Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

தமிழ் நாடு “ஜமாஅதுல் உலமா” – உலமா சபை – பீ.ஜே என்பவருக்கு எதிராக வழங்கியுள்ள “பத்வா” மார்க்கத் தீர்ப்பை காத்தான்குடியில் இயங்கிவரும் “அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா” முழுமையாகச் சரிகண்டு செயல்படுத்துகிறது.
இதேபோல் “அல்ஜாமிஉல் அஸ்ஹர்” பல்கலைக் கழகத்தை தனது இதயமாகக் கொண்ட மிஸ்ர் – கெய்ரோ – நாட்டின் மத விவகார அமைச்சு, வஹ்ஹாபிகளின் தலைவர்களான இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப், இப்னு பாஸ் ஆகியோர் எழுதிய அறபு மொழியிலான நூல்களையும், அவர்களின் பேச்சுள்ள CD இறுவெட்டுக்களையும் தடை செய்து அங்குள்ள பள்ளிவாயல்கள், நூலகங்களிலிருந்து அவற்றை அகற்றியதையும் எமது “ஸூபிஸ உலமா சபை”  வரவேற்கிறது. 

எனவே, “சுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைக்கும், “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்திற்கும் எதிரான கருத்துக்களையும், வஹ்ஹாபிஸக் கருத்துக்களையும் நமது இலங்கைத் திருநாட்டில் வாழும் பொது மக்களிடம் கூறி அவர்களை வழிகேட்டில் வீழ்த்திக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக தம்மை சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பென்று பிரகடனம் செய்து வருகின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், மற்றும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” அமைப்புக்களும், “தரீகா” அமைப்புக்களும் செயல்பட வேண்டுமென்று மேற்படி “ஸூபிஸ உலமாஉகள் சபை” அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

தலைவர், செயலாளர்
அகில இலங்கை ஸூபிஸ உலமாஉகள் சபை
காத்தான்குடி
அலைபேசி : 0777733786, 0773201811

இப்னு தைமிய்யா பற்றி இமாம் ஷெய்குல் இஸ்லாம் இப்னு ஹஜர் அல் – ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்பதாவல் ஹதீதிய்யா” என்ற நூல் 86ம் பக்கத்தில் கூறியுள்ள தகவல் பின்வருமாறு. இது உலமாஉகளின் நன்மை கருதி வெளியிடப்படுகிறது.
قال الإمام شيخ الإسلام ابن حجر الهيتمي رحمه الله ( إبن تيمية عبد خذله الله وأضله وأعماه وأصمه وأذله، وبذلك صرح الأئمة الذين بينوا فساد احواله وكذب أقواله، ومن اراد ذلك فعليه بمطالعة كلام الإمام المجتهد المتفق على امامته وجلالته وبلوغه مرتبة الإجتهاد أبى الحسن السبكي وولده التاج والشيخ الإمام العز بن جماعة وأهل عصرهم وغيرهم من الشافعية والمالكية والحنفية، ولم يقصر اعتراضه على متأخري الصوفية، بل اعترض على مثل عمر بن الخطاب وعلي بن أبي طالب رضي الله عنهما كما يأتي ، والحاصل أن لا يقام لكلامه وزن، بل يرمى فى كل وعر وحزن، ويعتقد فيه أنه مبتدع ضال ومضل جاهل غال، عامله الله بعدله وأجارنا من مثل طريقته وعقيدته وفعله آمين،)   
மேலும் “றமழான் மாதத்தின் 17ம் நாள் “பத்ர்” ஸஹாபாக்களின் நினைவு நாளாயிருப்பதால் அன்று அவர்களின் வரலாறுகளை மக்களுக்கு எடுத்துக்கூறி “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையில் பொது மக்களை நிலை பெறச் செய்ய அனைவரும் ஆவன செய்ய வேண்டும்” என்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்ட அறிக்கையையும் எமது ஸூபிஸ உலமாஉகள் சபை சரிகண்டு செயல்படுத்த உள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாஉகள் சபையின் மேற்கண்ட அறிக்கை ஸஹாபாக்கள், அவ்லியாஉகளின் நினைவு தினங்களை கவனத்திற் கொண்டு செயல்பட வேண்டுமென்ற “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையை பிரதிபலிப்பதாக உள்ளதால் அவர்களின் இவ்வறிக்கையையும் எமது சபை சரிகண்டு அவர்களைப் பாராட்டுகிறது.
“ஸுன்னத் வல் ஜமாஅத்”  கொள்கைக்கு (மறைமுகமாகவேனும்) ஆதரவு வழங்க முன்வந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஸுன்னத் வல் ஜமாஅத் இவையென்றும், வஹ்ஹாபிஸக் கொள்கை இவையென்றும் பட்டியல் போட்டு ஓர் அறிக்கை வெளியிடுமாயின் அது முஸ்லிம் சமுகத்திற்குச் செய்கின்ற பெரும் சேவையாக இருப்பதுடன் மக்களை வழிகேட்டில் இருந்து காப்பாற்றுவதற்கும் உதவும்.
அல்ஹம்துலில்லாஹ்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments