Thursday, May 2, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“கூட்டு துஆ” கூடாதென்பதே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா! இத்தகவலை வெளியிட்ட மௌலவீ...

“கூட்டு துஆ” கூடாதென்பதே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா! இத்தகவலை வெளியிட்ட மௌலவீ முபாறக் மதனீ அவர்களுக்கு எனது நன்றிகள்!“கூட்டு துஆ” கூடாதென்பதே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
இதுவரை காலமும் கூட்டு துஆ ஆகும் என்ற கொள்கையிலேயே உலமா சபை இருந்ததென்று நான் நம்பியிருந்தேன். மௌலவீ முபாறக் மதனீ அவர்களின் பேச்சைக் கேட்ட பிறகுதான் இரகசியம் வெளியானது. அல்ஹம்து லில்லாஹ்!
 
( நானும் சில இடங்களில் கூட்டு துஆ ஓதுவதில்லை) என்று அறிவுலக மேதை ரிஸ்வி முப்தி சாஹிப் மௌலவீ முபாறக் மதனீ அவர்களிடம் சொன்னதாக அவர்களே சொல்கிறார்கள். இவ்வாறு மௌலவீ முபாறக் தனது உரையொன்றில் கூறியதை எனது காதால் கேட்டேன். ஆதாரம் உண்டு.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் தம்பி ரிஸ்வி முப்தீ அவர்கள் பல இடங்களில் பேசும் போது, “எமது அமைப்பான உலமா சபை “ஷாபிஈ” மத்ஹப் அடிப்படையில் இயங்கும்” என்று கூறியுள்ளார். இதற்கும் ஆதாரங்கள் உள்ளன.
இவ்வாறு பொது மக்கள் மத்தியில் கூறிய, கூறியும் வருகின்ற தம்பி ரிஸ்வி அவர்கள் மௌலவீ முபாறக் மதனீ அவர்களிடம் மேற்கண்டவாறு கூறியது “நிபாக்” நயவஞ்சகத் தனமா? இல்லையா? என்பதை பொது மக்களே சொல்ல வேண்டும்.
 
“ஷாபிஈ மத்ஹப்” சட்ட நூல்களில் “கூட்டு துஆ” ஓதுவது ஆகும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் தம்பி ரிஸ்வி இவ்வாறு மௌலவீ முபாறக் மதனீ அவர்களிடம் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.
 
தம்பி ரிஸ்வி அவர்களே!
நீங்கள் மௌலவீ முபாறக் மதனீ அவர்களிடம் நேரில் மேற்கண்டவாறு – அதாவது “நானும் சில இடங்களில் கூட்டு துஆ ஓதுவதில்லை” என்று சொன்னது உண்மையா? இல்லையா? அல்லது அவர்தான் பொய் சொல்கிறாரா? இது தொடர்பாக பொது மக்களுக்கு பகிரங்க அறிக்கை விடுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
 
நீங்கள் உண்மையிலேயே அவ்வாறு சொல்லியிருந்தால் நீங்கள் முனாபிகா? இல்லையா? இதற்கும் விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இதற்கு விளக்கம் தருவதோடு “கூட்டு துஆ” தொடர்பாக உங்களினதும், உங்களின் சபையினதும் நிலைப்பாடு என்ன என்பதையும், வஹ்ஹாபிஸம் என்பது வழிகேடா? இல்லையா? என்பது தொடர்பாக உங்களினதும், உங்கள் சபையினது நிலைப்பாட்டையும் பொது மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
“கூட்டு துஆ” தொடர்பாக மௌலவீ முபாறக் மதனீ அவர்களிடம் அவ்வாறு சொன்ன நீங்கள் என்னிடம் அவ்வாறு சொல்வீர்களா? சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று உங்களால் பகிரங்கமாகச் சொல்ல முடியுமா? நீங்கள் வஹ்ஹாபீகளிடம் ஒரு முகத்தையும், ஸுன்னீகளிடம் இன்னொரு முகத்தையும் காட்டி ஆளுக்கேற்றவாறு நடிப்பது உங்களுக்கு அழகல்ல.
 
சுமார் 10 வருடங்களுக்கு முன் உங்களுக்கு நான் “போன்” செய்து மௌலித் ஓதுவது தொடர்பாக நாட்டில் சர்ச்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நீங்கள் உலமா சபையின் தலைவராயிருப்பதால் இதற்கு தீர்க்கமான முடிவொன்றை நாட்டு மக்கள் மத்தியில் பகிரங்கமாகக் கூற வேண்டுமென்று கேட்ட போது நீங்கள் என்ன சொன்னீர்கள்? நினைவிருக்கிறதா?
 
இமாம் ஸுயூதீ அவர்களே மௌலித் ஓதலாம் என்று சொல்லியிருக்கும் நிலையில் ஓதக் கூடாதென்று எவன் சொன்னான்? என்று நீங்கள் என்னிடம் கேட்டது நினைவிருக்கிறதா? ஆளுக்கேற்றமாதிரி கதை சொல்வதற்கு உங்களிடம் பல வருடங்கள் கால் மடித்துக் கற்றுக் கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. கற்றுத் தருவீர்களா?
 
தம்பி ரிஸ்வி அவர்களே!
“கூட்டு துஆ” கூடாதென்பது உங்கள் கொள்கையென்றால் இலங்கைத் திரு நாட்டிலுள்ள அதிகமான பள்ளிவாயல்களில் ஐங்காலத் தொழுகையின் பின் கூட்டு துஆ ஓதப்பட்டு வருவது உங்களுக்குத் தெரியாதா? இலங்கையிலுள்ள அனைத்துப் பள்ளிவாயல்களையும் ஆளும் அரசனாயிருக்கும் நீங்கள் கூட்டு துஆ ஓதுவதை தடுக்காமல் இருப்பதேன்?
 
தம்பி ரிஸ்வி அவர்களே!
நீங்கள் ஒரு பெரிய மனிதன். உங்களுடன் உரையாடுவதாயின் “ஸலாம்” கூறி கண்ணியமாகவே உரையாட வேண்டும். அந்த இடத்தை நீங்களே கெடுத்துவிட்டீர்கள். என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் மதம் மாற்றியது யார்? நீங்கள்தானே! உங்களுக்கு நாங்கள் “ஸலாம்” சொல்வது ஆகுமா?
 
உங்களின் வண்டவாளங்களை எழுதத் தொடங்கினால் எழுதிக் கொண்டே போகலாம். “அம்பட்டன் குப்பையை கிழறினால் அத்தனையும் மயிரே!” ஆகையால் விட்டு விடுகிறேன். என் கேள்விக்கு விடை தந்து “கூட்டு துஆ”வுக்கு விளக்கம் சொல்லுங்கள்.
“கூட்டு துஆ” ஆகுமென்றால் அது தொழுகையிலும் ஆகும். தொழுகைக்கு வெளியேயும் ஆகும். இதுவே எதார்த்தமும், நியாயமுமாகும். “கூட்டு துஆ” ஆகாதென்று நீங்கள் சொல்வீர்களாயின் தொழுகையில் “பாதிஹா ஸூறா” ஓதிய பின் “ஆமீன்” என்று சொல்வது “ஸுன்னத்” என்று “ஷாபிஈ மத்ஹப்” சட்ட நூல்களில் கூறப்பட்டுள்ளதே “துஆ”வுக்குத்தானே “ஆமீன்” சொல்ல வேண்டும். “பாதிஹா சூறா”வில் துஆ இல்லையென்றால் எதற்காக “ஆமீன்” சொல்ல வேண்டும். என்பதற்கு சரியான ஆதாரங்களுடன் “பத்வா” வெளியிடுமாறு உங்களைக் கேட்டுக் கொள்வதுடன் பின்வரும் நபீ மொழிக்கு விளக்கம் கூறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
 
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِينَ آمِينَ آمِينَ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ حِينَ صَعِدْتَ الْمِنْبَرَ قُلْتَ: آمِينَ آمِينَ آمِينَ، قَالَ: «إِنَّ جِبْرِيلَ أَتَانِي، فَقَالَ: مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغْفَرْ لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُمَا، فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ» (رواه ابن حبّان 2387، وابن خزيمة 1888، الترغيب والترهيب 339)
நபீ பெருமானார் அவர்கள் “மின்பர்” மேடையில் ஏறியவுடன் மூன்று முறை “ஆமீன்” என்று சொன்னார்கள். நபீ தோழர்கள் பெருமானாரிடம் அல்லாஹ்வின் றஸூலே! நீங்கள் மின்பரில் ஏறிய பின் மூன்று முறை ஆமீன் என்று சொன்னீர்கள். ஏன் என்று கேட்டார்கள். நபீ பெருமானார் அவர்கள் பின்வருமாறு விளக்கம் சொன்னார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் வந்து, ஒருவன் புனித றமழான் மாதத்தை அடைந்தும் அவனின் பாவம் மன்னிக்கப்படாத நிலையில் அவன் நரகம் சென்றால் அல்லாஹ் அவனை தூரமாக்கி வைப்பானாக! என்று கூறிவிட்டு “ஆமீன்” என்று சொல்லுங்கள் என்று என்னிடம் சொன்னார். நான் ஆமீன் என்று சொன்னேன். ஒருவன் தனது பெற்றோர் இருவரையும், அல்லது ஒருவரை அடைந்து அவர்களுக்கு நலவு செய்யாத நிலையில் அவன் மரணித்து நரகம் சென்றால் அல்லாஹ் அவனை தூரமாக்கி வைப்பானாக! என்று கூறிவிட்டு “ஆமீன்” என்று சொல்லுங்கள் என்று என்னிடம் கூறினார். நான் ஆமீன் என்று சொன்னேன். அல்லாஹ்வின் றஸூலே நீங்கள் ஒருவனிடம் நினைவு கூறப்பட்டு அவன் உங்கள் மீது “ஸலவாத்” சொல்லமால் மரணித்து நரகம் சென்றால் அல்லாஹ் அவனைத் தூரமாக்கி வைப்பானாக! என்று கூறிவிட்டு ஆமீன் என்று சொல்லுங்கள் என்றார். நான் ஆமீன் என்று சொன்னேன் என்றார்கள்.
 
ஆதாரம்: இப்னு குஸைமா 1888, இப்னு ஹிப்பான் 2387, அத்தர்ஙீப் வத்தர்ஹீப் 339
மேற்கூறப்பட்ட நபீ மொழியில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “துஆ” செய்து விட்டு பெருமானாரிடம் ஆமீன் சொல்லுமாறு சொன்னதாகவும், பெருமானார் ஆமீன் சொன்னதாகவும் வந்துள்ளது.
 
இது தொடர்பாகவும் உலமா சபையின் சரியான விளக்கத்தையும், பொது மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தீ அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments