(தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)
وَسَبْعَةٌ لَايَرُدُّ الله دَعْوَتَهُمْ – مَظْلُوْمٌ وَالِدٌ ذُوْ صَوْمٍ وَذُوْ مَرَضٍ
وَدَعْوَةٌ لِلْاَخِ بِالْغَيْبِ ثُمَّ نَبِيْ – لِأُمَّةٍ ثُمَّ ذُوْ حَجٍّ بِذَاكَ قُضِيْ
1 – அநீதி செய்யப்பட்டவர்.
2 – பெற்றோர்.
3 – நோன்பாளி.
4 – நோயாளி.
5 – ஒரு சகோதரனுக்கு – நண்பனுக்கு – மறைமுகமாக துஆ செய்பவன்.
6 – தனது சமூகத்துக்காக “துஆ” செய்கின்ற நபீ.
7 – ஏற்றுக் கொள்ளப்பட்ட “ஹஜ்” வணக்கம் செய்தவன்.
மேற்கண்ட ஏழு பேர்களும் கேட்கும் “துஆ”வுக்கு விஷேட சலுகை உண்டு. அதாவது “துஆ”வுக்குரிய நிபந்தனைகள் தவறினால் கூட குறித்த ஏழு பேர்களின் “துஆ”வும் தங்குதடையின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.
1) அநீதி செய்யப்பட்டவன் என்பது எந்த வகையில் அநீதி செய்யப்பட்டவனையும் உள்வாங்கிக் கொள்ளும். ஒருவன் இன்னொருவனுக்குப் பலவகையில் அநீதி செய்ய இடமுண்டு. அவனை நியாயமின்றி அடிப்பதும், அவனை ஏசுவதும், அவனைத் துன்புறுத்துவதும், அவனின் உடைமைகளை நாசமாக்குவதும், பொய் சொல்லி அவனை பொலிஸிடம் மாட்டி வைப்பதும் ஒருவன் இன்னொருவனுக்குச் செய்யும் அநீதியேயாகும். பொதுவாக ஒரே வரியில் சொல்வதாயின் ஒருவன் இன்னொருவனின் மனதை வேதனைப் படுத்துவது அநீதி எனலாம்.
இவ்வாறு வேதனை செய்யப்பட்டவன் – அநீதி செய்யப்பட்டவன் அநீதி செய்தவனுக்கு எதிராக இறைவனிடம் கையேந்தினால் அவனின் “துஆ”வை இறைவன் ஒரு போதும் தட்ட மாட்டான்.
لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللهِ حِجَابٌ
அநீதி செய்யப்பட்டவனுக்கும் இறைவனுக்குமிடையில் திரையில்லை என்பது நபீ மொழி.
اِتَّقِ دَعْوَةَ الْمَظْلُوْمِ
“அநீதி செய்யப்பட்டவனின் பிரார்த்தனையை பயந்து கொள்” என்பதும் நபீ மொழிதான். ஒருவன் இன்னொருவனுக்குச் செய்யும் அநீதியை விட ஒரு கூட்டத்திற்கு அல்லது ஒரு சமூகத்திற்குச் செய்யும் அநீதி மிகப் பயங்கரமானதாகும். ஒரு கரம் உயர்வதற்கும், பல கரங்கள் உயர்வதற்கும் வித்தியாசமுண்டு.
அநீதி செய்யப்பட்டவன் அநீதி செய்தவனுக்கு எதிராக கை உயர்த்தியும் கூட அநீதி செய்தவனுக்கு இறைவனின் தண்டனை கிடைக்கவில்லையானால் அநீதி செய்யப்பட்டவன் கவலைப்படத் தேவையில்லை. அவன் மேற்கண்ட நபீ மொழிகள் பொய்யாகாதென்ற நம்பிக்கையோடும், “அரச நீதி அன்று கேட்கும். தெய்வ நீதி நின்று கேட்கும்” என்ற நம்பிக்கையோடும் பொறுத்திருக்க வேண்டும். என்றாவதொரு நாள் திருடிய எலி பொறியில் மாட்டும். அந்நேரம் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி பட்டாசு கொழுத்த வேண்டியதுதான்.
2) பெற்றோர் தமது பிள்ளைகளுக்குச் சாதகமாக பிரார்த்தனை செய்தாலும், பாதகமாக பிரார்த்தனை செய்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் ஒரு நிபந்தனை. நீதி பெற்றோர் பக்கம் இருந்தால்.
3) நோன்பு நோற்றிருப்பவன் கேட்கும் துஆ. நோன்பு காலத்தில் கேட்கும் துஆ என்பது கருத்தல்ல. நோன்பு காலத்தில் எந்த ஒரு காரணமுமின்றி வயிறு முட்டச்சாப்பிட்டு ஏப்பமிடுபவனின் “துஆ” அவன் தலையையே தாண்டாது.
4) நோயாளி கேட்கும் துஆ. நோயால் துவண்டு கிடக்கும் ஒருவன் அநேகமாக அல்லாஹ்வை நெருங்கினவனாகவே இருப்பான். இதனால் அவனின் “துஆ”வும் ஏற்றுக் கொள்ளப்படும்.
5) ஒரு சகோதரன் உடன் பிறந்த தனது சகோதரனுக்கு அல்லது ஒருவன் தனது நண்பனுக்கு கேட்கும் துஆ. இதற்கு ஒரு நிபந்தனை கூறப்பட்டுள்ளது. அதாவது அவனில்லாத இடத்தில் – மறைமுகமாக கேட்கும் “துஆ” ஏற்றுக்கொள்ளப்படும். இந்த நிபந்தனை முகத்துதியை தடுப்பதற்காக கூறப்பட்டதாகும்.
6) ஒரு நபீ தனது “உம்மத்” சமூகத்திற்காக கேட்கும் “துஆ”. ஒரு நபீ எதற்காக “துஆ” கேட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் சமூகத்திற்காக கேட்கும் “துஆ”வுக்கு விஷேட சலுகை உண்டு.
7) ஏற்றுக்கொள்ளப்பட்ட “ஹஜ்” செய்தவன் கேட்கும் துஆ. இது தொடர்பாக நிறைய விளக்கம் எழுத வேண்டும். கால சூழல் இடம் தராது. இருந்தாலும் சுருக்கமாகச் சொல்வதாயின் புகழுக்காக, வியாபார நோக்கத்திற்காக “ஹஜ்” செய்யாதவராயிருத்தல் வேண்டும். “ஹஜ்” தரகர்கள் இதில் அடங்க மாட்டார்கள்.
உரிய முறையில், அல்லாஹ்வுக்காக மட்டும், துய்ய எண்ணத்துடன் “ஹஜ்” செய்தவர் அன்றுப் பிறந்த பாலகனாயிற்றாரல்லவா? பாலகனின் “துஆ” பரிசுத்தமானதாகத்தானே இருக்கும்?! அதை ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்.
உலகில் நடந்த அநீதிகளில் மிகப் பெரிய அநீதி, ஸூபிஸ ஞானம் பேசியதாலும், எனது கருத்தைச் சரிகண்ட இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற பல இலட்சம் முஸ்லிம்களும் “முர்தத்” மதம் மாறியவர்களென்று அகில இலங்கை உலமா சபை “பத்வா” வழங்கியதும், இவர்களைக் கொலை செய்யலாமென்று பகிரங்கமாகச் சொன்னதுமேயாகும்.
ஆதாரம் – ஏகத்துவக் கொள்கையில் ஊடுருவல்.
பக்கம் – 20 – வெளியீடு – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா.
————————————————-
وَسَبْعَةٌ لَايَرُدُّ الله دَعْوَتَهُمْ – مَظْلُوْمٌ وَالِدٌ ذُوْ صَوْمٍ وَذُوْ مَرَضٍ
وَدَعْوَةٌ لِلْاَخِ بِالْغَيْبِ ثُمَّ نَبِيْ – لِأُمَّةٍ ثُمَّ ذُوْ حَجٍّ بِذَاكَ قُضِيْ
1.The victim. 2. Parents. 3. Fasting one. 4. Patient. 5. The one who invoke for his brother or friend. 6. A Nabee who suplicates for his community. 7. The Haji who made accepted Haj worship.
There is concession to the DUA of the above seven persons. That is, their DUA will be accepted without any delay and obstacle even though the conditions of DUA are missing.
1. “The victim” means, the one who was done injustice such as hitting him without any reason, scolding him, ill-treating him, destroying his properties and betraying him to police through fake complaint. Briefly, to hurt one’s mind. If he raises his hands towards the God, it will never be rejected by God.
لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللهِ حِجَابٌ
It is a statement of Nabee (pbuh) that there is no screen between the God and victim.
اِتَّقِ دَعْوَةَ الْمَظْلُوْمِ
“Fear on the supplication of victim is statement of Nabee (pbuh) itself. However, it is more terrible to do injustice to a sect or a community than that done to an individual. Because there is great difference between the individual’s hand raising and many unto the God. Even if the wrong doer was not punished, the victim must keep patience for the above statements of Nabee (pbuh) will never fizzle out and the God’s mill grinds slow but sure. When the punishment descends at the correct circumstance you will delight.
2. If the parents invoke for children favourably or unfavourably it will be accepted by God when only parents’ side is reasonable.
3. DUA of a fasting man also is accepted. It does not mean only in the Ramzan month. DUA of glutton will never be accepted.
4. A patient must be close to Allah since he is struggling with disease. So his DUA al so is accepted by God.
5. “DUA” of a brother for his sibling or a chum will be accepted. Here is a condition that the brother should invoke while the said two are absent. This if for avoiding the flattery.
6. DUA of a Nabee who invokes for his community. Actually Dua of Nabee is accepted whatever he asks for. However, here is concession when it is asked for the sake of his community.
7. DUA of one who made accepted Haj worship. It should be elaborated here. But this circumstance is not suitable now. Briefly, the one who should have done Haj only for God himself. Haj brokers’ Haj worship is not eligible here.
I had spoken SUFISM and hundred thousands of Muslims are following me. But the ACJU has declared a facile FATHWA against me and my followers are MURTHATH (converts) It is the most worst injustice occurred in the world.
GOD’S MILL GRINDS SLOW BUT SURE.