتَنْكَ،
இவ்வாறுதான் இமாம் புகாரீ அவர்களை புகாறாவிலிருந்து எதிரிகள் “கர்கந்த்” என்ற இடத்திற்கு அனுப்பிய வேளை அவர்கள் அனுபவித்த கஷ்டங்களும், துன்பங்களுமாகும்.
وقد نقل الثِّقاتُ، منهم الشّيخ أبو عبد الرحمن السُّلمي وأحمد بن خَلْكَان والشّيخ عبد الغفّار القَوسِي وغيرُهم، أنّهم نَفَوْا أبا يزيدَ البِسطامي سبعَ مرّاتٍ من بِسطام بواسطة جماعةٍ من علمائها،
அஷ்ஷெய்கு அபூ அப்திர் றஹ்மான் அஸ்ஸுலமீ, அஷ்ஷெய்கு அஹ்மத் இப்னு கல்கான், அஷ்ஷெய்கு அப்துல் ஙப்பார் அல்கவ்ஸீ போன்ற நம்பத் தகுந்தவர்களின் அறிவிப்பின் படி “பிஸ்தாம்” நகர் வாசிகள் அபூ யஸீத் பிஸ்தாமீ அவர்களை “பிஸ்தாம்” நகர உலமாஉகள் மூலம் ஏழு முறை “பிஸ்தாம்” நகரிலிருந்து நாடு கடத்தினார்கள்.
 
இன்னும் துன்னூன் அல் மிஸ்ரி எனும் இறை ஞான மகானை மிஸ்ர் நாட்டிலிருந்து பக்தாத் நகருக்கு கை, கால்களில் விலங்கிடப்பட்டவர்களாக அனுப்பி வைத்தார்கள். அவர்களுடன் மிஸ்ர் நாட்டவர்களும் அவர்களை “சிந்தீக்” என்று சாட்சி சொன்னவர்களாக அவர்களுடன் பயணித்தார்கள்.
وَرَمَوْا سمنونَ المُحِبَّ أحدَ رجالِ القشيري بالعَظَائِمِ وأرْشَوا إمرأةً مِن البَغايا فادَّعَتْ عليه أنّه يأتيها هو أوصحابُه، واختفى بسبب ذلك سنةً،
இமாம் குஷைரீ அவர்களின் முரீதுகளில் ஒருவரான ஸம்னூன் முஹிப்பு என்ற இறைஞானியை மிருகங்களின் முட்களால் அடித்து துன்புறுத்தியதுடன் விபச்சாரப் பெண் ஒருத்திக்கு லஞ்சம் கொடுத்து இறைஞானி ஸம்னூன் தன்னிடம் வந்து போவதாக சொல்ல வைத்து ஒரு புரளியை ஏற்படுத்தினார்கள். இதன் காரணமாக ஞானி ஸம்னூன் அவர்கள் ஒரு வருடம் தலைமறைவானார்கள்.
 
(தொடரும்) 2ம் பக்கம் பார்க்க…
 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments