Wednesday, May 1, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கண்மணி நாயகம் அவர்களை கனவில் காணலமா?

கண்மணி நாயகம் அவர்களை கனவில் காணலமா?

(தொகுப்பு மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)

عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَفْضَلُ مَا يَرَى أَحَدُكُمْ فِي مَنَامِهِ أَنْ يَرَى رَبَّهُ، أَوْ يَرَى نَبِيَّهُ، أَوْ يَرَى وَالِدَيْهِ مَاتَا عَلَى الْإِسْلَامِ (السنّة لابن أبي عاصم)

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ مَنْ رَآنِي فِي الْمَنَامِ، فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَمَثَّلُ بِي (مسند أحمد)

عن أبي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ رَآنِي فِي المَنَامِ فَسَيَرَانِي فِي اليَقْظَةِ، وَلاَ يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي (صحيح البخاري)

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ رَآنِي فِي الْمَنَامِ، فَإِيَّايَ رَأَى، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَخَيَّلُ بِي (مسند أحمد)

قال رسول الله صلّى الله عليه وسلّم مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَسَيَرَانِي فِي الْيَقَظَةِ، أَوْ فَكَأَنَّمَا رَآنِي فِي الْيَقْظَةِ، لَا يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي (مسند أحمد)

عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَأَى الْحَقَّ تعليق المحقق (إسناده صحيح)

மேற்கண்ட ஆறு ஹதீதுகளும் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் கனவில் காண முடியும் என்பதற்கான ஆதாரங்களாகும். வஹ்ஹாபிகள் கூட இந்த ஹதீதுகளை மறுத்தோ, பலம் குறைந்ததென்று குறை கூறியோ நபீ பெருமானைக் கனவில் காண முடியாதென்று சொல்லமாட்டார்கள் என்று நினைக்கின்றேன். ஆயினும் வஹ்ஹாபிகளில் ஒருவர் கூட நபீ பெருமானைக் கனவில் கண்டிருப்பார்கள் என்று நான் நம்பவுமில்லை. நம்பவுமாட்டேன்.

ஏனெனில் வஹ்ஹாபிஸக் கொள்கையுள்ளோர் அனைவரும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தரக் குறைவாகப் பேசிய, எடை போட்ட, “தாரிஷ்” தபால்காரன் – “போஸ்ட்மேன்” – என்று அவர்களை இழித்துரைத்தவர்களின் வாரிஸ்களாவர். அவர்களின் உடமைகள் எல்லாம் இவர்களுக்கேதான்.

الوهّابيّون كلّهم وَرَثَةُ الإِبْنَيْنِ المشهورَيْنِ فى العالَم ابن تيميّة وابن عبد الوهّاب، لم يورثوا الدنانير والدراهم، وإنّما ورثوا الضلالةَ والكفرَ والبدعة، فطُوبَى لأعدائهم، وويل لأحبابهم وأتباعهم، وهم أشدُّ ضررا من الوباء والطاعون وكرونا ويرس

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் கனவில் காண்பது கிடைத்தற்கரிய நற் பாக்கியமாகும். நான் எழுதி வெளியிட்ட “நனவாகும் ஒரு கனவு” என்ற நூலில் இது தொடர்பாக நான் எழுதியுள்ளேன். முதலில் மேற்கண்ட நபீ மொழிகளுக்கான பொருளைக் கூறிவிட்டு விளக்கம் எழுதுகிறேன். இன்ஷா அல்லாஹ்.

ஹதீது ஒன்று: உங்களில் ஒருவன் காணும் கனவுகளில் மிகச் சிறந்தது அவன் தனது “றப்பு” அல்லாஹ்வைக் காண்பதாகும். அல்லது அவனுடைய நபீயை காண்பதாகும். அல்லது அவனுடைய முஸ்லிம்களாக மரணித்த பெற்றோரைக் காண்பதாகும் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: அஸ்ஸுன்னா லிப்னி அபீ ஆஸிம்
அறிவிப்பு: அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு

ஹதீது இரண்டு: யாராவது என்னைக் கனவில் கண்டால் அவர் நிச்சயமாக என்னையே கண்டார். ஏனெனில் ஷெய்தான் – ஷாத்தானுக்கு என்னுருவில் வர முடியாது. என்னைப் போல் நடித்து ஏமாற்ற முடியாது என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

ஹதீது மூன்று: என்னைக் கனவில் கண்டவன் பின்னர் விழிப்பிலும் காண்பான். ஷெய்தானுக்கு என்னுருவில் தோன்ற முடியாது என்று பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் சொன்னதை நான் கேட்டேன் என்று ஸெய்யிதுனா அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரீ

ஹதீது நான்கு: என்னைக் கண்டவன் என்னையே கண்டான். ஏனெனில் ஷெய்தானுக்கு எனது உருவில் தோன்ற முடியாது என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

ஹதீது ஐந்து: என்னைக் கனவில் கண்டவன் பின்னர் என்னை விழிப்பிலும் காண்பான். அல்லது அவன் என்னை விழிப்பில் கண்டவன் போலாவான். ஷெய்தானால் என்னுருவில் வரமுடியாது என்று கண்மணி நாயகம் அருளிச் சென்றார்கள்.
ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

ஹதீது ஆறு: என்னைக் கனவில் கண்டவன் “ஹக்”கையே கண்டான்.
ஆதாரம்: ஸுனனுத் தாரமீ, அறிவிப்பு: கதாதா றழியல்லாஹ அன்ஹு

கனவுகளில் மிகச் சிறந்த கனவு ஒருவன் தனது “றப்பு” இறைவனைக் காண்பதாகும். அல்லது தனது நபீயை காண்பதாகும். அல்லது இஸ்லாமியர்களாக மரணித்த தனது பெற்றோரைக் காண்பதாகும்.

இறைவனைக் காணும் கனவுக்கு முதலிடமும், நபீயைக் காணும் கனவுக்கு இரண்டாம் இடமும், முஸ்லிம்களாக மரணித்த பெற்றோரைக் காணும் கனவுக்கு மூன்றாம் இடமும் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் வழங்கியுள்ளார்கள்.

இறைவனைக் கனவில் காண்பதற்கோ, நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் காண்பதற்கோ மேற்கண்ட ஹதீதுகளில் எந்தவொரு நிபந்தனையும், அல்லது எந்த ஒரு தகைமையும் கூறப்படவில்லை. நான் அறியாத ஹதீதுகளில் அவ்வாறு ஏதும் நிபந்தனையோ, தகைமையோ கூறப்பட்டிருந்தால் அறிந்தவர்கள் எமக்கு அறிவித்தால் பெரிய உதவியாக இருக்கும்.

மேற்கண்ட ஆறு ஹதீதுகளில் ஒரு ஹதீதைத் தவிர ஏனைய ஐந்து ஹதீதுகளிலும் مَنْ – “மன்” என்ற சொல்தான் வந்துள்ளது. இது யார் கனவு கண்டாலும் என்ற கருத்தை தருகின்ற சொல்லாகும். இச் சொல் மூலம் இறைவனைக் கனவில் காண்பதற்கோ, நபீ பெருமானைக் கனவில் காண்பதற்கோ எந்த ஒரு தகைமையும், நிபந்தனையும் தேவையில்லை என்பது விளங்கப்படுகின்றது.

இது மட்டுமல்ல இன்னுமொரு விடயமும் விளங்கப்படுகின்றது. அதாவது مَنْ – “மன்” என்ற சொல் முஸ்லிமை மட்டும் குறிக்காது. இது தொடர்பாக எனது கருத்தை நான் எழுத விரும்பவில்லை. ஏனெனில் இது தொடர்பாக நான் எழுதும் ஒவ்வோர் எழுத்தும் நன்றியுள்ள பிராணிகளுக்கு கோழி புரியாணி கிடைத்தாற் போலாகிவிடும். கொதித்தெழுந்துவிடுவார்கள் என்றஞ்சிவிடுகின்றேன். குறை குடங்களும், அரை வேக்காடுகளும் உள்ளவரை அறிவு ஞானங்களை அப்பட்டமாக அள்ளி வழங்குவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாயிற்று. “தக்வா” வியாபாரிகள் குறைந்து “பத்வா” வியாபாரிகள் மலிந்து விட்டார்கள். முப்திகளை பேமன்டிலும் வாங்கலாம் போலிருக்கு.

இறைவனைக் கனவில் காண்பதற்கோ, நபீ பெருமானைக் கனவில் காண்பதற்கோ ஹதீதுகளில் எந்தவொரு தகைமையும் கூறப்படவில்லையாதலால் நல்லவர்கள், கெட்டவர்கள் அனைவரிலும் நற்பாக்கியமுள்ளவர்களுக்கு மட்டும் தவறாமல் கிட்டும். நக்குத் தின்பதற்கும் கூட “நஸீப்” வேண்டுமென்று முன்னோர் சொல்வர்.

ஸூபிஸ வழியில் செல்லும் ஸூபீ மகான்களிற் சிலர் பெருமானாரைக் கனவில் காண்பதற்கு காண்பவர்களில் சில தகைமைகள் இருப்பதவசியம் என்று கூறி அத்தகைமைகள் பற்றியும் கூறியுள்ளார்கள். இவர்களின் கூற்றுப்படி முஸ்லிம்களில் 99 வீதமானோர் பெருமானாரைக் கனவில் காணும் பாக்கியத்தை இழக்க நேரிடும். அதோடு அவர்கள் கூறும் தகைமையில்லாதவர்களிற் பலர் கண்டதாகக் கூறுவதையும் மறுக்க வேண்டியேற்படும்.

எனவே, நாம் ஸூபிஸ மகான்களின் கருத்தை மறுக்காமல் அவர்கள் எதற்காக அத்தகைமைகள் அவசியமென்று கூறினார்கள் என்பதற்கான காரணத்தை ஆய்வு செய்தல் வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்தால் ஸூபீ மகான்களுக்கு நபீ பெருமான் மீதுள்ள அன்பும், கண்ணியமுமே அதற்கான காரணம் என்பது தெளிவாகும். இது தவிர தகைமையில்லாதவர்களால் காணவே முடியாதென்பது அவர்களின் கருத்தல்ல.

நாம் அவர்கள் கூறிய தகைமைகள் “பர்ழ்” கட்டாயமானவையென்று கருதாமல் “ஸுன்னத்” ஆனவையென்று கருதிச் செயற்பட வேண்டும்.

இது எதுபோலெனில் ஒரு நாட்டின் ஜனாதிபதி அல்லது ஒரு மதப் பெரியார் ஓர் ஊருக்கு வந்தால் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு கை கொடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு நெருங்கியவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஊர் மக்கள் அனைவருக்கும் கிடைக்காது. இந்த ஏற்பாடு – இவ்வாறு செய்தல் வந்த பெரியார்களை கண்ணியப்படுத்துவதாக ஆகுமேயன்றி ஊர் மக்களைப் புறக்கணித்ததாகாது. எனவே தகைமைகள் கூறிய ஸூபீ மகான்களை தகைமையற்றோர் தவறாகப் புரிந்து கொள்ளுதல் கூடாது.

நபீகளாரைக் கனவில் காண முடியும் என்பதற்கு ஆறு ஹதீதுகளில் முதலாவது ஹதீதின் பொருளை கடந்த பதிவில் எழுதியிருந்தேன்.

கனவில் சிறந்தது மனிதன் இறைவனைக் கனவில் காண்பது. அல்லது ஒருவன் தனது நபீயைக் கனவில் காண்பது. அல்லது ஒருவன் தனது பெற்றோர் முஸ்லிம்களாக மரணித்திருந்தால் அவர்களைக் காண்பது.

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் கனவில் காண்பதிலோ, மரணித்த முஸ்லிமான பெற்றோரைக் காண்பதிலோ சிக்கல், குழப்பம் ஒன்றுமே இல்லை. ஏனெனில் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், பெற்றோர் எவராயிருந்தாலும் அவர்களுக்கும் குறித்த ஓர் உருவமுண்டு. ஆகையால் அவர்களைக் கனவில் காணலாம். விழிப்பிலும் காணலாம்.

ஆனால் அல்லாஹ்வோ உருவமில்லாதவன். உருவமில்லாத ஒருவனை அல்லது உருவமில்லாத ஒன்றை கண்ணால் பார்த்தல் அசாத்தியமானதாகும்.

எனவே, இது தொடர்பாக தெளிவாகவும், விளக்கமாகவும் எழுத வேண்டியுள்ளதால் முதலில் நபீ பெருமானைக் கனவில் காண்பது தொடர்பாகவும், பெற்றோரைக் காண்பது தொடர்பாகவும் எழுதிவிட்டு இறுதியில் அல்லாஹ்வைக் கனவில் காண்பது தொடர்பாக எழுதுகிறேன்.

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை ஒருவன் கனவில் கண்டால் கனவில் தோன்றியது அவர்கள்தானா? அல்லது அவர்களின் தோற்றத்தில் – உருவத்தில் ஷெய்தான் தோன்றி அவர்கள் போல் நடித்து தன்னை ஏமாற்றிவிட்டானா? என்று கனவு கண்டவன் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் ஷெய்தானுக்கு என்னுருவில் வந்து என்னாக நடிக்க முடியாதென்று நபீயவர்களே சொல்லியுள்ளதால் அது நடக்காது.

ஒருவன் தான் கண்ட கனவில் தோற்றியவர் நபீமணிதான் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது? தோற்றியவர், தான் நபீயென்று சொல்ல வேண்டுமா? அல்லது வேறெந்த வழியில் அவர்கள் நபீதான் என்பதைத் தெரிந்து கொள்வது?

கனவில் தோற்றியவர்கள் தன்னை நபீயென்று சொன்னால் அவர்களை நபீயென்று நம்பவேண்டும். அதில் சந்தேகம் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஷெய்தானுக்கு நபீயவர்களின் தோற்றத்தில் வர முடியாதென்றால் வேறெவனுக்கும் அவர்களின் தோற்றத்தில் வரமுடியாதென்றும், அவ்வாறு வந்து தன்னை நபீயென்று சொல்ல முடியாதென்றும் நம்புதல் அவசியமே!

சிலர் என்னிடம் வந்து நான் நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் கனவில் கண்டேன் என்று சென்னால் அவர்கள் நபீகள் என்று உங்களுக்கு எவ்வாறு தெரியும் என்று நான் கேட்பேன். அதற்கவர் தான் கண்ட கனவை என்னிடம் விவரிப்பார்.

உதாரணமாக (ஓர் அழகிய பள்ளிவாயலைக் கண்டேன். அங்கு ஏதோ ஒரு “மஜ்லிஸ்” நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொள்வதற்காக நூற்றுக்கணக்கானோர் வந்துள்ளார்கள். அவர்களில் அதிகமானோர் தாடி, தலைப்பாகையுடன் இருந்தார்கள். மஜ்லிஸின் நடுவில் அழகிய விரிப்பொன்று விரிக்கப்பட்டிருந்தது. வந்திருந்த ஒவ்வொருவரின் கையிலும் இருந்த கொடியில் مَرْحَبًا يَا رَسُوْلَ الله என்று எழுதப்பட்டிருந்தது. நான் அங்கு கூடி நின்றவர்களிடம் இங்கு என்ன விஷேஷம் என்று கேட்டேன். பெருமானார் வருகிறார்கள் என்று சொன்னார்கள்.

அவ் வேளை ஹஸ்றத்மார் போன்ற தோற்றத்தில் பலர் கஸீதாக்கள் பாடி வருகின்றார்கள். அவர்களுக்கு முன்னால் அழகிய தோற்றமுள்ள ஒருவரும் வருகிறார். அவர்தான் நபீகள் நாயகம் என்று மக்கள் சொன்னார்கள்) என்று கனவு கண்டவர் சொல்வது போன்று.

நான் அவருக்கு நீங்கள் கண்டது நபீகட்கரசர் மன்னர் மஹ்மூத் அவர்களைத்தான் என்று சொல்வேன்.
சொல்பவர் பொய் சொன்னால் அதற்கான தண்டனையை அவர் பெற்றுக் கொள்வார்.

பெருமானாரைக் கனவு கண்டதாகச் சொல்பவரிடம் எவ்வாறு கண்டீர்கள் என்று கேட்கும் போது அவர் கூறக் கூடிய விபரங்களைக் கொண்டு அவருக்கு விடை சொல்ல முடியும். விடை சொல்பவர் ஓரளவேனும் மார்க்க ஞானமுள்ளவராக இருத்தல் அவசியம். அது அரை வேக்காடுகளால் முடியாது.

