Friday, May 3, 2024
Homeநிகழ்வுகள்09வது வருட விஷேட புனித ஸலவாத் மஜ்லிஸ்-2023

09வது வருட விஷேட புனித ஸலவாத் மஜ்லிஸ்-2023

அல்லாஹ்வின் முதலொளி, அகிலத்தின் பேரொளி, அண்ணல் எம் பெருமானார் றஸூலே கரீம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களது அன்புத்தாயின் வயிற்றில் தரித்த றஜப் மாத முதல் வெள்ளிக்கிழமை இரவை கண்ணியம் செய்யும் நோக்கில் நடைபெறும் விஷேட புனித ஸலவாத் மஜ்லிஸ் 26.01.2023 வியாழக்கிழமை பின்னேரம் வெள்ளியிரவு இஷா தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இஷா தொழுகையின் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லஸும், சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் சிறிது நேரம் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு இறுதியாக விஷேட துஆப் பிரார்த்தனையும் நடைபெற்று இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள்  நிறைவு பெற்றன.

அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments