Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சிந்தீக் என்றால் யார்?

சிந்தீக் என்றால் யார்?

مَنْ هُوَ الزِّنْدِيْقُ ؟
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
 
قال شيخ الإسلام المخزومي، وأمّا ما نَقلَه بعضُهم عن الشيخ عِزِّ الدين بن عبد السلام أنّه كان يقول ابنُ عربي زِنْدِيْقٌ فَكَذِبٌ وزُورٌ،
فقد رَوينا عن الشيخ صلاح
الدّين القَلَانِسِيْ صاحبِ ‘ الفوائد ‘ عن جماعة من مَشائِخِهِ عن خادم الشيخ عزّ الدين بن عبد السلام قال كنَّا في درس الشيخ عِزِّ الدّين في باب الرِّدَّةِ، فذَكَرَ القارِي لفظةَ الزِّنْدِيق فقال بعضهم ، هذه اللفظةُ عربيَّةٌ أو عَجَميَّة ؟
فقال بعض العلماء ، فارسيّة مُعرّبةٌ ، أصلها ”زِنْ دِيْنْ” وهو الذي يُضْمِرُ الْكُفْرَ ويُظْهِر الإيمانَ ، فقال شخصٌ من الطّلبة مِثْلَ مَنْ ؟ فقال شخصٌ بجانبِ الشيخ عِزِّ الدين بن عبد السلام مثلُ محي الّدين ابن عربي، ولم يَنْطِقِ الشيخ عزّ الدين بشيء،
قال الخادم فلمّا قَدَّمتُ له عَشَائَه وكان صائما سألتُه عن القطب من هو ؟ فقال لا أرى القطبَ في زماننا هذا إلّا الشيخ محي الدّين ابن عربي وهو مُتَبَسِّمٌ، فأطرقتُ مَلِيّا مُتَحيّرا فقال مَالَكَ؟ ذلك مجلسُ الفُقهاء، ما وَسِعَني فيه غَيْرُ السُّكوت .
قال المخزومي فهذا هو الذي رَوَيناه عن الشيخ عزّ الدين بالسند الصحيح.
)اليواقيت ، ج أول – ص – 10 للشعراني رحمه الله)

“சிந்தீக்” – “சிந்தீக்” – என்றால் யார்? இப்னு அறபீ சிந்தீகா?
 
ஷெய்குல் இஸ்லாம் அல் மக்சூமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்.
 
அல் இமாம் இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் றஹிமஹுல்லாஹ் அவர்கள், இப்னு அறபீ நாயகம் அவர்களை “சிந்தீக்” என்று சொன்னதாக சிலர் கூறுவது முற்றிலும் பொய்யும், பாவமுமாகும்.
 
“அல்பவாயித்” என்ற நூலின் ஆசிரியர் அஷ்ஷெய்கு ஸலாஹுத்தீன் அல் கலானிஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “மஷாயிகு” மார்களில் ஒரு கூட்டம் அஷ்ஷெய்கு இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “காதிம்” பணியாள் சொன்னதாக அறிவிக்கின்றார்கள். “காதிம்” சொன்ன தகவல் இதோ,
 
(நாங்கள் அஷ்ஷெய்கு இஸ்ஸுத்தீன் அவர்களிடம் باب الرِّدَّةِ – மதம் மாறுதல் தொடர்பான பாடம் ஓதிக் கொண்டிருந்தோம். மாணவர்களில் ஒருவர் “கிதாப்” நூலை வாசித்தார். அந்தப் பாடத்தில் “சிந்தீக்” என்று ஒரு சொல் வந்தது. அப்போது இச்சொல் அறபு மொழியைச் சேர்ந்ததா அல்லது பிற மொழியைச் சேர்ந்ததா என்ற வாதம் ஏற்பட்டது.
 
வகுப்பில் இருந்த சிலர் இச்சொல் பார்ஸீ – பாரசீக மொழியைச் சேர்ந்த தென்றும், பின்னர் அது அறபு மொழிக்கு மாற்றப்பட்டதென்றும், இச்சொல் “சன்தீன்” என்ற அடிப்படைச் சொல்லில் இருந்து வந்ததென்றம் பேசிக் கொண்டார்கள்.
 
“சிந்தீக்” என்றால் “குப்ர்” என்ற நிராகரிப்பை மனதில் வைத்துக் கொண்டு “ஈமான்” என்ற விசுவாசத்தை வெளியில் காட்டி நடிப்பவன் என்றும் பேசிக் கொண்டார்கள்.
 
அப்போது மாணவர்களில் ஒருவர், அப்படியொருவர் இருந்தால் அவர் யாராயிருக்கலாம் என்று வினவினார். அதற்கு ஷெய்கு இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் அவர்களுக்கு பக்கத்தில் இருந்த ஒருவர் அந்த “சிந்தீக்” இப்னு அறபீயாக இருக்கலாம் என்று கூறினார். ஆயினும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ஷெய்கு இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் இது தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதோடு சபை கலைந்து விட்டது என்று கூறிய ஷெய்கு அவர்களின் “காதிம்” பணியாள் பின்வருமாறு சொல்கிறார்.
 
அன்று ஷெய்கு அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அவர்களுக்கு இராச்சாப்பாடு ஒழுங்கு செய்து கொடுத்து விட்டு ஷெய்கு அவர்களே இக்காலத்தை பொறுத்த மட்டில் “குத்புஸ்ஸமான்” காலத்தின் “குத்பு” என்று யாரைச் சொல்லலாம் என்று கேட்டேன்.
அதற்கு ஷெய்கு அவர்கள்
لا ارى القطب فى زماننا هذا الا الشيخ محي الدين ابن عربي وهو متبسم،
இக்காலத்தைப் பொறுத்த வரை அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்று சிரித்துக் கொண்டே கூறினார்கள். அப்போது நான் சிறிது நேரம் மௌனியாக தலை குனிந்திருந்தேன். ஷெய்கு அவர்கள் என்னை நோக்கி ஏன் யோசிக்கின்றீர். அது “புகஹாஉ” எனும் சட்ட மேதைகளின் சபையாக இருந்ததால் மௌனம் சாதிப்பதைத் தவிர வேறு ஒன்றும் பேச முடியாமற் போய் விட்டது என்று கூறினார்கள்.
 
இமாம் மக்சூமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், இதுவே அஷ்ஷெய்கு இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் அவர்கள் மூலம் கிடைத்த சரியான தகவல் என்று கூறினார்கள்.
ஆதாரம் – அல்யவாகீத்
பாகம் 01
பக்கம் – 10
ஆசிரியர் – இமாம் ஷஃறானீ
 
இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் இஸ்லாமிய அறிவுலக மேதைகள் மத்தியில் மிகப் பிரசித்தி பெற்ற ஓர் இமாம் ஆவார்கள். அவர்களின் வரலாறு மிக நீண்டது. எழுதுவதாயின் தொடராக எழுதவேண்டும். இந்தப் பதிவோடு மட்டும் நிறுத்திக் கொள்ள முடியாது இன்ஷா அல்லாஹ் அவர்கள் பற்றிப் பின்னால் எழுதுவோம்.
 
இவர்களின் சபையில்தான் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சிந்தீகா இல்லையா என்ற விடயம் பேசப்பட்டது. ஷெய்கு இப்னு அப்திஸ்லாம் அவர்கள் விடயம் விளங்கியவர்களாக இருந்தும் கூட அந்தச் சபையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனியாயிருந்ததும், மறுநாள் இரவு நோன்பு திறந்து சாப்பிடும் போது காதிம் – பணியாள் கேட்ட கேள்விக்கு இப்னு அறபீ அவர்கள்தான் இக்காலத்திற் குரிய “குத்முஸ்ஸமான்” என்று பதில் கூறியதும், அன்று பாடத்தில் மௌனியாக இருந்து விட்டு தாங்கள் மௌனியாக இருந்ததற்கு ذَلِكَ مَجْلِسُ الْفُقَهَاءِ அது சட்ட மேதைகளின் சபை என்று காரணம் சொன்னதும் என்னைப் பொறுத்த வரை சிந்திக்க வேண்டிய, ஆய்வுக்கு எடுக்க வேண்டிய ஒன்றேயாகும் . எனினும் ஷெய்கு இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் அவர்களின் செருப்பில் ஒட்டிக் கொண்டிருந்த தூசிக்கும் பெறுமதியற்ற நான் அவர்களை பிழை காணவில்லை அக்காலத்தில் அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலை எவ்வாறு இருந்ததோ புரியவில்லை, அல்லாஹ் மிக அறிந்தவன்.
 
ஷெய்கு அவர்கள் அவ்வாறு மௌனியாக இருந்ததும் மறுநாள் தங்களின் பணியாளிடம் இப்னு அறபி அவர்கள் தான் இக்காலத்தில் “குத்பு” என்று சொன்னதும் பாராட்ட வேண்டிய விடயமேயாகும்.
 
காத்தான்குடியை அடுத்து ஒல்லிக் குளம் என்று ஒரு சிறிய கிராமம் உண்டு அங்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த உமர் ஆலிம் என்ற பெயருடைய ஒரு நல்ல மனிதர் இருந்தார் அவர் OM பாஸீ ஆலிம் அவர்களின் தந்தையாக இருக்கலாம்.
 
இவர் 1979 ஆம் ஆண்டு பாதையில் என்னை கண்டு நான் மேலே எழுதிக் காட்டிய இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் அவர்களின் வரலாறை என்னிடம் சொல்லிக் காட்டி இறை ஞானம் பேசுகிறீர்கள் பேசுங்கள் ஆயினும் மிக ஆழமான கருத்துக்களை பொதுமக்கள் மத்தியில் பேசுவதால் விடயம் புரியாதவர்கள் உங்களைப் பற்றி தவறான அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் கூறக் கூடும் என்று சொன்னார்கள் அதன்பின் அவர் மரணித்து விட்டார்கள். غفر الله ذنوبه ورحمه رحمة واسعة
 
நான் “வஹ்ததுல் வுஜுத்” ஞானம் தெளிவாகப் பேசத் தொடங்கியது 1979ம் ஆண்டுதான். அதற்கு முன் நான் தெளிவாகவும், பகிரங்கமாகவும் பேசவில்லை. எனினும் என்னை பகிரங்கமாகவும், தெளிவாகவும் பேசவைத்தது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், எனது கருத்தை சரிகண்ட மக்களுக்கும் வழங்கிய “முர்தத்” என்ற கண்மூடித்தனமான “பத்வா”வேயாகும்.
 
திருடாத ஒருவனை ஒரு கூட்டம் திருடன் என்று பிரகடனம் செய்தால் அவன் தான் திருடனில்லை என்பதை நிறுவ வேண்டியது அவனின் கடமையாகும். என்னை அவ்வாறு பேச வைத்தது உலமா சபைதான். ஆகையால் முதலில் “முர்தத்” பத்வா அவர்களுக்கே வழங்க வேண்டும். அந்த “பத்வா” இன்னும் சில மாதங்களில் 1500 பக்கங்களுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டதாக “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற பெயரில் வெளியாக உள்ளது. எதிர்பாருங்கள். இன்ஷா அல்லாஹ்!
RELATED ARTICLES

Most Popular

Recent Comments