Saturday, May 4, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அடிக்கடி பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு!

அடிக்கடி பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு!

(தொகுப்பு – மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)

அன்புள்ள சகோதரர்களே!

வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டவர்களிற் பலர் அடிக்கடி பயணம் செய்வதை நாம் பார்க்கிறோம். பலர் தமது வாழ்வில் அதிக நேரத்தை பயணங்களிலேயே கழிக்கின்றார்கள். இவர்களின் பயணங்களில் இவர்களுக்கு விபத்துக்கள், மரணம் ஏற்பட்டுவிடாமலிருப்பதற்கு நபீ பெருமகன் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறைகளை இங்கு கற்றுத் தருகின்றோம். அவற்றைப் பேணிச் செயல்படுவோர் “ஸலாமத்” ஈடேற்றம் பெறுவார்கள்.

قال شيخ الإسلام محي الدين النّووي رحمه الله فى الأذكار فى باب أذكار المسافر عند إرادة الخروج من بيته، ‘يُستحبُّ له عند إرادة الخروج من بيته أن يصلّي ركعتين لحديث المُقَطَّمِ بن المِقدام الصّحابيّ ، (إنّ رسول الله صلّى الله عليه وسلّم قال ما خَلَّفَ أحد عند أهلِه أفضلَ من ركعتين يركعُها عندهم حينَ يريد السفر) (رواه الطّبراني)

قال بعض أصحابنا يُستحبُّ أن يقرأ فى الأولى منهما بعد الفاتحة قل أعوذ بربّ الفلق، وفى الثّانية قل أعوذ بربّ النّاس، وإذا سلّم قرأ آية الكرسيّ،

قد جاء أنّ من قرأ آية الكرسيّ قبل خروجه من منزله لم يُصِبه شيئٌ يكرهُه حتّى يرجعَ، ويُستحبّ أن يقرأ سورة لإيلاف قريش،

قال السيّد الجليل أبو الحسن القزويني الفقيه الشّافعيّ صاحب الكرامات الظّاهرات والأحوال الباهرات والمعارف المتطاهرة إنّه أمان من كلّ سوء، (منقول من الجزء الثاني من حياة الحيوان، ص – 392 )

“ஸபர்” பயணம் என்ற சொல் சிறிய தூரப் பயணம், பெரிய தூரப் பயணம் இரண்டையும் எடுத்துக் கொண்டாலும் தொழுமையை கஸ்ர், ஜம்உ செய்வதற்குத் தேவையான தூரம் 96 km (56 மைல், இந்திய உலமாஉகள் 121 km என்ற சொல்லையே முற்படுத்துகின்றார்கள்) பயணிப்பவர்கள் மட்டும் மேற்கண்ட நடைமுறையை கட்டாயம் செய்தல் வேண்டும். குறித்த தூரத்தைவிடக் குறைந்த தூரம் பயணிப்பவர்கள் விரும்பினால் செய்து கொள்வது நல்லது. (இது எனது கருத்து)

சிறிய அல்லது பெரிய பயணத்திற்கு ஆயத்தமாயிருக்கும் வேளையில் ஸாலிஹான பெற்றோர், அல்லது அல்லாஹ்வை நெருங்கிய நல்லடியார்கள் பயணத்தை தடுத்தார்களாயின் அன்று பயணத்தை நிறுத்திவிட்டு இன்னொரு நாளில் அதை மேற்கொள்வது விரும்பத்தக்கது.

எந்த ஒரு பயணமாயினும் பயணி தனக்கு உதவியாக ஒருவரை அழைத்துக் கொள்வது மார்க்கத்தில் விரும்பத்தக்கது.
خُذِ الرَّفِيْقَ قَبْلَ الطَّرِيْقَ
என்று ஒரு தத்துவம் உண்டு.

பயணி தனது வீட்டிலிருந்து வெளியாகும் போது பூனை, நாய், பாம்பு போன்றவை குறுக்கிட்டால் அந்தப் பயணம் சரிவராதென்ற நம்பிக்கையை இஸ்லாம் சரி காணவில்லை. எனினும் நம்பிக்கை குறைந்த சுவாபமுள்ளவர்களும், பயமுள்ளவர்களும் தமது பயணத்தின் நேரத்தை மாற்றிக் கொள்வது சிறந்தது.

பயணிகளில் தமது பெயர்களின் முதலெழுத்து ف – F, ح – H, إ – I எழுத்துள்ளவர்கள் தமது பயணத்தின் போது சொல்லப்பட்ட விடயங்களை பேணிக் கொள்வது மிக முக்கியமானதாகும்.

அறபுப் பகுதியின் சுருக்கம்:

இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் தனது “அல் அத்கார்” என்ற நூல் “பயணி வீட்டை விட்டும் வெளியாகும் போது ஓத வேண்டிய ஓதல்களின் பாடம்” என்ற தலைப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

வீட்டை விட்டும் வெளியாகும் போது இரண்டு “றக்அத்”துகள் தொழுது கொள்ளுதல் விரும்பத்தக்கதாகும். முகத்தம் இப்னுல் மிக்தாம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஹதீதில் பின்வருமாறு வந்துள்ளது. “பயணத்தை நாடி வீட்டை விட்டும் வெளியாகும் ஒருவர் தன்னுடைய வீட்டாரிடம் விட்டுச் செல்வதில் அவர்களுக்கு மத்தியில் தொழுகின்ற இரண்டு “றக்அத்” தொழுகையை விட எதுவும் சிறந்தது கிடையாது” என்று பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் – தபறானீ)

ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த எமது தோழர்களில் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார். குறித்த பயணி தொழக் கூடிய இரண்டு “றக்அத்”துகளில் முதலாவது றக்அத்தில் “ஸூறதுல் பாதிஹா” ஓதி முடிந்த பின் “குல்அஊது பிறப்பில் பலக்” என்ற ஸூறாவையும், இரண்டாவது றக்அத்தில் பாதிஹா ஸூறாவுக்குப் பிறகு “குல்அஊது பிறப்பின்னாஸ்” என்ற ஸூறாவையும், தொழுது முடிந்த பிறகு “ஆயதுல் குர்ஸீ” யையும் ஓதுவது சிறந்ததாகும்.

வீட்டை விட்டும் வெளியாக முன் “ஆயதுல் குர்ஸீ”யை ஓதுவதன் மூலம் அவன் வீடு திரும்பும் வரை அவனுக்கு எந்தக் கெடுதியும் வராது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் “லிஈலாபி குறைஷ்” ஸூறாவை ஓதுவதும் சிறந்ததாகும்.

ஷாபிஈ மத்ஹபின் சட்ட வல்லுனரும், மாபெரும் ஞானியும், அற்புத வலிய்யுமான அபுல் ஹஸன் அல் கஸ்வீனீ அவர்கள் அது (ஆயதுல் குர்ஸீ) சகல கெடுதிகளை விட்டும் பாதுகாக்கும் ஒன்று என்று கூறியுள்ளார்கள். (ஹயாதுல் ஹயவான். பாகம் 02, பக்கம் 392)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments