மிஃறாஜ் இரவும், ஸலவாத் மஜ்லிஸும்
றஜப் பிறை 27ம் இரவான 16.05.2015 அன்று (சனிக்கிழமை) மிஃறாஜுடைய இரவை கண்ணியம் செய்யும் முகமாக அன்று காத்தான்குடி- 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் விஷேட ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகள் தரிசன நிகழ்வும் நடைபெற்றது. அன்றைய தினம் பி.ப 04.00 மணி தொடக்கம் இரவு 08.00 மணிவரை பெண்களுக்கும், இரவு 09.00 மணிதொடக்கம் 11.30 மணிவரை ஆண்களுக்கும் அகிலத்தின் பேரொளி, பேரொளிப்பிழம்பு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ
Read Moreபுகாரீ தமாம் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு
38வது வருடமாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 16.04.2015 அன்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 29நாட்கள் ஓதப்பட்டு வந்த ஸெய்யிதுனா முஹம்மத் இப்னு இஸ்மாயில் அல் புகாரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட புனித ஸஹீஹுல் புகாரீ தமாம் மஜ்லிஸ் 15.05.2015 வெள்ளிக்கிழமை அன்று இரு அமர்வுகளாக நடைபெற்றது. முதலாம் அமர்வு – காலை 10.00 மணிதொடக்கம் 11.30 வரையும் இரண்டாம் அமர்வு – அஸர் தொழுகையின் பின் ஆரம்பமாகி இரவு 09.00 மணிவரை நடைபெற்றது.
Read Moreஅஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத் P.P.S.S. முஹம்மத் புஹாரீ நல்ல கோயாத் தங்கள் வருகை
அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்கு அப்துர் றஸீத் கோயாத்தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் மருமகனும், ஜாமிஅஹ் மின்ஹாஜிய்யஹ் அதிபருமான அஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத் P.P.S.S. முஹம்மத் புஹாரீ நல்ல கோயாத்தங்கள் அன்னவர்கள் 13.05.2015 (புதன்கிழமை) அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலுக்கு பி.ப 05.00 மணியளவில் வருகை தந்தார்கள். அன்னாருடன் ஜாமிஅஹ் மின்ஹாஜிய்யஹ்வின் உஸ்தாத்மார்களும், மாணவர்களும், ஜாமிஅஹ்வின் நிர்வாகிகளும் சமுகம் தந்தனர். தங்களது வருகையில் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களை சந்தித்தும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
Read Moreஇமாம் ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவு தினம்
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் வந்துதித்த இமாமுனா ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 11.05.2015 (திங்கட்கிழமை) அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையின் பின் அன்னாரின் பேரிலான மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் அன்னாரின் அகமிய நிலைகளைப் பற்றி சங்கைக்குரிய மௌலவீ அப்துல் மஜீத் றப்பானீ அன்னவர்களால் மார்க்க உபன்னியாசமும் நடைபெற்றது. இறுதியா துஆ ஓதப்பட்டு, தபர்றுக் விநியோகத்துடன் இனிதே ஸலவாத்துடன் மஜ்லிஸ் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
Read Moreஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ்
அஜ்மீர் அரசர், கரீபே நவாஸ், அதேயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெறவிருக்கின்ற 29வது வருட ஹாஜாஜீ கந்தூரியை முன்னிட்டு கடந்த 25.04.2015 (சனிக்கிழமை) அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் நடைபெற்றது. இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் பின் அன்னாரின் பேரிலான திருக்கொடியேற்றமும் நடைபெற்று, தொடர்ந்து அவர்கள் பேரிலான மௌலிது அதேயே றஸூலும் ஓதப்பட்டது. இஷா தொழுகையின்
Read Moreமர்ஹும் அஸ்அத் பர்மான் பாஸ் அவர்களுக்கான கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ்
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் மாணவரும், மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களின் மகனுமான மர்ஹும் அஸ்அத் பர்மான் பாஸ் அவர்கள் எங்களை விட்டும் மறைந்த 5ம் ஆண்டு நிறைவையொட்டி அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ் 25.04.2015 அன்று ஜாமிஆ மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களும், உலமாக்களும், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பர்மான் பாஸ் அவர்களுக்காக குர்ஆன் தமாம் செய்து ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
Read Moreறஜப் மாத ஸலவாத் மஜ்லிஸ்
அகிலத்தாருக்கு அருட்கொடையாக அவனியில் வந்துதித்த எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், அன்னை ஆமினா றழியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் வயிற்றில் கருத்தரித்த பொன்னாளான றஜப் மாத்தின் முதலாம் வெள்ளியிரவினை சங்கைப்படுத்தும் முகமான நேற்று 23.04.2015 (வியாழன் பிற்பகல் வெள்ளியிரவு) அன்று இஷாத் தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மகிமை பொங்கும் ஸலவாத் மஜ்லிஸ் நடைபெற்றது. இந்நிகழ்வி்ல் விஷேடமாக எமது பள்ளிவாயலுக்குச் சொந்தமாகக் கிடைத்த திருமுடிகளை வீதியோரங்களில் குழுமியிருந்த முஹிப்பீன்களால் மலர் மலை
Read More38வது வருட புகாரீ ஷரீப் மஜ்லிஸ் ஆரம்பம்
இமாதுமுல் முஹத்திதீன், ஹதீஸ் கலை மாமேதை அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இஸ்மாயீல் அல் புகாரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட புனித ஷஹீஹுல் புகாரீ ஷரீபில் இடம்பெற்ற பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 38வது வருட புகாரீ மஜ்லிஸ் 16.04.2015 (வியாழக்கிழமை) அன்று அஸ்ர் தொழுகையின் பின் திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. தொடர்ச்சியாக ஒரு மாத காலத்திற்கு தினமும் அஸ்ர் தொழுகையைத் தொடர்ந்து ஹதீஸ்களை வாசிக்கும் மஜ்லிஸ் ஆரம்பமாகி இஷா தொழுகை வரை நடைபெறும்.
Read More67வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகத்தின் கந்தூரி நிகழ்வின் தொகுப்பு
இந்தியா – தமிழ்நாடு நாஹூர் ஷரீபில் ஆட்சி செய்யும் கன்ஜே ஸவா, குத்புல் மஜீ்த், ஷாஹுல் ஹமீத், பர்துல் வஹீத், அப்துல் காதிர் அந்நாஹூரீ அன்னவர்களின் நினைவாக கடந்த 27.03.2015 – 29.03.2015ம் திகதிவரை காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான 67வது வருட மாகந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஆரம்பமாக திருக்கொடியேற்றி வைக்கப்பட்டு, கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ், மீரான் ஸாஹிப் மௌலித் மஜ்லிஸ், ஹத்தாத் றாதிப், முறாதிய்யஹ் பைத், கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸ்,
Read Moreஅம்பா நாயகம் நினைவு மஜ்லிஸின் தொகுப்பு
இந்தியா தமிழ் நாடு கம்பம் நகரில் சமாதி கொண்டுள்ள அஸ்ஸெய்யித் முஹம்மத் அப்துர் றஹ்மான் கம்பமீ (அம்பா நாயகம்) அன்னவர்களின் நினைவாக 24.03.2015 செவ்வாய்க்கிழமை அன்று இஷா தொழுகையின் பி்ன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான மௌலித் மஜ்லிஸ் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பா நாயகம் அன்னவர்களுக்காக சூறா யாஸீனும், ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் இயற்றிய மௌலூதுப் பாடலும் பாடப்பட்டு ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களால் அன்னாரின் சில சரிதைகளைக் கூறி இனிதே ஸலவாத்துடன் நிறைவெய்தியது. அல்ஹம்துலில்லாஹ்
Read More