Saturday, May 18, 2024
Homeநிகழ்வுகள்இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே வரவேற்பு நிகழ்வு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே வரவேற்பு நிகழ்வு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே அவர்கள் கடந்த 01.10.2022ம் திகதியன்று காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலுக்கு வருகை தந்ததையடுத்து அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினால் அவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இஸ்லாமிய பாரம்பரிய முறையிலான தகரா இசையும் அவர்களை வரவேற்றதுடன், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்களின் மஸார் ஷரீபில் விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்வும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இலங்கை இந்திய ஸூபிஸ நட்புறவு ஒன்றியத்திற்கான நினைவுப் பலகையையும் திரை நீக்கம் செய்ததுடன், புதிதாக நிர்மாணிக்கபட்ட அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் மாநாட்டு மண்டபத்தினையும் திறந்து வைத்ததுடன், ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்தினையும் பார்வையிட்டார்.

இறுதியாக அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அன்பளிப்புப் பொதிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments