Tuesday, April 30, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இஸ்லாத்தின் பார்வையில்ஓதிப்பார்த்தலும் தாயத்துகட்டுதலும்

இஸ்லாத்தின் பார்வையில்ஓதிப்பார்த்தலும் தாயத்துகட்டுதலும்

-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons)-
யாருக்காவது நோய்ஏற்பட்டால், அல்லது கண்திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கரசத்தங்களைக் கேட்டோ பயந்தால் அதற்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திரு நாமங்கள் கொண்டும்ஓதி ஊதிப்பார்த்தல், தண்ணீர் ஓதிக்கொடுத்தல், தாயத் – இஸ்ம் கட்டுதல் போன்றவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையாகும்.
அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில்
{وننزلمنالقرآنماهوشفاءورحمةللمؤمنين}
(الإسراء-82)
(அல்குர்ஆனில் நாம் விசுவாசிகளுக்கு அருளையும் நோய்நிவாரணத்தையும் இறக்கிவைத்துள்ளோம்)
என்று கூறியுள்ளான். இது திருமறையில் நோய்களுக்கான மருந்துகள் உள்ளன என்பதை உணர்த்துகின்றது.
இந்த வசனத்திற்கு விரிவுரை எழுதும் இமாம் பக்றுத்தீன் றாஸீ (றஹ்) அவர்கள் “அல்குர்ஆன் என்பது உடல் மற்றும் ஆன்மாவுடன் தொடர்புடையநோய்களுக்கு மருந்தாகும். அதனை ஓதுவதன் மூலம்நோய்களை தடுக்க முடியும்”என்று கூறுகின்றார்கள்.
(தப்ஸீர் றாஸீ-பகுதி-21,பக்கம்24)
ஊதிப்பார்த்தல் தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் 
(5686) صحيح مسلم
ـحدّثنيأَبُوالطَّاهِرِ. أَخْبَرَنَاابْنُوَهْبٍ. أَخْبَرَنِيمُعَاوِيَةُبْنُصَالِحٍعَنْعَبْدِالرَّحْمَـنِبْنِجُبَيْرٍعَنْأَبِيهِعَنْعَوْفِبْنِمَالِكٍالأَشْجَعِيِّ،قَالَ: كُنَّانَرْقِيفِيالْجَاهِلِيَّةِ. فَقُلْنَا : يَارَسُولَاللّهِكَيْفَتَرَىفِيذلِكَ؟فَقَالَ: «اعْرِضُواعلَيَّرُقَاكُمْ. لاَبَأْسَبِالرُّقَىمَالَمْيَكُنْفِيهِشِرْكٌ
நாங்கள் ஜாஹிலிய்யஹ் காலப்பகுதியில் ஓதிப்பார்துக்கொண்டிருந்தோம் இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம்கேட்டோம். அதற்கவர்கள் என்னிம் உங்களின் மந்திரத்தை காட்டுங்கள். ஷிர்க்(இணவைத்தல்) இல்லாத மந்திரத்தில் பிரச்சினை இல்லை என்று கூறினார்கள்.
ஆதாரம் – முஸ்லிம் 
ஹதீஸ் இலக்கம் – 5686 
அறிவிப்பு – அவ்ப் இப்னு மாலிக் அல் அஷ்ஜஈ(றழி) 
البخاري3306

ـحدّثناعثمانُبنأبيشَيبةَحدَّثناجريرٌعنمنصورٍعنِالمِنهالِعنسعيدبنِجُبَيرٍعنابنِعبّاسٍرضيَاللهعنهماقال: «كانالنبيُّصلىاللهعليهوسلّميُعوِّذُالحسنَوالحسينَويقول: إنأباكماكانيَعوِّذُبهاإسماعيلَوإسحاق: أعوذُبكلماتِاللهالتامَّة،منكلِّشيطانٍوهامَّة،ومنكلعينٍلامَّة».
நபி(ஸல்) அவர்கள் ஹஸன்(றழி),ஹூஸைன்(றழி) ஆகியாருக்கு பாதுகாப்புத்தேடுவார்கள். உங்களின் தந்தை(இப்றாஹீம் (அலை)) அவர்கள் இஸ்மாயீல்(அலை), இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்கு பின்வரும் வசனம் மூலம் பாதுகாப்புத்தேடுவார்கள்
أعوذُبكلماتِاللهالتامَّة،منكلِّشيطانٍوهامَّة،ومنكلعينلامَّة 
ஆதாரம் – ஸஹீஹூல் புஹாரீ 
ஹதீஸ் இலக்கம் –(3306) 
அறிவிப்பு – இப்னு அப்பாஸ் (றழி) 
5735-صحيح البخاري
ـحدّثنيإبراهيمُبنموسىأخبرناهِشامٌعنمَعْمَرعنالزُّهريِّعنعروةَعنعائشةَرضيَاللهعنها: «أنَّالنبيَّصلىاللهعليهوسلّمكانيَنْفِثُعلىنفسهـفيالمرَضِالذيماتفيهـبالمعوذات،فلماثقلَكنتُأنفثُعليهبهنَّ،وأمسحُبيدهنفسهِلبَرَكتها».
فسألتُالزُّهريَّ: كيفَيَنفثُ؟قال: كانيَنفثُعلىيديهثمَّيمسحُبهماوَجهه..
நபி(ஸல்) அவர்கள் தங்களின் மரண வருத்தத்தின்போது முஅவ்விதாத்(குல் அஊது பிறப்பில் பலக், குல் அஊது பிறப்பின் நாஸ்) ஆகிய சூராக்களைக் கொண்டு தமக்கு தாமாகவே ஊதினார்கள். அவர்களுக்கு நோய் கடுமையான போது நான் அவைகளைக் கொண்டு ஊதினேன். அவர்களின் உடலை பறகத்துக்காக அவர்களின் கையினால் தடவினேன்.
ஆதாரம் – ஸஹீஹூல் புஹாரீ
ஹதீஸ் இலக்கம் –(5735)
அறிவிப்பு – ஆயிஷா (றழி)
(5654)صحيح مسلم

ـحدّثنابِشْرُبْنُهِلاَلٍالصَّوَّافُ. حَدَّثَنَاعَبْدُالوَارِثِ. حَدَّثَنَاعَبْدُالْعَزِيزِبْنُصُهَيْبٍعَنْأَبِينَضْرَةَعَنْأَبِيسَعِيدٍ،أَنَّجِبْرِيلَأَتَىالنَّبِيَّفَقَالَ: يَامُحَمَّدُاشْتَكَيْتَ؟فَقَالَ: «نَعَمْ»قَالَ: بِاسْمِاللّهِأَرْقِيكَ . مِنْكُلِّشَيْءٍيُؤْذِيكَ . مِنْشَرِّكُلِّنَفْسٍأَوْعَيْنِحَاسِدٍاللّهُيَشْفِيكَ. بِاسْمِاللّهِأَرْقِيكَ
ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே! தங்களுக்கு நோய் ஏற்பட்டுவிட்டதா என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் பின்வருமாறு ஓதினார்கள்.
: بِاسْمِاللّهِأَرْقِيكَ . مِنْكُلِّشَيْءٍيُؤْذِيكَ . مِنْشَرِّكُلِّنَفْسٍأَوْعَيْنِحَاسِدٍاللّهُيَشْفِيكَ. بِاسْمِاللّهِأَرْقِيكَ 
ஆதாரம் – முஸ்லிம்,
ஹதீஸ் இலக்கம் – 5654,
அறிவிப்பு – அபூஸஈத்(றழி)
5742 صحيح البخاري
ـحدّثنامُسدَّدٌحدَّثناعبدُالوارثِعنعبدالعزيزقال: «دخلتُأناوثابتٌعلىأنسِبنمالك،فقالثابتٌ: ياأباحَمزةاشتَكيتُ. فقالأنسٌ: ألاأرقيكَبرُقيةِرسولِاللهصلىاللهعليهوسلّم؟قال: بلى. قال: اللهمَّربَّالناس،مُذهبَالباس،اشْفِأنتَالشافي،لاشافيَإلاّأنت،شِفاءًلايُغادِرُسَقَماً».
நானும் தாபித் இப்னு அஸ்லம் அல்புனானீ(ரஹ்) அவர்களும் அனஸ் இப்னு மாலிக்(றழி) அவர்களிடம் சென்றோம். தாபித்(ரஹ்) ‘அபூ ஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்’ என்று சொல்ல, அனஸ்(றழி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?’ என்று கேட்டார்கள். ஸாபித்(றஹ்), ‘சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)’ என்று சொல்ல, அனஸ்(றழி), ‘அல்லாஹும்ம றப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்பி அன்த்தஷ் ஷாபீ, லா ஷாபிய இல்லா அன்த்த, ஷிபா அன்லா யுகாதிரு சகமன்’ என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.)
ஆதாரம் – ஸஹீஹூல் புஹாரீ
ஹதீஸ் இலக்கம் –(5742)
அறிவிப்பு –அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்(ரஹ்)
(2242) صحيح البخاري
ـ ـ حدّثنا أبو النُّعمانِ حدَّثَنا أبو عَوانةَ عن أبي بِشْرٍ عن أبي المتوكلِ عن أبي سعيدٍ رضيَ اللهُ عنه قال: «انطَلَقَ نَفرٌ من أصحابِ النبيِّ صلى الله عليه وسلّم في سَفْرةٍ سافَروها، حتّى نزَلوا على حيٍّ من أحياءِ العرب فاستَضافوهم فأبَوا أن يُضيِّفوهم، فلُدِغَ سَيِّدُ ذلكَ الحيِّ، فسَعَوا لهُ بكلِّ شيءٍ، لايَنفعُهُ شيء. فقال بعضهم: لو أتيتُم هؤُلاءِ الرَّهطَ الذينَ نزَلوا لعلَّهُ أن يكونَ عندَ بعضهم شيء. فأتوْهم فقالوا: يا أيُّها الرَّهطُ إِنَّ سيِّدَنا لُدِغَ ، وسَعينا لهُ بكلّشيءٍ لا يَنفعُه، فهل عندَ أحدٍ منكم مِن شيء؟ فقال بعضُهم: نعم واللهِ، إني لأرقِي، ولكِنْ واللهِ لقدِ استَضَفْناكم فلم تُضيِّفونا، فما أنا بِراق لكم حتّى تَجعلوا لنا جُعلاً. فصالَحوهم على قَطيعٍ منَ الغنم. فانطلقَ يَتفِلُ عليهِ ويقرأُ: {الْحَمْدُ للَّهِ رَبِّ الْعَالَمِينَ} فكأنَّما نُشِطَ من عِقال، فانطَلَقَ يَمشي وما بهِ قَلبَة. قال: فأوفوهم جُعلَهمُ الذي صالَحوهم عليه. فقال بعضُهم: اقسِموا. فقال الذي رَقَى: لا تَفْعلوا حتّى نأتيَ النبيَّ صلى الله عليه وسلّم فنذكُرَ لهُ الذي كان فننظُرَ ما يأمُرنا، فقدِموا على رسولِ الله صلى الله عليه وسلّم فذَكروا له، فقال: وما يُدريكَ أنها رُقْية، ثمَّ قال: قد أَصبتم، اقسِموا واضربوا لي معكم سَهماً، فضَحِكَ النبيُّ صلى الله عليه وسلّم». قال أبو عبدِ اللهِ وقال شعبةُ: حدَّثَنا أبو بِشْرٍ سمعتُ أبا المتوكِّل.. بهذا
நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!” என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து ‘கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?’ என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ‘ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!” என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..” என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். ‘இதைப் பங்கு வையுங்கள்!” என்று ஒருவர் கேட்டபோது, ‘நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!” என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டுவிட்டு, ‘நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.
ஆதாரம் – ஸஹீஹூல் புஹாரீ
ஹதீஸ் இலக்கம் –(2242)
அறிவிப்பு –அபூ ஸயீத்(றழி)
5739صحيح البخاري
ـ حدّثنا محمدُ بن خالد حدثنا محمدُ بن وَهبِ بن عطية الدمشقي حدثنا محمد بن حرب حدثنا محمدُ بن الوليد الزبيدُّي أخبرَنا الزُّهريُّ عن عروةَ بن الزبيرِ عن زينبَ بنت أبي سلمةَ «عن أم سلمة رضي الله عنها أنَّ النبيَّ صلى الله عليه وسلّم رأى في بيتها جاريةً في وَجهها سَفْعةٌ فقال: اسَترْقوا لها فإنَّ بها النَّظرة ».
وقال عُقيل عن الزُّهري أخبرَني عروةُ عن النبي صلى الله عليه وسلّم: تابَعهُ عبد الله بن سالم عن الزبيدي.
நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீதுகண்ணேறு பட்டிருக்கிறது’ என்று கூறினார்கள்.
இந்தஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஸுபைதி(ரஹ்) அவர்களிடமிருந்தும் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாக இதேஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் – ஸஹீஹூல் புஹாரீ
ஹதீஸ் இலக்கம் –(5739)
அறிவிப்பு –உம்முஸலமா(றழி)
ـ حدثنا عَلِيُّ بنُ حُجْرٍ، حدثنا إسْمَاعِيلُ بنُ عَيَّاشٍ عَن مُحمَّدِ بنِ إسْحَاقَ عَن عَمْرِو بنِ شُعَيْبٍ عَن أَبيهِ عَن جَدِّهِ أَنَّ رَسُولَ الله قالَ: «إذَا فَزِعَ أَحَدُكُمْ في النَّوْمِ فَلْيَقُلْ أعُوذُ بِكَلِمَاتِ الله التَّامات مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وشَرِّ عِبَادِهِ، ومِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وأَنْ يَحْضُرُونِ فإِنّهَا لَنْ تَضُرَّهُ قال: وكانَ عَبْدُ الله بنُ عَمْرٍو يُعلمهامَنْ بَلَغَ مِنْ وَلَدِهِ، وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا في صَك ثُمَّ عَلّقَهَا في عُنُقِهِ»
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் உங்களில் ஒருவர் தூக்கத்தினபோது திடுக்கமடைந்தால் அவர்
أعُوذُ بِكَلِمَاتِ الله التَّامات مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وشَرِّ عِبَادِهِ، ومِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وأَنْ يَحْضُرُونِ 
என்றுசொல்லவும் நிச்சயமாக அது எந்த தீங்கையும் ஏற்படுத்தாது.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(றழி) அவாகள் தனது பிள்ளைகளில் வயது வந்தவர்களுக்கு இதை கற்றுக்கொடுத்தார்கள். சிறுவர்களுக்கு ​இதை எழுதி தொங்கவிட்டார்கள்.
ஆதாரம் – துர்முதீ – ஹதீஸ் இலக்கம் –(3662)
அபூதாவூத் – ஹதீஸ் இலக்கம் –(3893)
அறிவிப்பு – அம்று இப்னு சுஐப் (றழி)

ـحدثناعُبَيْدُاللهبنُمُعَاذٍأخبرناأبِيأخبرناشُعْبَةُعنعَبْدِاللهبنِأبيالسَّفَرِعنالشَّعْبِيِّعنخَارِجَةَبنِالصَّلْتِعنعَمِّهِ،: « أنَّهُمَرَّبِقَوْمٍفَأتَوْهُفَقَالُوا: إنَّكَجِئْتَمِنْعِنْدِهذَاالرَّجُلِبِخَيْرٍ. فَارْقِلَنَاهذَاالرَّجُلَفَأَتَوْهُبِرَجُلٍمَعْتُوهٍفيالْقُيُودِ. فَرَقَاهُبِأُمِّالْقُرْآنِثِلاِثَةِأيَّامٍغُدْوَةًوَعَشِيَّةًوَكُلَّمَاخَتَمَهَاجَمَعَبُزَاقَهُ،ثُمَّتَفَلَ،فَكَأنَّمَاأُنْشِطَمِنْعِقَالٍ،فَأعْطُوْهُشَيْئاً،فَأتَىالنَّبيَّصلىاللهعليهوسلّم،فَذَكَرَهُلَهُ،فَقالَرَسُولُاللهصلىاللهعليهوسلّم: كُلْفَلَعَمْرِيلَمَنْأكَلَبِرُقْيَةِبَاطِلٍ،لَقَدْأكَلْتَبِرُقْيَةِحَقَ

ஹாரிஜா(றழி) அவர்களின் சாச்சா அவர்கள் ஒரு கூட்டத்தின்பக்கம் சென்றபோது அந்த கூட்டத்தவர்கள் அவரிடம் திடுக்கமடைந்த ஒரு மனிதனைக் கொண்டு வந்து ஒதிப்பார்குமாறு கேட்டுக்கொண்டனர். அந்த மனிதனுக்கு அவர் மூன்று நாட்கள் சூறதுல் பாதிஹாவைக்கொண்டு காலையும் மாலையும்ஒதிப்பார்த்தார். ஒதிமுடிந்ததும் உமிழ் நீரை திரட்டி துப்பினார் அப்போது அந்த மனிதர் கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் எழுந்தார்.அந்த கூட்டத்தினர் அவருக்கு அன்பளிப்பு வழங்கினர். அதை நபி(ஸல்) அவர்களிடம் வந்து கூறிய போது,என்ஆயுளின் மீது சத்தியமாக நீ அதை சாப்பிடு. எத்தனையோ பேர் அசத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகின்றனர். நீ சத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகிறாய். என்று கூறினார்கள்.
ஆதாரம் – அபூதாவூத்
ஹதீஸ் இலக்கம் –(3421)
அறிவிப்பு – ஹாரிஜாஇப்னு ஸல்த் (றழி)

ـحدثناأحْمَدُبنُصَالِحٍوَابْنُالسَّرْحِقَالَأَحْمَدُحدثناابنُوَهْبٍوَقَالَابنُالسَّرْحِأخبرناابنُوَهْبٍقالَأخبرنادَاوُدُبنُعَبْدِالرَّحْمنِعنْعَمْرِوبنِيَحْيَىعنْيُوسُفَبنِمُحمَّدٍوَقالَابنُصَالِحٍ: مُحمَّدُبنُيُوسُفَبنِثَابِتِبنِقَيْسِبنِشَمَّاسٍعنْأبِيهِعنجَدِّهِعنْرَسُولِاللهصلىاللهعليهوسلّم،أنَّهُدَخَلَعَلَىثَابِتِبنِقَيْسِـقالأَحْمَدُوَهُوَمَرِيضٌـفَقَالَ: «اكْشِفِالْبَاسَرَبَّالنَّاسِعنْثَابِتِبنِقَيْسِبنِشَمَّاسٍ،ثُمَّأخَذَتُرَاباًمنْبَطْحَانَفَجَعَلَهُفِيقَدَحٍثُمَّنَفَثَعَلَيْهِبِمَاءٍوَصَبَّهُعَلَيْهِ». قالَأَبُودَاوُدَ: قالَابنُالسَّرْحِيُوسُفُبنُمُحمَّدٍقالأبُودَاودَ: وَهُوَالصَّوَابُ

நபி(ஸல்) அவர்கள் தாபித் இப்னு கைஸ்(றழி) அவர்கள்நோயுற்று இருந்தபோது அவர்களிடம் சென்று «اكْشِفِالْبَاسَرَبَّالنَّاسِ மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குவாயாக! என்று சொன்னார்கள்.பின்னர் மண்ணை எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு நீரை அவர்மீது ஊற்றினார்கள்
ஆதாரம் – அபூதாவூத்
ஹதீஸ் இலக்கம் –(3885)
மேலே குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களையும் இது போன்ற இங்கு குறிப்பிடப்படாத ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு நோக்கும் போது
நோய்களுக்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திரு நாமங்கள் கொண்டும் ஓதி ஊதிப்பார்தல், தண்ணீர் ஓதுதல், தாயத்து கட்டுதல் என்பன இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டவையாகும். ​இவை ஷிர்க் ஆன காரியங்கள் அல்ல என்பதையும் நபி(ஸல்) அவர்கள் அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திரு நாமங்கள் கொண்டும் வைத்தியம்செய்துள்ளார்கள் என்பதையும்ஷிர்க்(இணவைத்தல்) சம்மந்தமான ஓதல்கள் மூலம் வைத்தியம் செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்என்பதையும்தெளிவாக விளங்க முடிகின்றது.
عنابنمسعود «إنالرقىوالتمائموالتولةشرك
ஓதிப்பார்தலும் தாயத்துகட்டுதலும் ஷிர்க்(இணவைத்தல்) ஆகும் என்ற கருத்தைத்தரும் (அபூதாவூத் – 3883 ஹதீதும் இப்னு மாஜ்ஹ்- 3612) ஹதீத்களும் இதுபோன்றவைகளும் ஜாஹிலிய்யா காலப்பகுதியில் காணப்பட்ட ஷிர்க்(இணவைத்தல்) சம்பந்தமான தாயத்துகளை குறிப்பிடுகின்றன. மாறாக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திரு நாமங்கள் கொண்டும் ஓதிப்பார்தலையும் தாயத்து கட்டுதலையும் ஷிர்க் என இங்கு குறிப்பிடப்படவில்லை.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments