பிறந்த நாள் வாழ்த்து
இன்று தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடும் அல்ஆலிமுல்பாழில் ஞானத் திங்கள் அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அன்னவர்கள் சரீர சுகத்துடன் நீண்ட நாள் நலமாய் வாழ்ந்து ஆன்மீகப் பணிகளிலும் தொடர்ந்தும் நிலைத்திருக்க வல்லோன் இறைவனை இருகரம் ஏந்துகிறோம். ஷம்ஸ் மீடியா யுனிட்
Read Moreதிருமுடிகள் தரிசனம்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு பெருமானாரின் புனித திரு முடியையும் குத்பு நாயகத்தின் புனித திரு முடியையும் பார்வையிட்டு அருள் கோடிபெறும் இனிய நிகழ்வு பெருமானார் “மழ்ஹறுல் அதம்” முஹம்மது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மிகு திரு முடியையும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்றுஹு)அவர்களின் திரு முடியையும் பார்வையிட்டு அருள் பெறும் புனித நிகழ்வு இன்ஷா அல்லாஹ் பின்வரும் விபரப்படி நடைபெற இருக்கி்ன்றது. இடம் : சுன்னத்
Read Moreசற்குருமார்களும், கடலாமைகளும்
கடலாமை முட்டை கரை தனிலிட்டபின் கடலில் இறங்கி தியானம் செய்து உடனே தன் முட்டை பொரிக்கும் உவமை போல் உள்ளமையாகுமாம் என் பிறவி கடலில் வாழும் கடலாமை என்ற பெரிய ஆமை முட்டையிடுவதற்கு கரைக்கு வந்து மண்ணைக் கிளறிக் குழி தோண்டி அதில் முட்டையிட்ட பின் கடலுக்கு சென்று விடும். நீருள் இருந்து கொண்டே கரையிலிட்ட முட்டையை கண் இமைக்காமல் தொடர்ந்து பல மணி நேரம் உற்று நோக்கி குஞ்சுகள் பொரித்து அவற்றை வெளிப்படுத்தும். இவ்வாறுதான் ஆன்மீகக்
Read Moreதிருக்குா்ஆனைக் கொண்டு வைத்தியம் செய்தல்
திருக்குர்ஆன் என்பது மனிதனின் உள நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இருப்பது போல் அவனின் உடல் நோய்களைச் சுகமாக்கும் மருந்தாகவும் உள்ளது. அது எந்த நோய்க்கு மருந்தென்றாலும் அதைக் கொண்டு மருந்து செய்தால் மட்டுமே நோய் சுகமாகும். அதை உறையிலிட்டு காலையும் மாலையும் அதை முத்தமிட்டு வருவதால் எந்த நோயும் குணமாகி விடாது. அல்லது தினமும் திருக்குர்ஆனை ஓதி வருவதாலும் குணமாகி விடாது. திருக்குர்ஆனை முத்தமிடுவதும், அதை ஓதுவதும் நன்மை தரக்கூடிய நற் செயல்கள்தான். ஆயினும் அவ்வாறு செய்தல்
Read Moreகுறவனைக் கண்டு எழுந்து நின்ற இமாம் கஸ்ஸாலி
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அபூஹாமித் முஹம்மத் கஸாலீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள் “ஈரான்”நாட்டின் “குறாஸான்” மாநிலத்தில் (ஹிஜ்ரி 505 – ஈஸவீ 1111) “தூஸ்” எனும் நகரில் பிறந்தார்கள். “ஸூபிஸம்” பேசிய தத்துவஞானி. இவா்களின் அறிவுத்திறமையால் “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” இஸ்லாமின் ஆதாரம் என்ற சிறப்புப் பெயரால் பிரசித்தி பெற்றார்கள். இமாமுல் ஹறமைன் அபுல் மஆலி அல் ஜுவைனீ றஹ் றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்களிடம் கல்வி கற்றார்கள். பக்தாத் நகரில் பிரசித்தி பெற்ற “நிளாமிய்யா”வில் படித்துக் கொடுத்தார்கள். அறபு மொழியில்
Read Moreஉறக்கம் “வுழூ”வை முறிக்குமா?
தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி) “வுழூ”என்றால் ஒருவன் “ஷரீஆ”வில் கூறப்பட்ட முறைப்படி – விதிப்படி – தனது உறுப்புகளில் குறிப்பிட்ட சில உறுப்புகளை கழுவுவதை குறிக்கும். உதாரணமாக முதலில் “வுழூ”வின் “பா்ழை” இறுக்குகின்றேன் என்று “நிய்யத்” வைத்தல். அதாவது இவ்வாறு மனதில் நினைத்தல். இரண்டாவது இந்த எண்ணத்தோடு முகம் கழுவுதல். மூன்றாவது இரு கைகளையும் முழங்கை உட்பட கழுவுதல். நாலாவது தலையை நீரால்
Read Moreஉள்ளம் தெளிவானால் உலகத்தையே பார்க்கலாம்
ஒரு மனிதனின் வெளிக்கண்கள் இரண்டும் தெளிவாக இருந்தால்-ஆரோக்கியமாக இருந்தால் இவன் தன்னை விட்டு மறையாத எதையும் பார்க்க முடியும். ஆனால் மனக்கண்-கல்புக்கண்-தெளிவானவன் தன்னை விட்டும் மறைந்தவற்றையும் அது கொண்டு பார்ப்பான். மனக்கண் தெளிவானவனுக்கு வெளிக்கண் தேவையில்லை. இமாம் அப்துல்லாஹ் இப்னு அலவிய்யுல் ஹத்தாத் றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள் இரு கண் பார்வையையும் இழந்திருந்தார்கள். எனினும் அவா்கள் கூர்மையான பார்வை உள்ளவா்கள் போன்றே மற்றவா்களுக்குத் தென்பட்டார்கள். அவா்கள் வழமையாக அறை ஒன்றில் தனியாகவே உறங்குவார்கள். எவரையும் உள்ளே அனுமதிக்க
Read Moreபருந்து
இப்பறவை பறவைகளின் தலைவன் என்று சொல்லப்படும். பறவைகளில் அதி வேகமாக பறப்பது பருந்துதான். இது ஒரே நாளில் கிழக்கில் இருந்து மேற்கிற்கு செல்லும் வல்லமை உள்ளது. காட்டில் வாழும் யானைக் குட்டிகளைக் கூட இறாஞ்சிக் கொண்டு பறந்து செல்லும். அதன் காலின் சக்தி மிக அபாரமானது. இப்பறவை பறவைகளிலேயே அற்புதமானது. இது போன்று நுகரும் சக்தியுள்ள பறவை எதுவுமில்லை. சுமார் 400 மீட்டர் தூரத்திலுள்ள ஒரு பிணத்தின் வாடையைக் கூட நுகரும் சக்தி இதற்கு உண்டு. காட்டில்
Read Moreகஸ்தூரி நபீயின் மீது ஸலவாத் ஓதும் புனித ஸலவாத் மஜ்லிஸ் – 2015
அகிலத்தின் அருட்கொடை, இறையொளியின் முதலொளி, நம்பெருமானார் றஸுலே கரீம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ் பாடும் புனித ஸலவாத் மஜ்லிஸ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இவ்வருடமும் எதிர்வரும் 04-01-2015 ஞாயிறு அதிகாலை 02:30 மணிமுதல் ஆரம்பமாகவுள்ளது. அண்ணல் நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அகிலத்திற்கு அருளாக அவதரித்த தினத்தை – நேரத்தை கண்ணியப்படுத்துமுகமாகவே இம்மஜ்லிஸ் வருடாந்தம் நடாத்தப்படுகின்றது. இம் மஜ்லிஸில் கண்ணிய நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது பாசமும் நேசமும்
Read Moreஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம்
அகிலத்தின் அருட்கொடையாய், அஹதவனின் முதல் வெளிப்பாடாய் இவ்வுலகில் அவதரித்த எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடியின் பல இடங்களில் 23.12.2014 செவ்வாய்க்கிழமை அன்னவர்களின் பேரில் திருக்கொடியேற்றி சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஆரம்பமாகவுள்ளது. காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் தீன் நகர் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயல் நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ் ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் மேற்கண்ட இடங்களில் தொடர்ந்து 12
Read More