புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள் 2014

January 21, 2014
மானுடர்களுக்கு மகிபராய் வந்துதித்த கரையில்லா அருட் கடல் எம் பெருமானார் (ஸல்) அன்னவர்களின் பிறந்த தினத்தையும், பிறந்த நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக வருடா வருடம் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்று வரும் ஸலவாத் மஜ்லிஸ் இவ்வருடமும் பெருந்திரளான மக்கள் கூட்டத்துடனும், ஸலாவத் முழக்கத்துடனும் 14.01.2014ம் திகதி அன்று நடுநிசி 03.00 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக……

கிழக்கு மண்ணில் முதற்தடவையாக SHUMS STUDIO நிறுவனத்தார் வழங்கும் இறை அருள் சொரிந்த இறை நேசர்களின் புகழ் பொங்கும் கீதங்கள் ”நஸீஹத் வீடீயோ அல்பம்” வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெருமானார் (ஸல்) அன்னவர்கள் பிறந்த நேரத்தை எதிர்பார்த்து ஷுப்ஹ் தொழுகை்குரிய அதான் வரை பெரு முழக்கத்துடனும் பக்திப் பரவசத்துடனும் ஸலவாத் மஜ்லிஸ் ஆரம்பமானது.
ஷுப்ஹ் தொழுகைக்காக அதான் ஒழுித்ததும், முஹிப்புர் றஸுல் சங்கத்தினரால் வெளியிடப்படயிருந்த ”ஸஆதத் வழங்கும் ஸலவாத் சொல்வோம்” எனும் நூல் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அந்நிகழ்வின் பின்னர் தபர்றுக் விநியோகம் செய்யப்பட்டு, ஸவாத்துடன் மஜ்லிஸ் நிகழ்வுகள் நிறைவு பெற்றதன் பின்னர் ஸுப்ஹ் தொழுகை ஜமாஅத்தாக நடைபெற்று ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் முடிவடைந்தன.

You may also like

Leave a Comment