Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“அல்லாஹ்”வை தனித்தனியான நான்கு துண்டுகளாக ஆக்கினாலும் அவற்றில் ஒவ்வொரு துண்டும் அவனையே குறிக்கும்.

“அல்லாஹ்”வை தனித்தனியான நான்கு துண்டுகளாக ஆக்கினாலும் அவற்றில் ஒவ்வொரு துண்டும் அவனையே குறிக்கும்.

தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)

தலைப்பைக் கண்டு எவரின் தலையும் குழம்பாமல் இருக்கட்டுமாக! “பத்வா” வியாபாரிகளுக்கு இத் தலைப்பு பெருநாள் வட்டிலப்பம் போல் இருக்குமென்று நினைக்கிறேன். எழுதுகோலையும், பேப்பரையும் கையில் எடுத்துக் கொண்டு இறுதியில் இலவு காத்த கிளி போலாகிவிடுவார்கள்.

“பத்வா” வழங்குபவர்களுக்கு பொறுமை அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்து பொறுமை ஏற்படுவதற்கான பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். பொறுமை ஏற்பட பல உடற் பயிற்சிகளும், யோகாசனங்களும் உள்ளன. அவற்றைக் கற்று தொடர்ந்து செய்து வந்தால் அவசரப் போக்கு குறைந்து பொறுமை ஏற்பட்டு விடும்.

இதேபோல் அவசரப் போக்கு நீங்கி பொறுமை ஏற்படுவதற்கு ”அவ்றாத்” ஓதல்களும் உள்ளன. அவற்றையும் ஓதி வந்தால் அவசரப் போக்கு நீங்கி பொறுமை ஏற்பட்டுவிடும்.

“அல்லாஹ்”வை என்றால் அவனின் اَللهُ ”அல்லாஹ்” என்ற திரு நாமத்தை என்று விளங்க வேண்டும். அதிலுள்ள அலிப், லாம், லாம், ஹே என்ற நான்கு எழுத்துக்களையும் தனித்தனியே எடுத்தாலும் கூட அது ஒவ்வொன்றும் அவனையே குறிக்கும். நான்கும் பிரிக்கப்படாமலிருந்த போது அவை நான்கும் சேர்ந்து ஷ”அல்லாஹ்” என்ற மெய்ப் பொருளைக் காட்டியது போன்றே பிரித்த பின்னும் அது காட்டும்.

இப்படியொரு விஷேடம் வேறெந்த மொழியிலுள்ள எந்தச் சொல்லிலுமில்லை.
إنّ هذا الإسم – اَللهُ – من خاصيتهأنّه كلّما سقط منه حرفٌ كان الباقي اسما لله تعالى، فإنّك إن أسقطتَ الهمزةَ بقي ‘ لِلّهِ ‘ وإنّه من صفات الله تعالى، (ولله ملك السموات والأرض، ولله خزائنُ السموات والأرض) فإن أسقطتَ اللّامَ الأولى بَقِيَ ‘ لَهُ ‘ وهو أيضا من صفات الله تعالى (لَهُ مقاليدُ السموات والأرض، وأيضا لَهُ الحُكمُ وإليه تُرجعون) وإن أسقطتَ اللّام الثانية بَقِيَ ‘ هُوْ ‘ وهو أيضا من أسماء الله تعالى، قال قل هو الله أحدٌ، وقال هو الحيُّ لا إله إلا هو، وقال هو يُحيى ويُميت، ومثل هذه الخاصية غيرُ حاصلة فى سائر الأسماء، (لوامع البينات، ص66، للإمام فخر الدين الرازي)

اَللهُ
– அல்லாஹ் என்ற திருப் பெயரில் ஒரு விஷேடம் உண்டு. அந்த விஷேடம் அறபு மொழியில் வேறெந்தச் சொல்லுக்குமில்லை. அதேபோல் வேறெந்த மொழியிலுள்ள எந்த ஒரு சொல்லுக்கும் இல்லை.

اَللهُ
என்ற சொல்லில் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவை அலிப், லாம், லாம், ஹே. இந்த நான்கு எழுத்துக்களும் சேர்ந்து ”அல்லாஹ்” எனும் பெயருக்குரிய “தாத்” மெய்ப் பொருளைக் காட்டுவதுபோல் குறித்த நான்கு எழுத்துக்களில் எந்த எழுத்தை எடுத்தாலும் எஞ்சியுள்ள ஏனைய எழுத்துக்கள் மூன்றும், அல்லது இரண்டும், அல்லது ஒன்று மட்டும் அந்த மெய்ப் பொருளையே குறிக்கும்.

உதாரணங்கள் பின்வருமாறு. முதல் எழுத்தான “அலிப்” என்ற எழுத்தை நீக்கினால் லாம், லாம், ஹே மூன்றும் இருக்கும். இதை மொழிவதாயின் (لِلّهِ) “லில்லாஹ்” என்றே மொழிய வேண்டும். இவ்வாறு மொழிந்தாலும் அது அந்த மெய்ப் பொருளையே குறிக்கும். உதாரணமாக

ولله ملك السموات والأرض، ولله خزائنُ السموات والأرض
என்பன போன்று.

(لِلّهِ) என்பதிலுள்ள முந்தின ”லாம்” என்ற எழுத்தை நீக்கினால் இரண்டாம் லாமும், ஹேயும் எஞ்சியிருக்கும். இவ்விரு எழுத்துக்களும் அந்த மெய்ப் பொருளையே குறிக்கும். உதாரணமாக

لَهُ مقاليدُ السموات والأرض، لَهُ الحُكمُ وإليه تُرجعون
என்பன போன்று.

(لَهُ) என்ற சொல்லிலுள்ள இரண்டாவது ”லாம்” என்ற எழுத்தை நீக்கினால் “ஹூ” هُوْ என்று வரும். (هُ) என்று வரும். இந்த ஒரேயொரு எழுத்து மட்டும் அந்த மெய்ப் பொருளையே குறிக்கும். உதாரணமாக

قل هو الله أحدٌ، هو الحيُّ لا إله إلا هو، هو يُحيى ويُميت
என்பன போன்றுமாகும்.

“அல்லாஹ்” என்ற இச்சொல்லில் இப்படியொரு விஷேடமுள்ளது போல் எந்தவொரு சொல்லும் அறபு மொழியிலுமில்லை, வேறு மொழிகளிலுமில்லை.
(லவாமிஉல் பையினாத், பக்கம் 66, ஆசிரியர்: இமாம் பக்றுத்தீன் அர்றாஸீ)

اَللهُ
– அல்லாஹ் என்ற இச்சொல் நான் பிறந்த காலத்திலிருந்தே தமிழ் மொழியில் இதை எழுதுவோர் “அல்லாஹ்” என்றே எழுதி வந்துள்ளார்கள். (அதாவது பாம்பு இல்லன்னாவும், பாம்பு லானாவுமே எழுதி வந்துள்ளார்கள்) ஆனால் சமீப காலமாக “அல்லாஹ்” என்ற இச்சொல் ”அழ்ழாஹ்” என்று எழுதப்பட்டு வருகிறது. அறபு மொழியில் اَللهُ – என்று மட்டுமே எழுத வேண்டும். الضَّاهْ என்று எழுதுவது முற்றிலும் பிழையானதாகும். “அழ்ழாஹ்” என்று தமிழில் எழுதுபவர்கள் கூட அறபியில் எழுதும்போது اَللهُ என்றே எழுதுகிறார்கள். இவர்கள் அறபியில் “லாம்” எழுத்தில் اَللهُ என்றும், தமிழில் ”ழாத்” எழுத்தில் “அழ்ழாஹ்” என்றும் எழுதுகிறார்கள்.

அறபு மொழியில் “லாம்” எழுத்திலும், தமிழ் மொழியில் ”ழாத்” எழுத்திலும் எழுதுவோர் ஏன் அவ்வாறு எழுதுகிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.

தமிழில் “லாம்” எழுத்தில் “அல்லாஹ்” என்று எழுதினால் வாசிப்பவர்கள் “அல்லாஹ்” என்றுதான் வாசிப்பார்களேயன்றி “அழ்ழாஹ்” என்று வாசிக்கமாட்டார்கள். இதன் காரணமாக அவர்கள் அவ்வாறு எழுதுவார்களானால் அதை மொழிபவன் “ழாத்” உச்சரிப்பிலேயே மொழிவான். “ழாத்” உச்சரிப்பில் “அழ்ழாஹ்” என்று மொழிதல் பிழையேயாகும். “அல்லாஹ்” என்ற சொல்தான் ”அழ்ழாஹ்” என்று மொழியப்படுகிறதென்று வைத்துக் கொண்டால் அது முற்றிலும் பிழையாகும்.

இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் 95 சதவீதமானோர்اَللهُ என்று அறபியில் எழுதி அதை மொழியும் போது “அழ்ழாஹ்” என்று “ழாத்” சத்தத்தில் மொழிகிறார்கள். اَللهُ என்ற சொல்லை அறபியில் “லாம்” எழுத்தில் எழுதி மொழியும் போது تَفْخِيْمْ வல்லினமாக மொழிய வேண்டுமென்றும், அவ்வாறு மொழிவதால் அது “ழாத்” எழுத்து அல்ல என்பதைப் புரிந்த கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். “லாம்” சத்தமின்றியும், “ழாத்” சத்தமின்றியும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட சத்தத்தில் மொழிய வேண்டுமென்று “தஜ்வீத்” சட்ட மேதைகள் கூறுகிறார்கள். அவர்கள் அவ்வாறு கூறினாலும் கூட “லாம்” என்ற எழுத்துக்குரிய சத்தமின்றியும், “ழாத்” என்ற எழுத்துக்குரிய சத்தமின்றியும் அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட உச்சரிப்போடு மொழிய வேண்டுமென்று சொல்பவர்களிடம் அவ்வாறு மொழிந்து காட்டுங்கள் என்று சொன்னால் அவர்கள் மொழியத் தெரியாமலும், அவ்வாறு மொழியத் தெரியாதென்று சொல்ல முடியாமலும் கேட்டவனைப் பேக்காட்டுகிறார்கள். இதற்கான சரியான விளக்கம் தருபவர் யார்?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments