Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பெருமானாரின் பெற்றோர் விசுவாசிகளே! அவர்களை “காபிர்”கள் என்று சொன்னவனே “காபிர்”

பெருமானாரின் பெற்றோர் விசுவாசிகளே! அவர்களை “காபிர்”கள் என்று சொன்னவனே “காபிர்”

தொகுப்பு: மௌலவி அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.

பெருமானார் மேரே பயகம்பர் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், ஏனைய நபீமார், றஸூல்மார், மற்றும் வலீமார், நாதாக்கள், மகான்கள் ஆகியோரின் பெயர்களை மொழிந்தபின் அல்லது எழுதிய பின் அவர்களை கண்ணியப்படுத்துவதற்காக எந்தவொரு வசனத்திலாவது அவர்களுக்காக “துஆ” செய்வது “ஸுன்னத்” ஆன நற்கருமமேயாகும்.

நபீ பெருமான் அவர்களின் பெயருக்குப் பின் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம், அல்லது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஒருமையிலும், அலைஹிமுஸ்ஸலாது வஸ்ஸலாம் என்று பன்மையிலும் சொல்வது நல்ல காரியமாகும்.

இதேபோல் நபீ தோழர்களின் பெயர்களுக்குப் பின் “றழியல்லாஹு அன்ஹு” என்று ஒருமையிலும், “றழியல்லாஹு அன்ஹும்” என்று பன்மையிலும் சொல்வது நல்ல காரியமாகும்.

இதேபோல் இமாம்கள், வலீமார், மற்றும் நல்லடியார்களின் பெயர்களுக்குப் பின் “றஹிமஹுல்லாஹ்” என்று ஒருமையிலும், “றஹிமஹுமுல்லாஹ்” என்று பன்மையிலும் சொல்வது நல்ல காரியமாகும்.

மேற்கண்ட வசனங்கள் போல் கண்ணியத்தைக் காட்டக் கூடிய வேறு வசனங்களையும் பயன்படுத்தலாம். இவையாவும் நல்ல காரியங்களேயாகும். “கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்”, “குத்திஸ ஸிர்றுஹு” என்ற வசனங்களையும் பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவது “ஸுன்னத்” ஆன, விரும்பத்தக்க நல்ல காரியமேயாகும். ஆயினும் இவ்வாறு சொல்வதோ, எழுதுவதோ “பர்ழ்ஐன்” கடமையல்ல. சொல்வது சிறந்ததேயாகும்.

இவ்வாறுதான் கண்மணி நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் கண்ணியத்திற்குரிய பெற்றோர்களை அப்துல்லாஹ், ஆமினா றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் பெயர்களுக்குப் பின் மொழிவதும், எழுதுவதுமாகும்.

மேற்கண்ட இவ்விடயத்தில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகளிடம் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது. ஆயினும் பெருமானார் அவர்களின் பெற்றோர்களின் விடயத்தில் அவ்வாறு சொல்லக் கூடாதென்று சொல்பவர்கள் சிலருளர். இவர்கள் அசல் ஸுன்னீகளாக இருக்கமாட்டார்கள் என்பது எமது கருத்தாகும். எனினும் ஒருவர் மறதி காரணமாக அவ்வாறு சொல்லாமலோ, எழுதாமலோ விட்டால் அவர் குற்றவாளியாகமாட்டார். ஆயினும் மனமுரண்டாக அவ்வாறு விட்டாராயின் அவர் தண்டிக்கப்பட வேண்டியவரேயாவார். அவர் வஹ்ஹாபியாக, அல்லது வஹ்ஹாபிஸ நாற்றம் பட்டவராகவே இருப்பார்.

சில்லறை மௌலவீமார்களிற் சிலரின் குழப்பமும், முழக்கமும்.

சில்லறை மௌலவீமார் என்று நான் கூறுவது மௌலவீமார் அனைவரையும் உள்வாங்காது. அறபுக் கல்லூரிகளில் ஓதிய காலத்தில் கவனயீனமாயிருந்து பிஅலும் தெரியாமல் பாஇலும் தெரியாமல், முப்ததாவும் தெரியாமல் கபறும் தெரியாமல் மௌலவீகளாக நடமாடுவோரையே சில்லறை மௌலவீமார் என்று நான் குறிப்பிடுகிறேன். இவர்களிடம் எவரும் மார்க்க விடயங்களைக் கேட்பதும் பிழை, இவர்கள் சொல்வது போல் செயல்படுவதும் பிழை.

இத்தகைய சில்லறைகளிற் சிலர் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பெற்றோர்களான அப்துல்லாஹ், ஆமினா “றழியல்லாஹு அன்ஹுமா” ஆகியோர்களின் பெயர்களுக்குப் பின் “றழியல்லாஹு அன்ஹுமா” என்று மொழியாதவர்களும், எழுதாதவர்களும் “காபிர்”கள் என்று கழுதைகள் போல் அர்த்தமில்லாமலும், ஆதாரமில்லாமலும் கத்தித் திரிகின்றார்களாம்.

நான் அண்மையில் எழுதி வெளியிட்டு இலவசமாக வினியோகித்த 1648 பக்கங்களைக் கொண்ட “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற நூலில் பெருமானாரின் பெற்றோர்களின் பெயர்களைக் குறிப்பிட்ட நான் அவர்களுக்காக ‘றழியல்லாஹு அன்ஹுமா” என்று எழுதவில்லையாம். இதனால் நான் காபிராகிவிட்டேனாம். ஸுப்ஹானல்லாஹ்!

திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ, இமாம்களால் எழுதப்பட்ட சட்ட நூல்களிலோ நபீமார், றஸூல்மார், வலீமார், மற்றும் பெருமானாரின் பெற்றோர் ஆகியோரின் பெயர்களுக்குப் பின் மேலே குறித்தது போன்ற பிரார்த்தனை வசனங்களை எழுதாதவன் “காபிர்” ஆவான் என்று ஒரு சட்டம் இல்லவே இல்லை. உண்மை இவ்வாறிருக்க இந்தப் பீப் பொடியன்கள் மேற்கண்டவாறு குரைத்துத் திரிவது நீதிமன்றில் நிறுத்துவதற்கான குற்றமாகும்.

இந்தப் பொடியன்களின் கூற்றின் படி இமாம் புகாரீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கும் “காபிர்” என்று இவர்கள் “புத்வா” வழங்க வேண்டும். ஏனெனில் இமாம் அவர்கள் தங்களின் ஸஹீஹுல் புகாரீ என்ற நூலில் حَدَّثَنَا – حَدَّثَنَا எங்களுக்கு அறிவித்தார் எங்களுக்கு அறிவித்தார் என்று ஆயிரமாயிரம் நபீ தோழர்களின் பெயர்களைக் கூறுவார்களேயன்றி அவர்களின் ஒருவரின் பெயருக்குப் பின்னும் “றழியல்லாஹு அன்ஹு” என்று சொல்லமாட்டார்கள். ஓர் இடத்தில் கூட சொல்லவில்லை. இவர்களைக் “காபிர்” என்றா சொல்வது?

அல்லாஹ் திருக்குர்ஆனில்

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
“நிச்சயமாக அல்லாஹ்வும், அவனின் மலக்குகளும் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள். விசுவாசிகளே! நீங்களும், அவர்கள் மீது ஸலவாத், ஸலாம் சொல்லுங்கள்” என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 33-56)

இவ்வாறு சொன்ன அல்லாஹ் பெருமானார் மீது “ஸலவாத்” சொல்லவில்லை என்பதை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் கூறுகிறது.
مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ
முஹம்மத் அல்லாஹ்வின் திருத்தூதராக உள்ளார்கள் என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 48-29)

இவ்வசனத்தில் مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ என்ற வசனத்தின் பின் صلّى الله عليه وسلّم என்று அல்லாஹ் சொல்லவில்லை. இதனால் இந்தச் சில்லறைகள் அல்லாஹ் “காபிர்” என்று “புத்வா” கொடுத்துவிடுவார்களோ?!

இத்தலைப்பின் சுருக்கம் என்னவெனில் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அன்பிற்குரிய பெற்றோர்களான அப்துல்லாஹ், ஆமினா றழியல்லாஹு அன்ஹுமா இருவரும் அவர்களைக் கொண்டு “ஈமான்” கொண்ட “முஃமின்” விசுவாசிகள் என்று நம்புவதுடன் அவ்விருவரின் பெயர்களுக்குப் பின்னால் “றழியல்லாஹு அன்ஹுமா” என்று சொல்வது அவர்களைக் கண்ணியப்படுத்துவதாக ஆகிவிடும் என்பதையும் நம்ப வேண்டும் என்பதாகும். எவராயினும் மறதி காரணமாக அல்லது கவனயீனம் காரணமாக அவ்வாறு எழுதவோ, மொழியவோ இல்லையானால் அவருக்கு அதை நினைவு படுத்தலாமேயன்றி அவரைக் “காபிர்” என்று சொல்வதோ, அவருக்கு எதிராக பிரசுரம் வெளியிட்டு அவரை அவமானப்படுத்துவதோ, வெள்ளிக்கிழமைகளில் “குத்பா” பிரசங்கத்தின் போது அவருக்கு எதிராக குரைப்பதோ, கரைவதோ, கத்துவதோ மார்க்கமாகாது. இதற்கு மாறாக சில்லறைகள் நடந்து கொண்டது அவர்களுக்கேற்பட்ட தாழ்வுச் சிக்கலும், ஆற்றமையும், பொறாமையுமேயாகும்.

என்னுடைய 77 வருட வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவமும், நான் கண்ட உண்மையும் என்னவெனில் இந்தச் சில்லறைகள் போன்ற உலமாஉகளிடமிருந்தே பொறாமை ஊற்றெடுக்கின்றதென்பதேயாகும். இதை பகிரங்க மேடையில் சத்தியம் செய்து சொல்வதற்கு நான் என்றும் தயங்கமாட்டேன். இந்தச் சில்லறைகள் பட்டியலில் உள்ளவர்கள்தான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் “புத்வா” குழுவினரும், அதன் தலைவருமென்பதையும் ஆயிரம் ஒலிபெருக்கிகள் மூலம் நமது நாட்டிலுள்ள ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மலையில் நின்று பேசுவதற்கும் நான் தயாராகவே உள்ளேன்.

‎(قِصّةٌ عجيبةٌ مشهورةٌ، فِيهَا عِبَرٌ ودُرُوسٌ للعُقلاء)
إنّ عيسى عليه السلام لَقِيَ إبليسَ، وهو يَسُوق خمسةَ أحمُرٍ، عليها أحمالٌ، فسئله عن الأحمال، فقال تجارةٌ، أطلبُ لها مُشْتَرِين، قال وما هي التّجارةُ؟ قال أحدُها الجُوْرُ، قال ومَن يشْتَريْهِ؟ قال السَّلَاطِينُ، والثاني الْكِبْرُ، قال ومن يشتريه؟ قال الدَّهَاقِينُ، والثالث الحَسَدُ، قال ومن يشتريه؟ قال العُلماء، والرابعُ الخِيانةُ، قال ومن يشتريها؟ قال عُمَّالُ التُّجّارِ، والخامس الكَيْدُ ، قال ومَن يشتريه؟ قال النِّساءُ، (‎ كتاب إبتلاء الأخيار)

الحمد لمن أعزّ العالِمَ على الجاهل، والعارفَ على الغافل، وجعل للأوَّلَين العالمِ والعارفِ مُخَّهُما فى رأسهما، وجَعَلَهُ للآخِرين فى إستهما،

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments