முஹர்றம் நிகழ்வுகள் – ஹிஜ்ரி 1434
பெருமானார் பேரர் செய்யிதுனா ஹுஸைன் ஸஹீதே கர்பலா அவர்களின் மௌலிது ஹஸனைன் மௌலித் நிகழ்வுகள் எமது காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 15.11.2012 அன்று ஆரம்பமாகி இஷாத் தொழுகையின் பின்னர் புனித மௌலித் ஷரீப் ஓதப்பட்டு 24.11.2012 அன்று நிறைவுபெற்றது.
Read Moreநிதி கையளிக்கும் நிகழ்வு
சிறுநீர் நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் HMM. மஸ்ஹுர் என்பவருக்காக அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினரால் சேகரிக்கப்பட்ட நிதி 2012.11.19 அன்று கையளிக்கப்பட்டது. இக்கையளிக்கும் நிகழ்வு தொடர்பான படங்கள் உள்ளே….
Read Moreஉதவித்தொகை வழங்கும் நிகழ்வு – 2012
வீட்டுத்திருத்தவேலை, மலசலகூடம் அமைத்தல், குடிநீர் பெறுதல் போன்ற தேவையுடைய 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினால் அதன் தவிசாளர் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களினால் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இடம் – அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்க அலுவலகம் காலம் – 04.11.2012 ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.30 மணி நன்றி – ASWA
Read Moreஇரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட எம துசகோதரருக்கு உதவுவோம்
நமது சகோதரர் ஹயாத்து முஹம்மது முஹம்மது மஷூர் என்பவரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளது எனகொழும்பு Nawaloka வைத்தியசாலையில் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாதகாலத்திற்குள் சிறுநீரகத்தை மாற்றாவிட்டால் உயிராபத்து ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய சுமார் 20 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இவரது சிறுநீரகத்தை மாற்றுவதற்கும் அல்லாஹ்வின் உதவியால் இவர் உயிர்வாழ்வதற்கும் தங்களால் முடியுமான உதவிகள் செய்யுமாறு Shums media Unit சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் அருள் புரிவானாக பெயர் :-
Read Moreஇறைவனுக்காக தன்னைத் தியாகம் செய்த இறை நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள்!
-மௌலவீ ,சாமஶ்ரீ,தேசகீர்த்தி. HMM. இப்றாஹீம்(நத்வீ)(JP)- இவ்வுலகில் நடைபெறும் செயல்கள் யாவும் அல்லாஹ்வைக் கொண்டே நடைபெறுகின்றன. என்று நாம் நம்பியுள்ளோம். நிகழும் செயல்களில் இன்பமாயினும், துன்பமாயினும் அனைத்தின் மூலமாகவும் அல்லாஹ் தனது அடியார்களைச் சோதிக்கின்றான் என்பதும், அதில்பொறுமையைக் கடைப்பிடித்து பொருந்திக் கொள்பவரே வெற்றி பெறுகிறார் என்பதும் திருக்குர்ஆன் ஹதீஸின் முடிவாகும். அல்லாஹ்வை அறியாதவரும் அவனது செயற்பாடுகளே உலகில் நடக்கின்றன என்பதைப் புரியாதவர்களும் இறைவனின் சோதனைகளைப் பொருந்திக் கொள்வதில்லை. அல்லாஹ்வை அறிந்தவர்களும் அவனது செயற்பாடுகளே உலகில் நடக்கின்றன என்பதைப் புரிந்தவர்களுமே
Read Moreவஸீலாத் தேடலாமா? —
(தொடர் 08……) உலகில் யாரால் அல்லது எந்த வஸ்துவால் என்ன செயல் வெளியானாலும் அச்செயலுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான். கத்தி வெட்டியது. நெருப்பு சுட்டது என்பதெல்லாம் மஜாஸ் அக்லீ என்ற வகையைச் சேர்ந்ததேயாகும்.ஏனெனில் சுடுதல் என்ற செயலும் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் நெருப்புக்கும், கத்திக்கும் உரியதல்ல. நெருப்பு சுயமாகச் சுடுவதுமில்லை. கத்தி சுயமாக வெட்டுமதுமில்லை. நெருப்புச் சுயமாகச் சுடும் என்று சொல்வதும் கத்தி சுயமாக வெட்டும் என்று சொல்வதும் அறியாமையாகும். நெருப்பு சுயமாக சுடுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் (அலை) அவர்களைச்
Read Moreஇஸ்லாத்தின் பார்வையில்ஓதிப்பார்த்தலும் தாயத்துகட்டுதலும்
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons)- யாருக்காவது நோய்ஏற்பட்டால், அல்லது கண்திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கரசத்தங்களைக் கேட்டோ பயந்தால் அதற்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திரு நாமங்கள் கொண்டும்ஓதி ஊதிப்பார்த்தல், தண்ணீர் ஓதிக்கொடுத்தல், தாயத் – இஸ்ம் கட்டுதல் போன்றவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையாகும். அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் {وننزلمنالقرآنماهوشفاءورحمةللمؤمنين} (الإسراء-82) (அல்குர்ஆனில் நாம் விசுவாசிகளுக்கு அருளையும் நோய்நிவாரணத்தையும் இறக்கிவைத்துள்ளோம்) என்று கூறியுள்ளான். இது திருமறையில்
Read Moreஸுன்னத்தானதொழுகைகள்
தொடர் – 02 -மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)- ஸலாத்துல்வுழூ: வுழூச்செய்தபின் தொழும் தொழுகை’ என்று இதற்குப் பெயர். வுழூ செய்தபின் வுழூவின் சுன்னத் என நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும் முதலாவது ரக்அத்தில் பாத்திஹா சூராவிற்குப்பின், ولو انّهم اذ ظّلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرّسول لوجدوا الله توّابا رحيما என்ற ஆயத்தை ஓதி’அஸ்தஃபிருல்லாஹ்’ என மூன்று முறை கூறி ‘குல்யாஅய்யுஹல்காபிரூன்’ சூராவைஓதுவதும் இரண்டாவதுரக்அத்தில், ومن يعمل
Read Moreஅறிவித்தல்
அல்ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவுதின கந்தூரி நிகழ்வுகள் பின்வரும் விபரப்படி நடைபெறும். இன்ஷா அல்லாஹ்… 23.08.2013 வௌ்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு — கொடியேற்ற நிகழ்வு பி.ப 5.15 மணிக்கு — கத்முல்குர்ஆன் மஃரிப் தொழுகையின்பின் — மௌலித் மஜ்லிஸ் இஷாத்தொழுகையின்பின் — பயான் நிகழ்வு, துஆப் பிரார்தனை,
Read Moreகொடியேற்றுவது பற்றி இஸ்லாம்சொல்வதென்ன?
தொடர் .. 02 -மௌலவீ இப்றாஹீம் (நத்வீ) (JP) (சாமஸ்ரீ, தேசகீர்த்தி) ஆன்மீகக் கொடிகள்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் கொடிக்குக் கொடுத்த முக்கியத்துவங்கள் ஹதீஸ்களில் நிறைந்து காணப்படுகின்றன. யுத்த வேளைகளில் கொடிகளை ஏந்தி தலைமை தாங்கிச் செல்வதிலும் அது கீழே விழுந்து விடக்கூடாது என்பதிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் மிகக் கரிசனையுடையவர்களாக இருந்துள்ளார்கள். கொடி சம்பந்தமான சில ஹதீஸ்களை மட்டும் இங்கே தருகின்றேன். கைபர் கொடி:
Read More