இந்த “துஆ”வை “ஆஷூறா” தினம் ஓதுங்கள் ! அனைத்துப் பாக்கியங்களும் பெறுவீர்கள் !
முஹர்றம் மாதத்தின் ஆஷூறா தினத்தையொட்டி அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபையினரால் வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரை ********************************************************************* அன்புள்ள சகோதர சகோதரிகளே! முஹர்றம் மாத பத்தாம் நாள் ஆஷூறா தினமாகும். அன்றிரவு மஃரிப் தொழுகையின் பின் அல்லது இஷாஉ தொழுகையின் பின் ஸெய்யிதுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரால் ஒரு தரம் யாஸீன் ஓதுங்கள். அல்லது மூன்று தரம் ஓதுங்கள். துஆ ஓதும் போது ஸெய்யிதுனா அலீ, ஸெய்யிததுனா பாதிமா, ஸெய்யிதுனா ஹஸன் றழியல்லாஹு
Read Moreஇஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் ஆன்மீகம் கமழும் ஆஷுறா தினம்! புரிந்து செயற்படுவோம்.
-மௌலவீ,சாமசிரீ,தேசகீர்த்தி, மர்ஹூம் HMM.இப்றாஹீம்(நத்வீ)(JP)- சர்வ உலகங்களையும் படைத்த அல்லாஹ் தஆலா மனிதர்களுக்கு ஏகத்துவ ஞானத்தை ஊட்டி நேர்வழி காட்டுவதற்காக றஸூல்மர்களையும், நபிமார்களையும் படைத்து அவர்களில் சிலரைவிட சிலரை சிறப்பாக்கி வைத்தான். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து றஸூல்மார்களிலும் நபிமார்களிலும் எங்கள் கண்மணி நாயகம் முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயர்படைப்பாகப் படைத்தான். அவர்களின் அந்தஸ்த்தை உலகறியச் செய்தான். மலக்குகள் இதேபோல் மலக்குகளையும் படைத்து அவர்களில் சிலரைச் சிறப்பாக்கி வைத்தான். வலிமார் இறைநேசர்களான
Read Moreநோன்பின் பர்ளுகள் எத்தனை?
நோன்பு நிறைவேற இரண்டு நிபந்தனைகள் உள்ளன. இவ்விரு நிபந்தனைகள் இருந்தால் மட்டும்தான் நோன்பு நிறைவேறும். இரண்டும் இல்லையானாலும் அல்லது இரண்டில் ஒன்று மட்டும் இல்லையானாலும் நோன்பு நிறைவேறாது. இது “ஷாபிஈ மத்ஹப்” சட்ட நூல்களில் கூறப்பட்டுள்ள சட்டமாகும். ஒன்று تبييت النّيّة இரவில் “நிய்யத்” வைக்க வேண்டும். இது “நிய்யத்” சரி வருவதற்கான நிபந்தனையாகும். ஒருவன் பகலில் ஆயிரம் தரம் “நிய்யத்” வைத்தாலும் அது நிறைவேறாது.
Read Moreநோன்பின் மாண்பு
நோன்பு இஸ்லாத்தில் ஐந்து கடமைகைளில் ஒன்று. வயது வந்த, சக்தியுள்ள, முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும். அது றமழான் மாதம் மட்டும் கடமையாக்கப்பட்ட ஒரு கடமையாகும். இவ்வணக்கம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயன்தரக்கூடிய ஒரு தத்துவத்தைப் பின்னணியில் கொண்டுள்ளது. முஸ்லிம்களிற் பலர் நோன்பின் உயிரான இத்தத்துவத்தை அறிந்து கொள்ளாமலேயே நோன்பு நோற்று வருகிறார்கள். நோன்பு இஸ்லாத்தின் கடமை. கடமையை விட்டவன் நரகில்பிரவேசிக்க வேண்டிவரும் என்று மட்டும் அறிந்து கொண்டே நோன்பு நோற்று வருகின்றார்கள்.
Read Moreமுப்பெரு நாதாக்கள்
மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) (BBA) இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாஇழீன் பஹ்றுல் ஹகாஇகி வத்தகாஇக் . அஷ்ஷெய்க் முகம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அவர்கள் அஷ்ஷெய்க் அஹமது மீரான்“வெள்ளி ஆலிம்” (வலீ)அவர்கள் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள். இலங்கையில் இஸ்லாமியப் பணிபுரிந்த பெரியார்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த பெரியார் அஷ்ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தென்னிந்தியாவின் காயல்பட்டணத்தின் கம்பெனியார் குடும்பத்தில் அபூபக்கர் சித்தீக் (றழி) அவர்களின் 39வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ம் ஆண்டு சீ.ஏ.கே.
Read Moreஅல் இஸ்றாஉ, வல் மிஃறாஜ்
ஆக்கம் – மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ பேஷ் இமாம், மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் தீன் நகர், காத்தான்குடி. மின் காந்த அலைகளை விட வேகமாகவும், மூன்று, அல்லது நான்கு அல்லது அதைவிட மிக வேக நொடிப் பொழுதில் நிகழ்ந்தவையே “இஸ்றாஉ” எனப்படும் இராவெளிப்பயணமும், “மிஃறாஜு”” எனப்படும் உறூஜ், சுஊத் எனும் ஏற்றமுமாகும். இவ்விரு அம்சமும் முர்ஸலூன்கள், நபிய்யூன்களுக்கு மத்தியில் ஏன் அனைத்து படைப்புக்களுக்கு மத்தியில் உயிரினும் மேலான அண்ணல் முஸ்தபா நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
Read Moreஷாதுலிய்யஹ் தரீக்கஹ்வும் வஹ்ததுல்வுஜுத் கோட்பாடும்.
– மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) (BBA-Hons) – வஹ்ததுல் வுஜூத் என்றால் உள்ளமை ஒன்று படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும். அதாவது அல்லாஹ் ஒருவன், அவன்தான் உள்ளமை (வாஜிபுல்வுஜூத்). படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும் (மும்கினுல் வுஜூத்). படைப்புகள் சுயமான உள்ளமை அற்றவையாகும். படைப்புகள் அனைத்தும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமை தானானவையாகும். அன்றி அந்த உள்ளமைக்குவேறானவை அல்ல. அந்த உள்ளமை படைப்புகள் என்ற பல்வேறு தோற்றங்களில் தோன்றியுள்ளது. படைப்புகள் பல்வேறு தோற்றங்களில் தோன்றினாலும் அந்த அல்லாஹ்
Read Moreஆன்மிக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ
எழுதியவர் : மாதிஹுர் றஸூல், கவித்திலகம் மௌலவீ HMM.இப்றாஹீம் நத்வீ தொடர் – 01 ஆன்மிக ஒளி, அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ அவர்களின் ஆன்மிக நிழல் மறைந்த மாமேதை (கவிதை) (தினகரன் தேசிய நாளிதழ் 29, செப்டம்பர், 1978இல் வெள்ளியன்று பிரசுரமான கவிதை) எனது உள்ளம் எத்தனையோ தடவைகள் உனது உஸ்தாத் வரலாற்றை எழுது என்றது. மனதில் எழுதிய பின் மையெழுத்து எதற்கென்று, என் – கை சும்மாயிருந்து விட்டது. உள்ளத்தில் எழுதினாய் உனக்காக! புறத்தில் எழுதி
Read Moreஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அபுல் அப்பாஸ் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸத் அஸ்றாறுஹு
எழுதியவர் – மெளலவீ MM. அப்துல் மஜீத் (றப்பானீ) சிரேஷ்ட விரிவுரையாளர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம். காத்தான்குடி – 05 ********************************************************************************* இறைநேசர்களான வலீமார்களின் வரிசையில் ஜுமாதல் ஊலா மாதம் உலகெங்கிலும் வாழும் ஸுன்னத் வல் ஜமாஅத் மக்களினால் நினைவு கூரப்படுபவர்கள்தான் ரிபாயிய்யஹ் தரீகஹ்வின் ஸ்தாபகர் ஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்கள். இவர்கள் அலமுல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சின்னம்), ஷெய்ஹுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் ஷெய்ஹ்), ஸெய்யிதுல் அக்தாப் (குத்புகளின் தலைவர்), தாஜுல் ஆரிபீன் (ஞானிகளின் கிரீடம்), உஸ்தாதுல் உலமா (ஆலிம்களின்
Read Moreமாதிஹுர் றஸூல் அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்!
அல் ஆழிமுல் பாழில், வல் குத்புல் வாஸில், மாதிஹுர் றஸூல் அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்! மௌலவீ HMM. .இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய வித்ரிய்யஹ் ஷரீபஹ் நபீபுகழ் காப்பியம் எனும் நூலிலிருந்து இம் மகானவர்கள் ஹிஜ்ரி 1042 இல் இந்தியாவிலுள்ள காயல்பட்டணத்தில் மலர்ந்தார்கள். இவர்களின் தந்தை அற்புதங்கள் பல நிகழ்த்திய அஷ்ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் அவர்களாகும். ஹழ்றத் சுலைமான் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களுக்கு ஐந்து புதல்வர்கள். முறையே, 01- அஷ்ஷெய்கு ஷம்சுத்தீன் வலீ
Read More