இன்னுமொரு வகையில் கனவில் தோற்றியவர் யாரென்று அறிந்து கொள்ள முடியும். அதாவது கனவு காண்பவரின் மனதில் தோற்றியவர் இன்னார்தான் என்று ஓர் உதிப்பு வருமாயின் அவர் தான் நினைத்தவராகவே இருப்பார். உதாரணமாக ஒருவர் அழகிய தோற்றமுள்ள, தலைப்பாகை கட்டிய, அழகான தாடியுள்ள, மார்க்கத்திற்கு முரணில்லாத அமைப்பில் காணும் போது அவரின் மனதில் இவர்கள் றஸூலாக இருப்பார்கள் என்றோர் எண்ணம் உதிக்குமாயின் அவர் தான் நினைத்தவராகவே இருப்பார் என்று கொள்வதற்கும் சாத்தியமுண்டு. அல்லது அவரின் மனதில் இவர்கள் முஹ்யித்தீன் ஆண்டகையாக இருப்பார்கள் என்றோர் எண்ணம் உதிக்குமாயின் அவர்கள் அவர் நினைத்தவர்தான்.

إنّما كان الشيطان لا يَتمَثَّلُ به صلّى الله عليه وسلّم لِمَا وَرَدَ أنّه صلّى الله عليه وسلّم لمّا وُلِدَ جَائه الشّيطانُ وجنودُه حتّى دخلوا مكّة، فوجدُوا نورًا يسطع منه إلى السّماء له شُعاءٌ، كلّما دنا منه شيطانٌ اِحْتَرَقَ، فمن ذلك اليوم والشّياطين كلّهم يفِرُّون ويفزَعُون من صورته صلّى الله عليه وسلّم، ولأجل هذا الفزع أسلَم قرينُه، كما جاء فى الحديث بناءً على ضَبْطِ اَسْلَمَ بفتح الميم، وقد ضَبَط بعضهم بضَمِّها، فهذا هو السّبب فى كون الشياطين لا يتمثّلُ به صلّى الله عليه وسلّم،
(اليواقيت والجواهر، الجزء الأوّل، ص – 118)

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் தோற்றத்தில் ஷெய்தான் வரமுடியாமற் போனதற்கான காரணம் பின்வருமாறு.

நபீ அவர்கள் மக்காவில் பிறந்த நேரம் அவர்களை வழிகெடுக்கும் நோக்கத்தில் ஷெய்தானும், அவனின் பட்டாளங்களும் திரு மக்கா நகருக்கு வந்தார்கள். திரு மக்கா நகரிலிருந்து விண்ணை நோக்கி சுடரோடு கூடிய ஒளியொன்று செல்வதைக் கண்டனர். அந்த ஒளியை அவர்களில் யாராவது நெருங்கினால் அவர் எரிந்து சாம்பலாகிவிடுகிறார்.

அன்று முதல் இன்றுவரை நபீ பெருமானின் தோற்றத்தை அவர்களில் யாராவது கண்டால் பயந்து ஓட்டம் பிடித்துவிடுவார்கள்.

ஒரு குழந்தை பிறக்கும் வேளையில் அக்குழந்தை மீது ஒரு “ஜின்”னும், ஒரு “மலக்”கும் சாட்டப்படுவார்கள் என்று நபீகளார் கூறினார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த நபீ தோழர்களில் ஒருவர் அல்லாஹ்வின் திருத்தூதே உங்கள் மீதுமா சாட்டப்பட்டதென்று கேட்டார்கள். ஆம் என்றார்கள் பெருந்தகை பெருமான் அவர்கள். எனினும் அல்லாஹ் அவனை வெற்றி கொள்ளும் ஆற்றலை எனக்கு வழங்கினான். அதனால் அவன் எனக்கு வழிப்பட்டு விட்டான். அவன் என்னைத் தீமையான காரியத்தைக் கொண்டு ஏவமாட்டான். மாறாக நன்மையான காரியத்தைக் கொண்டு மட்டுமே ஏவுவான் என்று அருளினார்கள்.

ஹதீது வசனம்

عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ وُكِّلَ بِهِ قَرِينُهُ مِنَ الْجِنِّ وَقَرِينُهُ مِنَ الْمَلَائِكَةِ» . قَالُوا: وَإِيَّاكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَإِيَّايَ، لَكِنَّ اللَّهَ أَعَانَنِي عَلَيْهِ فَأَسْلَمَ، فَلَا يَأْمُرُنِي إِلَّا بِخَيْرٍ (مسند أحمد)

‘قوله وُكِّلَ به قرينُه من الجنِّ وقرينُه من الملائكة أي لكلّ أحدٍ من بني آدم صاحبٌ من المَلَك وصاحبٌ من الشيطان، وهوقرينٌ، فقيرنُه من الملائكة يأمره بالخير، واسمُه المُلهِمُ، وقرينُه من الشيطان يأمره بالشرّ، واسمُه اَهْرُمَنْ والوسواسُ،

قوله صلّى الله عليه وسلّم ‘فأسلم إمّامفتوحةُ الميم على بناء الماضي من الإسلام ، وإمّا مضمومةُ الميم على بناء المضارع من السلامة، (اللّمعات) كما فى هامش مشكاة المصابيح، فى تفسير الحديث المذكور،
ஹதீதில் “ஜின்” என்று கூறப்பட்டுள்ளது “ஷெய்தான்” என்பவனைக் குறிக்கும்.
எந்த ஒரு மனிதனாயினும் அவனுக்கு குழந்தை பிறந்தவுடன் – அது மகனாயிருந்தாலும், மகளாயிருந்தாலும் அக்குழந்தையுடன் ஒரு ஷெய்தானும், ஒரு “மலக்”கும் சாட்டப்படுவார்கள். ஷெய்தான் அக்குழந்தையை தீமை கொண்டு ஏவுவான். “மலக்” நன்மை கொண்டு ஏவுவார்.

மேற்கண்ட ஹதீதில் ஒரு நுட்பம் உள்ளது. அதாவது ஹதீதில் فأسلم என்று ஒரு சொல் வந்துள்ளது. இச் சொல்லின் இறுதி எழுத்தான “மீம்” என்ற எழுத்துக்கு “பத்ஹ்” செய்து فَأَسْلَمَ என்று வாசிக்கவும் முடியும். அதற்கு “ழம்மு” செய்து فَأَسْلَمُ என்று சொல்லவும் முடியும்.

“மீம்” என்ற எழுத்துக்கு “பத்ஹ்” செய்து فَأَسْلَمَ என்று வாசித்தால் அவன் – ஷெய்தான் இஸ்லாமாகிவிட்டான் என்று பொருள் வரும். அதாவது “ஷெய்தான்” பெருமானாருக்கு வழிப்பட்டுவிட்டான், அவர்களுக்கு தலை சாய்ந்துவிட்டான் என்று பொருள். ஏனெனில் “அஸ்லம” என்ற சொல்லுக்கு மேற்கண்ட பொருள் அகராதியில் உண்டு.

“மீம்” என்ற எழுத்துக்கு “ழம்மு” செய்து فَأَسْلَمُ என்று வாசித்தால் நான் அவனின் தீமையிலிருந்து ஈடேற்றம் பெறுகிறேன் என்று பொருள் வரும்.

மேற்கண்டவாறு மீமுக்கு இரண்டு வகையில் குறியீடு செய்து வாசித்துப் பொருள் கொள்வதற்கும் சாத்தியமுண்டு.

பிறக்கின்ற பிள்ளை மீது சாட்டப்படுகின்ற “மலக்” உடைய பெயர் “முல்ஹிம்” – அல்லது “முல்ஹம்” என்றும், ஷெய்தானின் பெயர் “அஹ்றுமன்”என்றும் சொல்லப்படும். இச் சொல் பாரசீக மொழியிலுள்ள சொல்லாகும். இதற்கு “துஷ்மன்” கெட்டவன் என்ற பொருள் உண்டு.

كيف عَصَمَ الله صورة محمد صلّى الله عليه وسلّم؟ ولم يَمنَعْ تَصَوُّرَ الشَّياطِين ودعواهم أنّهم الحقُّ تبارك وتعالى؟

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் உருவத்தில் ஷெய்தான் வரமுடியாமல் அல்லாஹ் பாதுகாத்தான். ஆயினும் அல்லாஹ் போல் ஷெய்தான்கள் வந்து தான் அல்லாஹ்தான் என்று வாதிடாமல் பாதுகாக்கவில்லை.. இது ஏன்?

فالجواب كما قاله الشّيخ الأكبر محي الدين ابن عربي قُدّس سِرّه فى الباب الأربعين وخمسمأةٍ من الفتوحات المكيّة: ‘إنّ الشّياطين إنَّمَا لّبَّسَتْ على بعض الحمقَى بالتَّصَوُّرِ بصورةٍ اِدَّعوا أنّها صورة الحقّ لكون الحقّ تعالى ليس له صورةٌ تُعقلُ، فلذلك جاء الشّياطين إلى جماعة فى المنام وقال لهم إنّي أنا الله، فمِنهم من هَدَى الله فَرَدَّهُ خاسِأً، ومنهم من حقَّتْ عليه الضّلالة،
بِخِلَافِ محمدٍ صلّى الله عليه وسلّم، فإنّ له صورةً معقولةً ثابتةَ الأوصافِ فى الأحاديث الصحيحة، فإذا جاء إبليسُ فى صورة غيرها رُدَّتْ عليه، حتّى قالوا مِن شرطِ الرؤية الصحيحة أن يراه صلّى الله عليه وسلّم مَكسُورَ الثَّنِيَّةِ كما كان فى حياته،

ومعنى قوله فى الحديث السابق ‘ فقد رآني ‘ أي رأى حقيقةَ جسمي وروحي وصورتي معا، وذلك أنّ الأنبياء عليهم الصلاة والسّلام لا تَبْلَى أجسادُهم ولا تَتَغَيَّرُ صورُهم، وهم فى قبورهم يصلّون كما جائت فى الأحاديث، (اليواقيت، الجزء الأوّل، ص 118)
சுருக்கிய மொழியாக்கம்:

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் உருவத்தில் ஷெய்தானுக்கு வரமுடியாமல் அல்லாஹ் அவர்களின் உருவத்தை பாதுகாத்தான். ஆயினும் ஷெய்தான் கனவில் அல்லாஹ் போல் நடித்து, நான்தான் அல்லாஹ் என்று சொல்லி மக்களை வழிகெடுப்பதைத் தடுக்கவில்லை. இது ஏன்?

இக்கேள்விக்கான விளக்கமான பதில் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்றுஹு அவர்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” என்ற ஞானக்களஞ்சியம் 540வது பாடத்தில் கூறப்பட்டுள்ளது. அதன் சுருக்கம் பின்வருமாறு.

நபீ பெருமானாருக்கு குறிப்பான ஓர் உருவம் – தோற்றம் இருந்தது போல் அல்லாஹ்வுக்கு எந்தவொரு குறிப்பான உருவமும் – தோற்றமும் இல்லை. ஆகையால் ஷெய்தான் எந்த உருவத்திலாவது கனவில் தோன்றி நான்தான் அல்லாஹ் என்று சொன்னால் மார்க்க விளக்கமும், கொள்கையும் தெரியாதவர்கள் தமது அறிவின்மையால் ஏமாந்து வழிதவறிவிடுவார்கள்.

ஷெய்தான் ஏதேனுமோர் உருவத்தில் ஒருவனின் கனவில் தோன்றி நான்தான் அல்லாஹ் என்று கூறினால் அவரை எதிர்த்து நீ அல்லாஹ் அல்ல, நீ ஷெய்தான் என்று கனவு காண்பவன் சொல்வதற்கு அவனிடம் எந்த ஓர் ஆதாரமும் இல்லை. கனவு காண்பவன் ஷெய்தானிடம் அல்லாஹ்வுக்கு உருவமில்லை நீயோ உருவத்தில் வந்துள்ளாய் ஆகையால் உன்னை நம்ப முடியாதென்று அவனுக்குச் சொல்ல முடியாது. ஏனெனில் உருவமில்லாத ஒருவனை கனவுலகில் உருவத்தில் காண முடியும் என்பதற்கு ஹதீதுகளும், வரலாறுகளும் ஆதாரங்களாக உள்ளன. ஆகையால் கனவு காண்பவன் இக்காரணத்தைக் கூறி ஷெய்தானை வெல்ல முடியாது. இதன் விபரம் மிக விரிவானது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பதிவுகளில் தனியான தலைப்பில் விபரமாக எழுதுவேன். தொடர்ந்து வாசிப்பவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள்.

ஷெய்தான் நபீமணி அவர்களின் தோற்றத்தில் கனவில் தோன்ற முடியாதென்பதற்கான காரணம் முந்தின பதிவொன்றில் கூறப்பட்டுள்ளது. இன்னொரு காரணமும் உண்டு. அதையும் இங்கு எழுதுகிறேன்.

நபீ மணியின் “தாத்” உடல் ஒளியால் படைக்கப்பட்டதும், தெய்வீக சக்தி பாய்ச்சப்பட்டதுமாகும். ஷெய்தானின் உடலோ நெருப்பால் படைக்கப்பட்டதும், மிருக உணர்வுகள் ஊட்டப்பட்டதுமாகும். அவனின் உடலுக்கும், தெய்வீக சக்திக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உலகில் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கென்று குறிப்பான, தனியான உருவம் – தோற்றமொன்று இருந்தது. ஆகையால் ஷெய்தானுக்கு அவர்களின் குறிப்பான அந்த உருவத்தில் தோன்றி – நடித்து நான்தான் நபீ முஹம்மத் என்று கூற அவனால் முடியாது. அவர்களின் இயற்கையான உருவத்தில் தோன்றி நான் நபீ என்று சொல்வதற்குத்தான் அவனுக்கு சக்தியும், அதிகாரமும் இல்லையே தவிர நபீயவர்களின் இயற்கையான உருவத்திலன்றி வேறு யாருடைய உருவத்திலேனும் தோன்றி நான்தான் முஹம்மத் நபீ என்று நடித்து கனவு காண்பவனை வழிகெடுக்க வாய்ப்புண்டு. நபீ பெருமான் إِنَّ الشَّيْطَانَ لَا يَتَمَثَّلُ بِيْ ஷெய்தான் எனது உருவத்தில் – தோற்றத்தில் வரமாட்டான் என்று சொன்னார்களேயன்றி إِنَّ الشَّيْطَانَ لَا يَتَمَثَّلُ بِغَيْرِ صُوْرَتِيْ ஷெய்தான் வேறொருவரின் தோற்றத்தில் தோன்ற மாட்டான் என்று சொல்லவில்லை. ஆகையால் கனவு காண்பவனுக்குத் தெரியாத ஒருவரின் உடலுருவத்தில் பெரிய தலைப்பாகை, பெரிய தாடி, நீண்ட ஜுப்பா போன்றவையுடன் ஒருவர் தோன்றி நான்தான் முஹம்மத் நபீ என்று சொன்னால், கனவு காண்பவர் நபீ அவர்களின் இயற்கையான உடலுருவத்தை அறியாதவராயுமிருந்தால் நிச்சயமாக அதை நம்பி ஏமாந்து வழி கெட்டுப் போவார். இவ்வாறு வழிகெட்டுப் போகின்றவர்கள் பலர் இன்று நாட்டில் தம்மை பெருமானாரை கனவில் கண்டவர்கள் என்ற இறுமாப்புடன் வாழ்ந்து வருகின்றார்கள். கைசேதம்! கைசேதம்!

ஷெய்தான் யாரோ ஒருவரின் வேஷம் போட்டு கனவில் தோன்றி நான்தான் முஹம்மத் நபீ என்று சொன்னால் நபீ மணியவர்களின் இயற்கை உருவத்தைக் கண்டவனால் மட்டுமே அவனை விரட்டியடிக்க முடியும். காணதவர்கள் அனைவரும் ஏமாந்து போவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகையால் இவ்வாறான கட்டத்தில் ஒருவர் ஏமாந்து போகாமலிருப்பதாயின் அவர் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் இயற்கையான முகத் தோற்றத்தை விழிப்பில், அல்லது கனவில் கண்டவராக இருக்க வேண்டும். மனிதர்களில் அதிகமானவர்கள் இன்று இந்நிலைமையில் இல்லை. ஆகையால் இதற்கு நான் ஒரு வழி சொல்லித் தருகிறேன். இவ்வழியில் செல்பவர் வெற்றிபெற வாய்ப்புண்டு.

இவ்வழி கனவில் காண்பதற்காக மட்டுமல்ல. ஐங்காலத் தொழுகையில் “அத்தஹிய்யாத்” ஓதும் வேளையில் اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ நபீயே என்று அவர்களை அழைத்து உங்களுக்கு ஸலாம் உண்டாவதாக என்று கூறும் ஒவ்வொருவருக்கும் இது தேவையான ஒரு வழிதான். இவ்வழியை அறியாமல் தொழுகையில் கூட ஸலாம் சொல்வது பொய்யான, அர்த்தமில்லாத ஸலாமாக ஆகிவிடும்.

கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் திருமுகம் எவ்வாறிருந்தது, நெற்றி, கண்கள், கண்புருவம், கண் இமை, மூக்கு, வாய், தாடி, உதடு மற்றும் முகத்திலுள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றும் எவ்வாறிருந்தன என்ற விபரம் ஹதீதுகளில் கூறப்பட்டுள்ளன. அவற்றை நன்றாக அறிந்தும், விளங்கியும் அவ் அடையாளங்களைக் கொண்ட ஒரு அழகான முகத்தை நாம் கற்பனை செய்ய முடியும். நாம் கற்பனை செய்கின்ற முகம் நூறு வீதமும் பெருமானாரின் திருமுகத்திற்கு நிகராக இல்லாது போனாலும் ஐம்பது வீதமேனும் அத் திரு முகத்தை இம்முகத்தின் மூலம் காண முடியும். தொடர்ந்து இவ்வாறு பயிற்சி செய்து வந்தால் பயன் கிடைக்கும். நாம் கற்பனை செய்து பார்க்கின்ற அந்த முகத்தில் திரு நபீயின் அருள் முகம் காட்சியாகும். வெளியாகும் என்ற முழு நம்பிக்கையோடும், குலையாத சிந்தனையோடும் செய்து வர “றஹ்மத்” வாசல் திறக்கப்படும்.

ஒரு மனிதன் தொழுகையில் “அத்தஹிய்யாத்” ஓதும்போது السلام عليك أيّها النبي நபீயே! உங்களுக்கு “ஸலாம்” உண்டாவதாக என்று சொல்லும் போதும் இவ்வாறு கற்பனை செய்து கொள்வது கற்பனை முகம் மாறி எதார்த்த முகம் தோன்ற வழி செய்து விடும்.

தொழுகையில் அல்லாஹ்வை மட்டுமே خِطَابْ முன்நிலைப்படுத்த முடியும். நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தவிர வேறு எந்த நபீயை முன்னிலைப்படுத்தினாலும் தொழுகை “பாதில்” வீணாகிவிடுமென்று “ஷரீஆ”வின் சட்டம் கூறுகின்றது. تَبْطُلُ الصَّلَاةُ بِخِطَابٍ لِمَخْلُوْقٍ தொழுகையில் எந்தவொரு சிருட்டியை முன்நிலைப்படுத்தினாலும் தொழுகை வீணாகிவிடும். இது பொதுவான ஒரு சட்டம். இப் பொதுச்சட்டத்திற்கு தொழுகையில் “அத்தஹிய்யாத்” ஓதும்போது நபீகள் நாயகம் அவர்களுக்கு اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ நபீயே உங்களுக்கு ஸலாம் உண்டாவதாக என்று அவர்களை முன்நிலைப்படுத்திச் சொல்வது முரணாகின்றது. இதனால் சிருட்டியை முன்நிலைப்படுத்துவதால் தொழுகை வீணாகிவிடுமென்று சட்டம் கூறிய சட்டமேதைகள் குறித்த அந்த வசனத்தின் இறுதியில் غَيْرِ النَّبيِّ நபீ அல்லாத எந்த ஒரு சிருட்டியை முன்நிலைப்படுத்தினாலும் தொழுகை வீணாகிவிடும், நபீ பெருமானை முன்நிலைப்படுத்தினால் மட்டும் தொழுகை வீணாகாதென்று கூறியுள்ளார்கள். تَبْطُلُ الصَّلَاةُ بِخِطَابٍ لِمَخْلُوْقٍ غَيْرِ النَّبِيِّ என்று வசனம் அமைத்துக் கொண்டார்கள்.

இவ்வாறு சட்டம் கூறிய சட்ட மேதைகளிடம் நபீமணியவர்களை சிருட்டியில்லை என்றா சொல்கிறீர்கள்? என்று கேட்டால் அவர்கள் சரியான பதில் தருவார்கள். எனினும் அவர்கள் இப்போதில்லை ஆகையால் அவர்கள் இயற்றிய சட்டத்தைக் கற்றுக் கொடுக்கின்ற தற்கால சட்ட மேதைகளிடம் கேட்டால் உரிய பதில் கூறத் தெரியாமல் “நபீகள் நாயகம் விஷேஷமானவர்களாதலால் அவர்களுக்கு சலுகை உண்டு” என்று மட்டும் கூறிவிட்டு மறு கேள்வி கேட்பதற்கிடையில் மாயமாய் மறைந்து விடுகின்றார்கள். இதற்கு காரணம் الحقيقة المحمديّة முஹம்மதிய்யத்தான எதார்த்தம் இவர்களுக்குத் தெரியாமற் போனதேயாகும்.

மேலே எழுதிக் காட்டிய ஆறு ஹதீதுகளில் مَنْ رَآنِيْ فِى الْمَنَامِ فَقَدْ رَآنِيْ என்னைக் கனவில் கண்டவன் என்னையே கண்டான் என்று ஒரு ஹதீது வந்துள்ளது. இந்த ஹதீதுக்கு விளக்கம் எழுதிய இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் رَأَى حَقِيْقَةَ جِسْمِيْ وَرُوْحِيْ وَصُوْرَتِيْ مَعًا என்னைக் கண்டான் என்றால் எனது எதார்த்தமான உடலையும், உயிரையும், தோற்றத்தையும் கண்டான் என்பதே கருத்தாகும் என்று கூறியுள்ளார்கள். ஏனெனில் நபீமாரின் உடல்கள் அழிந்து மண்ணுடன் மண்ணாவதுமில்லை அவர்களின் தோற்றங்கள் மாறுபடுவதுமில்லை என்பதினாலாகும். அவர்கள் தமது “கப்ர்”களில் தொழுதுகொண்டிருக்கின்றார்கள்.

மேற்கண்ட ஆறு ஹதீதுகளில் இன்னொரு ஹதீதில் مَنْ رَآنِيْ فِى الْمَنَامِ فَسَيَرَانِيْ فِى الْيَقْظَةِ என்னைக் கனவில் கண்டவன் பின்னர் விழிப்பிலும் காண்பான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளியுள்ளார்கள். இவ்வாறு கூறியவர்கள் கண்மணி நாயகமாயிருப்பதால் அவர்களின் கூற்று ஒருபோதும் பொய்யாகாது. எனவே பெருமானார் அவர்களைக் கனவில் கண்ட அனைவரும் நிச்சயமாக ஒரு சந்தர்ப்பத்தில் விழிப்பிலும் காண்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பெருமானாரின் இவ்வசனம் எனக்கு சுவர்க்கத்தைக் கொண்டு சுபச் செய்தி சொன்னாற்போலிருந்தது. மகிழ்ச்சியால் ஒரு நொடி என்னை மறந்தேன்.

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் கனவில் காண்பதற்கு அவ்லியாஉகள், ஸூபீ மகான்கள் சில ஓதல்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். அந்த ஓதல்களைத் தவறாமல் பக்குவமாக ஓதி வந்தால் நபீ பெருமானைக் காண்பதற்கு வழியேற்படும்.

இரவில் உறங்குமுன் “வுழூ” செய்து இரண்டு “றக்அத்” “இஸ்திகாறா” நன்மையை நாடித் தொழுதபின் 100 தரம் ஸலவாத் சொல்ல வேண்டும். அதன்பிறகு
اَللهم أَرِنِيْ وَجْهَ مُحَمَّدٍ حَالًا وَمَآلًا
என்று ஏழு தரம் ஓதிவிட்டு உறங்க வேண்டும். உறக்கம் வரும் வரை பின்வரும் “புர்தா”வின் பாடல்களில் ஒன்றான
نَعَمْ سَرَى طَيْفُ مَنْ أَهْوَى فَأَرَّقَنِيْ
وَالْـحُبُّ يَـعْـتَـرِضُ اللَّذَّاتِ بِالْأَلَمِ
என்ற பாடலை ஓத வேண்டும். உறக்கம் மிகைக்கும் வரை ஓத வேண்டும். (தொடரும்…….)

முக்கிய குறிப்பு:

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் உருவத்தில் ஷெய்தானுக்கு கனவில் தோன்றி எவரையும் வழிகெடுக்க முடியாதாகையால் அவன் வேறொருவரின் உருவத்தில் தோன்றி நான்தான் நபீ முஹம்மத் என்று சொல்வானாயின் கனவு காண்பவர் ஏற்கனவே நபீ பெருமானின் உண்மையான, இயற்கையான முகத்தோற்றத்தை அறியாதவராயிருந்தால் அவரால் அவனை மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை எற்படும். அவ்வேளை கனவு காண்பவர் வெற்றி பெறுவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உண்டு. அதைக் கொண்டு அவனை வென்றுவிடலாம்.

அதாவது ஷெய்தான் யாரோ ஒருவரின் தோற்றமெடுத்து வருவது கனவு காண்பவனை வழிகெடுக்கவேயன்றி அவனை நல்வழிப்படுத்துவதற்காக அல்ல. ஆகையால் அவன் கனவு காண்பவனிடம், சகோதரா! நான்தான் உனது நபீ. உன்மீதுள்ள அன்பினால்தான் உன்னிடம் வந்துள்ளேன். நீ இறைவனை அறிந்துவிட்டாய். அடைந்தும் விட்டாய். ஆகையால் இதன்பிறகு நீ எந்த ஒரு வணக்கமும் செய்யத் தேவையில்லை. இதன் பிறகு உனக்கு ஏவல் விலக்கல் என்பதே கிடையாது என்று சொல்வான். இவ்வாறு சொன்னால் நிச்சயமாக அவன் ஷெய்தான் என்று நம்பி அவனை விரட்டி விட வேண்டும். வந்தவன் ஷெய்தான் என்று அறிவதற்கு இது ஒன்று மட்டுமே ஆதாரமாகும்.

“ஷரீஆ”வின் அறிவும், “அகீதா” கொள்கை விளக்கமும் தெரியாத ஒருவர் ஆன்மீக வழியில் செயல்பட விரும்பினால் அவர் முதலில் மேலே சொன்ன இருவகை அறிவுகளுமுள்ள ஒருவரின் வழிகாட்டலின்படி செயல்பட வேண்டும். குருவில்லா வித்தை குப்பையில் என்பார்கள். مَنْ لَا لَهُ شَيْخٌ فَشَيْخُهُ الشَّيْطَانُ குரு இல்லாதவனுக்கு ஷெய்தானே குருவாக இருப்பான் என்றும் சொல்வார்கள்.

விஷேட குறிப்பு:

கனவில் தோற்றியவர்கள் நபீகள் நாயகம்தான் என்பதற்கு வெளிப்படையான ஆதாரம் அவர்களின் முன் பல் இல்லாதிருப்பதாகும். ஓர் யுத்தத்தின் போது நபீ பெருமானின் மேல் வரிசையிலுள்ள முன் பல் விழுந்தது குறிப்பிடத்தக்கதாகும். நபீயவர்கள் “வபாத்” ஆகும்வரை விழுந்த பல்லுக்குப் பதிலாக வேறு பல் கட்டாமல் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


اَلثَّنِيَّةُ ج ثَنَايَا
وهي أسنانُ مُقَدِّمِ الْفَمِ، ثِنْتَانِ مِنْ فَوْقُ، وَثِنْتَانِ مِنْ أَسْفَلَ،

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments