Saturday, May 18, 2024
Homeநிகழ்வுகள்திருமுடிகள் தரிசனம் மற்றும் 21வது வருட புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2022

திருமுடிகள் தரிசனம் மற்றும் 21வது வருட புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2022

மாதவக்கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக 08.10.2022, 09.10.2022 ஆகிய தினங்களில் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் திருமுடிகள் தரிசனம் மற்றும் புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன.

ஆரம்ப நிகழ்வாக ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்தினரால் மீலாத் தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட “இறை மறை சுமந்த இறை தூதே” மீலாத் பாடல் வெளியீடு அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் திருக்கரங்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து இரவு 10.00 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணிவரை ஆண்களுக்கான திருமுடிகள் தரிசனமும், நண்பகல் 12.00 மணி முதல் அதிகாலை 02.00 மணிவரை பெண்களுக்கான திருமுடிகள் தரிசனமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons) அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுப்ஹ் தொழுகைக்கான அதான் வரை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் சொல்லும் புனித ஸலவாத் மஜ்லிஸ் இடம்பெற்றது. இறுதியாக துஆ ஓதப்பட்டு, நாயகத்தின் அன்புக்காக ஒன்று சேர்ந்த மக்களுக்காக இனிப்புப் பண்டங்கள் அன்னதானமாக வழங்கப்பட்டு, சுப்ஹ் தொழுகை ஜமாஅத்துடன் இனிதே ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

அல்ஹம்துலில்லாஹ்.

சிறப்பு நிகழ்வாக அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்படவிருக்கின்ற பல்தேவை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் அன்றைய தினம் சுப்ஹ் தொழுகையினைத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments