சூழ்தல் தரும் தத்துவம்
– மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) – அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான் الآ إنّهم في مرية من لقاء ربّهم ألآإنه بكل شيئ محيط.( فصلت 54) அவர்களின் இரட்சகனை சந்திப்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.அவன் எல்லா வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான். (புஸ்ஸிலத் : 54) இத்திருவசனத்தில் “அவர்களின் இரட்சகனை சந்திப்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர்” என முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “அவன் எல்லா வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான்”.என்று இரண்டாம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்கும்
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 07 ஒவ்வொரு வருடமும் புனித றமழான் மாதம் 27ம் இரவு மக்களின் பார்வைக்காக அந்தத் திருமுடி வெளியில் வைக்கப்பட்டு அதை ஓர் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தறாவீஹ் தொழுகையின் பின் மக்கள் அந்தத் திருமுடியை தரிசனம் செய்வார்கள். அந்நேரம் காரீகள் அல்குர்ஆனை ஓதுவார்கள். பின்னர் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் கூற ஆரம்பிப்பார்கள்.
Read Moreநபீகளார் தேடிய வஸீலா
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: لَمَّا مَاتَتْ فَاطِمَةُ بِنْتُ أَسَدِ بْنِ هَاشِمٍ أُمُّ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، دَخَلَ عَلَيْهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:… قَالَ: «اللهُ الَّذِي يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، اغْفِرْ لِأُمِّي فَاطِمَةَ بِنْتِ أَسَدٍ، ولَقِّنْهَا حُجَّتَها، وَوَسِّعْ عَلَيْهَا مُدْخَلَهَا، بِحَقِّ نَبِيِّكَ وَالْأَنْبِيَاءِ الَّذِينَ مِنْ قَبْلِي فَإِنَّكَ أَرْحَمُ الرَّاحِمِينَ» (المعجم الكبير
Read Moreஉள்ளமை ஒன்று
– மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) – வஹ்த்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று அல்லாஹ் மாத்திமே இருக்கின்றான். படைப்புகள் என்பது சுயமான உள்ளமை அற்றது என்பதை மறுப்பவர்கள் இதை சிந்தித்துப்பாருங்கள். அல்லாஹ் தஆலாவின் தன்மைகள், திருநாமங்கள் அனைத்தும் பூர்வீகமானவை. புதிதாக உருவானவை அல்ல. அவனது தன்மைகளும் திருநாமங்களும் மாற்றமடைவதில்லை.. அவன் படைப்புகளை படைப்பதற்கு முன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே படைப்புகளை படைத்த பின்னரும் எந்த மாற்றமுமின்றி இருக்கின்றான். என்பதுதான் சரியான நம்பிக்கை. அவ்வாறாயின் அல்குர்ஆனில் அல்லாஹ் தஆலா பின்வருமாறு கூறுகின்றான். {وَهُوَ مَعَكُمْ
Read Moreமுகம் நேரே புகழ்தல் எப்படி?
மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ ஒரு மனிதரை இன்னொரு மனிதர் அவர் இல்லாத நேரத்தில் புகழ்ந்து கூறுவது அனுமதிக்கப்பட்டிருப்பது போல் அவருடைய முகத்திற்கு நேரே புகழ்ந்து கூறுவதும் ஆகுமாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இதற்கு இரண்டு நிபந்தனைகள் இடப்படுகின்றன. ஒன்று – புகழ்பவர் புகழப்படுபவரிடம் இருந்து தன்லாபத்தை எதிர் பார்த்து புகழக் கூடாது. இரண்டு – புகழ்பவர் புகழும் காரணத்தினால் புகழப்படுபவருக்கு அல்லாஹ்வை மறந்த தன்மைகளோ, தலைக்கனமோ, பெருமையோ அல்லது இது போன்ற இகழப்பட்ட குணங்களோ, எண்ணங்களோ ஏற்பட்டு
Read Moreஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ காபிரா?
الفكرة المصباحية فى بيان الحكم الغزالية ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ காபிரா? தொகுப்பு : மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ نَوِّرْ إِلهَ السَّمَا قَلْبَ الْغَرِيْبِ كَمَا نَوَّرْتَ قَلْبَ إِمَامِ النَّاسِ غَزَّالِيْ يَارَبِّ أَعْطِ لَـنَا عِلْـمًا وَفَـهْمًا كَمَا اَعْـطَيْتَ يَارَبَّـنَا لِلـشَّيْخِ غَـزَّالِيْ மனிதர்களின் இமாம் கஸ்ஸாலீ அவர்களின் உள்ளத்தை ஒளிபெறச் செய்தது போல் இவ்வேழைகளின் உள்ளத்தையும் ஒளிபெறச் செய்வாயாக! அஷ்ஷெய்கு கஸ்ஸாலீ அவர்களுக்கு
Read More38வது வருட அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரியின் தொகுப்பு
அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் (பெரிய ஆலிம்) வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 38வது வருட அருள் மிகு மாகந்தூரி 02.08.2015 ஞாயிற்றுக் கிழமை பி.ப 05.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக அன்னார் பேரிலான திருக்கொடியேற்ற நிகழ்வு பெரும் திரளான மக்கள் ஒன்று கூடலுடன் முறாதிய்யஹ் முழக்கத்துடன் ஏற்றி வைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து மஜ்லிஸ் மண்டபத்தில் கத்முல் குர்ஆன் நிகழ்வு நடைபெற்று
Read Moreநன்றி செலுத்துவோம்
من لم يشكر الله النّاس لم يشكرالله மனிதனுக்கு நன்றியுள்ளவனாக இருக்காதவன் (மனிதனுக்கு நன்றி சொல்லாதவனும், செய்யாதவனும்) அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவனாக இருக்க மாட்டான். (அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னவனாகவும், செய்தவனாகவும் ஆகான்) “அல்லாஹ்” மனிதனுக்கு செய்கின்ற அருள்கள், உதவி உபகாரங்களுக்கு அவனுக்கு மனிதன் நன்றியுள்ளவனாக இருப்பது அவனின் தலையாய கடமையாகும். “ஷாகிர்” நன்றியுள்ளவனாயிருப்பதை விட “ஷகூர்” அதிகம் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும். நன்றியுள்ளவனாக இருப்பதென்றால் இறைவா! உனக்கு எனது நன்றிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பதை மட்டும் குறிக்காது.
Read Moreமனம் நிறைந்த மணமான பெருநாள் வாழ்த்துக்கள்
கண்ணியத்திற்குரிய ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளே! தஸவ்வுப் ஸூபிஸ வழியில் வாழும் சங்கைக்குரிய உஸ்தாத்மார்களே! அன்பிற்குரிய முரிதீன்களே! சகோதர சகோதரிகளே! இன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களைக் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் எல்லாம் வளங்களும் பெற்று நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ எல்லாமாயும் வெளியாகிக் காட்சி தரும் வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்துகிறேன். காதிமுல் கவ்மி +++++++++++++++++ التهاني المعطّرة أيّها العلماء السنّيون !
Read Moreமகிழ்ச்சி தரும் பெருநாட்கள்
உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் வருடத்தில் இரு “பெருநாள்” கொண்டாடுகின்றார்கள். இவ்விரு பெருநாட்களும் இஸ்லாத்தில் மார்க்கமாக்கப்பட்டவையாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் முக்கிய அம்சங்களில் மூன்றாவதான “நோன்பு” எனும் கடமையை அல்லாஹ்வுக்காக நோற்று, தன் மனவெழுச்சியை அவனுக்காக அடக்கிப் பசித்திருந்து, தாகித்திருந்து, சிறிய, பெரிய பாவங்களை விட்டும் தவிர்ந்து, பகலில் நோன்பிருந்து, இரவில் நின்று வணங்கி , றஹ்மத், மஃபிறத், இத்கும் மினன்னார் போன்றவற்றை ஆதரவு தேடி அல்லாஹ்விடம் “துஆ” பிரார்த்தனை செய்து இறுதியில் மனம் மகிழ பிரியாவிடை கொடுத்து றமழானை வழியனுப்பி விட்டு அல்லாஹ்வை புகழ்ந்து போற்றி, துதித்து, தக்பீர்
Read More