Sunday, April 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பிறை கண்டால் ஓத வேண்டியது

பிறை கண்டால் ஓத வேண்டியது

தொகுப்பு : மௌலவி அல் ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ

ஒவ்வொரு மாதமும் தலைப் பிறை பார்ப்பது “ஸுன்னத்” ஆன நற்காரியமாகும்.

“ஹிலால்” என்றாலும், “கமர்” என்றாலும் சந்திரன் என்றுதான் பொருள் கூறப்படுகிறது. எனினும் இதில் சிறிய அளவிலான கருத்து வேறுபாடு உண்டு.

قال ابن علان رحمه الله تعالى ”الفتوحات” (4ஃ327) قال الجوهري وصاحب ”المطلع” اَلْهِلَالُ أَوّلُ لَيْلَةٍ وَالثانية والثالثة، ثُمّ هو قَمَرٌ،

இப்னு அலான் றஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்புதூஹாத்” – 4 – 328ல் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

ஜவ்ஹரீ அவர்களும், “அல்மத்லஉ” நூலாசிரியர் அவர்களும் “ஹிலால்” என்று முதலாம், இரண்டாம், மூன்றாம் பிறைகளுக்கு மட்டுமே சொல்லப்படும் என்று கூறியுள்ளார்கள். நாலாம் இரவிலிருந்து “ஹிலால்” என்று சொல்லப்படாமல் “கமர்” என்று சொல்லப்படுமென்று கூறியுள்ளார்கள். இது சரியான விளக்கம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

عَنْ طَلْحَة بْنِ عُبَيْدِ اللَّهِ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الهِلَالَ قَالَ:”اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِاليُمْنِ وَالإِيْمَانِ وَالسَّلَامَةِ وَالإِسْلَامِ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ”
(رواه الدارمي – 1730 الترمذ – 345)

“நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “ஹிலால்” பிறையை கண்டால் மேற்கண்டவாறு அறபு மொழியில் ஓதுவார்கள்.

பொருள் : யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானுடைய, அருள் உடைய பிறையாகவும், ஈடேற்றமும், இஸ்லாமும் உடைய பிறையாகவும் ஆக்கி வைப்பாயாக! எனது இரட்சகனும், உனது இரட்சகனும் அல்லாஹ்தான் என்று சொல்வார்கள்.”

(துர்முதீ – 345, தாரமீ – 1730)

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ رَسُولُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى الْهِلَالَ قَالَ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، وَالتَّوْفِيقِ لِمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ»

“நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “ஹிலால்” பிறையை கண்டால் மேற்கண்டவாறு ஓதுவார்கள்.

பொருள் : அல்லாஹ் பெரியவன். யா அல்லாஹ்! இந்தப் பிறையை எங்களுக்கு ஈமான் உடையதாகவும், பயம் தீர்ந்ததாகவும் ஆக்கியருள்வாயாக! இன்னும் ஈடேற்றம், இஸ்லாம் உடையதாகவும், நீ விரும்பக் கூடியதற்கும், பொருந்திக் கொள்ளக் கூடியதற்கும் நல்லனுகூலம் செய்யக் கூடியதாகவும் ஆக்கி அருள் புரிவாயாக! எங்களுடைய இரட்சகனும், உன்னுடைய இரட்சகனும் அல்லாஹ்தான்.

(ஆதாரம் – தாரிமீ – 1729, அறிவிப்பு – இப்னு உமர்)

மேற்கண்ட இரண்டு ஹதீதுகளிலும் “ஹிலால்” என்ற சொல்லையே நபீ அலைஹிஸ்ஸலாம் பாவித்திருப்பதால் “ஹிலால்” என்ற சொல்லுக்கு மேலே கூறிய விளக்கத்தின் படி தலைப் பிறையையும், இரண்டாம், மூன்றாம் நாள் பிறையையும் பார்க்கும் போதுதான் மேற்கண்ட ஓதலை ஓத வேண்டுமென்பது விளங்கப்படுகிறது. மூன்று நாள் கழிந்த பின் பிறையை காணும் போது இவ்வாறு ஓதுவது “ஸுன்னத்” இல்லாது போனாலும் ஓதுவது பாவமாகாது.

இன்றிரவு “மக்ரிப்” நேரம் புனித றமழான் மாதப் பிறையை பார்த்து மேற்கண்ட ஓதலை ஓதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் தலைப் பிறை பார்ப்பது “ஸுன்னத்” ஆனதேயாகும். பிறையை கண்டதும் நல்ல மனிதனின் முகம் பார்த்து “முஸாபஹா” செய்யும் வழக்கம் சில ஊர்களில் உள்ளது. இது நமது இஸ்லாம் மார்க்கத்தில் “பித்அத்” ஆனதல்ல.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments