இஸ்லாம் சமாதானத்தை விரும்புகிறது என்றால் இஸ்லாமிய வரலாற்றில் போர்கள் நடந்தது ஏன்?
தொகுப்பு – மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தை வலியுத்துகின்றது. ஒரு போதும் வன்முறையை ஆதரிக்கவில்லை ஆயினும் இஸ்லாமிய வரலாற்றில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல போர்களை நிகழ்த்தியுள்ளார்கள் அவை அனைத்தும் எதற்காக நடந்தன ? என்ற வினா எழுகின்றது. அதற்கான விடையை அறிந்துவைத்திருப்பது இஸ்லாம் பற்றிய சரியானபுரிதலுக்கு வழிவகுக்கும் என நான் நம்புகிறேன். நாடுகளை பிடிப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர்களை நிகழ்த்தினார்களா?
Read Moreகாத்தான்குடி ஸுன்னீ உலமாஉகளே!
வஹ்ஹாபிஸம் வழிகேடு வழிகேடென்று பல வருடங்களாக கூறி வந்துள்ளேன். இன்றுவரை கூறிக் கொண்டே இருக்கின்றேன். இது மட்டுமல்ல வஹ்ஹாபிஸம் வழிகேடுதான் என்று பல இலட்சம் ரூபாய் செலவில் பல நூறு இறு வெட்டுக்கள் பேசியும், பல நூல்கள் எழுதியும் வெளியிட்டு இலவசமாக விநியோகித்தும் வந்துள்ளேன். அவற்றில் “வஹ்ஹாபிஸ முகவர்கள் வழிகேட்டின் தரகர்கள்” என்ற நூலும், “வஹ்ஹாபிஸ வழிகேடு நம் நாட்டுக்கு சாபக்கேடு” என்ற நூலும் அடங்கும்.
Read Moreஐக்கியமே எமக்கு முக்கியம்
இனஇ மத, மொழி, நிற பேதமின்றி மனிதர்கள் யாவரும் ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளே! பௌத்த மதத்தை பின்பற்றி வாழும் பௌத்தர்களும், இந்து மதத்தை பின்பற்றி வாழும் இந்துக்களும், இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றி வாழும் முஸ்லிம்களும் ஆதிபிதா – முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளே!
Read Moreநோன்பின் பர்ளுகள் எத்தனை?
நோன்பு நிறைவேற இரண்டு நிபந்தனைகள் உள்ளன. இவ்விரு நிபந்தனைகள் இருந்தால் மட்டும்தான் நோன்பு நிறைவேறும். இரண்டும் இல்லையானாலும் அல்லது இரண்டில் ஒன்று மட்டும் இல்லையானாலும் நோன்பு நிறைவேறாது. இது “ஷாபிஈ மத்ஹப்” சட்ட நூல்களில் கூறப்பட்டுள்ள சட்டமாகும். ஒன்று تبييت النّيّة இரவில் “நிய்யத்” வைக்க வேண்டும். இது “நிய்யத்” சரி வருவதற்கான நிபந்தனையாகும். ஒருவன் பகலில் ஆயிரம் தரம் “நிய்யத்” வைத்தாலும் அது நிறைவேறாது.
Read Moreநோன்பின் மாண்பு
நோன்பு இஸ்லாத்தில் ஐந்து கடமைகைளில் ஒன்று. வயது வந்த, சக்தியுள்ள, முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும். அது றமழான் மாதம் மட்டும் கடமையாக்கப்பட்ட ஒரு கடமையாகும். இவ்வணக்கம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயன்தரக்கூடிய ஒரு தத்துவத்தைப் பின்னணியில் கொண்டுள்ளது. முஸ்லிம்களிற் பலர் நோன்பின் உயிரான இத்தத்துவத்தை அறிந்து கொள்ளாமலேயே நோன்பு நோற்று வருகிறார்கள். நோன்பு இஸ்லாத்தின் கடமை. கடமையை விட்டவன் நரகில்பிரவேசிக்க வேண்டிவரும் என்று மட்டும் அறிந்து கொண்டே நோன்பு நோற்று வருகின்றார்கள்.
Read Moreஊடக அறிக்கை
ஊடக அறிக்கை 21.04.2019ம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று எமது இலங்கை நாட்டின் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேட்சத்தனமான தாக்குதல்களை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. குறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்கள் வழிபாடுகளில் ஈடுபடும் போது மதஸ்தலங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் எமது உள்ளங்களில் நீங்காத மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. காத்தான்குடி பள்ளிவாயல்களில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் இதன் வலியை
Read Moreஊடகவியலாளர் மாநாடு
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் மற்றும் அதன் பின்னர் தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாகவும் அத்துடன் இந்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட தீவிரவாத குழுவின் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் குறித்து கடந்த காலங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு பின்வரும் ஒழுங்கில் நடைபெறவுள்ளது.
Read More33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு அஜ்மீர் அரசர், கரீபே நவாஸ் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 33வது வருட கந்தூரிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும், பொதுமக்களின் நன்மை கருதியும், பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டும் குறிப்பாக ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் வேண்டுகோளை கருத்திற் கொண்டும் எமது 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகள் யாவும் காலவரையறையின்றி மறு
Read Moreஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்
-சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ் A.அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்- நங்கூரங்கள் “நீரின் மேல் நிற்கும் பூமி அசைந்து விடாமலிருக்க அதன் மேல் மலைகளை முளைகளாக அமைத்துள்ளோம்” (அல்குர்ஆன்) நீரில் மிதக்கும் கப்பல் அசைந்து விடாமலிருக்க நங்கூரமிட்டு அதை நிலை பெறச் செய்வது போல் நீரின் மேல் படைக்கப்பட்டுள்ள பூமி அசைந்து விடாமலிருக்க ஆங்காங்கே மலைகளை நிறுவி அதை நிலை பெறச் செய்துள்ளான் இறைவன். “ஜிபால்” மலைகள் என்ற சொல், பமியில் உள்ள இமயமலை, உஹதுமலை போன்ற கல்லினாலான
Read Moreகண்டன அறிக்கை
கடந்த 21.04.2019ம் திகதி எமது இலங்கை நாட்டின் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. குறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்களின் ஈஸ்டர் பண்டிகைத் தினத்தில் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபடும் போது மதஸ்தலங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் எமது உள்ளங்களில் மிக மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Read More