Friday, May 3, 2024
Homeநிகழ்வுகள்ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச இறையியல் மாநாடு - International Theosophical Congress Russia, Nizhny Novgorod

ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச இறையியல் மாநாடு – International Theosophical Congress Russia, Nizhny Novgorod

அண்மையில் அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹி நாயகம் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) அவர்களை  காத்தான்குடிக்கு வந்து தரிசித்துச்சென்ற (Donetsk- Russia)  ரஷ்ய நாட்டு பத்திரிகை ஆசிரியர் Vladlen Zozulchak அவர்கள்

“Sufism as a Living Theosophical Tradition of Modernity”
நவீனத்துவத்தின் வாழ்ந்து கொண்டிருக்கும்

இறை ஞான தத்துவ பாரம்பரியமாக  ஸூபிஸம்

என்ற தலைப்பில் இஸ்லாமிய ஸூபிஸத்தின் உயிர் நாடியான வஹ்ததுல் வுஜூத் கொள்கை பற்றியும் அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்கள் பற்றியும் ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச இறையியல் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ மற்றும் ஜனாப் M.I ஜெம்ஸித் ஆகியோர் எழுதி HM. அமீர் ஆசிரியர் அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த  Wahdat Al-Wujud is THE THEOLOGICAL TENET of ISLAMIC SUFISM எனும் நூலை மேற்கோள் காட்டி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ்.

மாநாடு பற்றிய விபரம் கீழ்வருமாறு:

147th anniversary of the founding of the Theosophical Society and to the Russian theosophist V.A.Bakanov Russia, Nizhny Novgorod 2022

இம்மாநாடு நவம்பர் 26-27, 2022 ஆகிய இரு தினங்கள் மொஸ்கோ நேரப்படி (11:00AM – 18:00PM) ரஷ்யாவின் Nizhny Novgorod நகரில் நிகழ்வலையினூடாக நடைபெற்றது.

(மாநாடு ஏற்பாட்டாளர்கள்):

Foundation of socially significant and educational activities development “THEOSOPHY” என்ற அமைப்பு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

(மாநாட்டில் பங்குபற்றியோர்):

members of the Theosophical Society, scientists, researchers of theosophical works, representatives of the fields of science, philosophy, education, religion, culture, whose research is based on the integration of theosophical knowledge.

தியோசோபிகல் சொசைட்டியின் உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், இறையியல் நூற்களை ஆராய்ச்சி செய்பவர்கள், மற்றும் இறையியல் அறிவின் அடிப்படையில் அறிவியல் – தத்துவம் – கல்வி – மதம் – கலாச்சாரம் ஆகிய துறைகளை ஆராய்ச்சி செய்யும் அமைப்புக்களின்  பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முக்கிய தொனிப்பொருள்:

support and development of activities that are based on spiritual and moral education of society, scientific research, socially significant and educational activities aimed at the ideas of humanism, tolerance, morality, mutual assistance, regardless of nationality and religion.

மத – தேச வேறுபாடுகள் கடந்து மனிதநேயம், சகிப்புத்தன்மை, ஒழுக்க விழுமியம், பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை இலக்காகக்கொண்டு: சமூகத்தின் ஆன்மீக ஒழுக்கவியல், அறிவியல் ஆய்வுகள், சமூக பெறுமானங்கள், கல்வி நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தலும் விருத்திசெய்தலும்.

மேற்படி மாநாட்டில்  உரையாற்றிய ரஷ்ய நாட்டு பத்திரிகை ஆசிரியர் Vladlen Zozulchak அவர்களின் காணொலி – வீடியோ




RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments