Saturday, May 4, 2024
Homeநிகழ்வுகள்46வது வருட புனித ஸஹீஹுல் புகாரீ ஷரீப் தமாம் நிகழ்வும், 3வது வருட புனித மிஃறாஜ்...

46வது வருட புனித ஸஹீஹுல் புகாரீ ஷரீப் தமாம் நிகழ்வும், 3வது வருட புனித மிஃறாஜ் தின நிகழ்வுகளின் தொகுப்பு-2023

றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட, மனித குல வழிகாட்டி மாண்புமிகு அருள் நபீ அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 46வது வருட புனித ஸஹீஹுல் புகாரீ ஷரீப் தமாம் நிகழ்வு 18.02.2022 சனிக்கிழமை அன்று காத்தான்குடி-05பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய தினம் சுப்ஹ் தொழுகையையினை தொடர்ந்து புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணி தொடக்கம் 11.45 மணி வரை கத்முல் குர்ஆன், இமாம் புகாரீ றஹிமஹுல்லாஹ் மௌலித், இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் மௌலித், புனித மிஃறாஜ் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வும்  இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து அஸ்ர் தொழுகையின் பின் புனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பமாகி மஃரிப் தொழுகையின் பின் றஜப் மாதத்தின் 27ம் இரவான புனித மிஃறாஜ் தினத்தை சங்கையும் செய்யும் முகமாக மிஃறாஜ் தின நிகழ்வான இஸ்திஃபார், புனித ஸலவாத் மஜ்லிஸும் நடைபெற்றது. இஷா தொழுகையின் பின் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் சிறப்பு சொற்பொழிவும், துஆ, தபர்றுக் விநியோகம் இடம்பெற்று நிகழ்வுகள் யாவும் இனிதே ஸலவாதுடன் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments