அல் ஆரிப்பில்லாஹ், ஆன்மீக வழிகாட்டி, சங்கைக்குரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை அல்ஹாஜ் AJ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் தமது 74வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2018 திங்கட்கிழமை அன்று அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்களினால் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிஹாம் குழுவினரால் வாழ்த்துப்பாடல் மஜ்லிஸும், லஜ்னதுல் காதிரிய்யஹ் சபையின் சார்பில் அஷ்ஷெய்யித் P.P.S.S புகாரி நல்ல கோயா தங்கள் அவர்களின் வாழ்த்துச் செய்தியும், அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அவர்களின் வாழ்த்துச் செய்தியும், காதிரிய்யஹ் திருச்சபையின் செயலாளர் அவர்களினால் நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டது. இறுதியாக ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் சரீர சுகத்துடனும், நீடிய ஆயுளுடனும் நலமாக வாழ மௌலவீ முஸாதிக் அஸ்ஹரீ அவர்களினால் துஆப் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டு, இந்நிகழ்வுக்காக வருகை தந்திருந்த சுமார் 3000த்திற்கும் அதிகமான மக்களுக்கு சோறும்,கறியும் வழங்கப்பட்டு, இனிதே ஸலாவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.