உலகில் ஆயிரம் இணையம்- அதில்
உன் பெயர் உரக்கச் சொல்கிறோம் ஷம்ஸ்.!
காத்த நகர் மண்ணில் பூத்த மா வலீ – அபுல் இர்பான்
காதிமுல் கவ்மி தந்த அறிவுப் பெட்டகம் ஷம்ஸ்!
ஆலமுல் அர்வாஹ் ஆன்ம உலகு முதல்
ஆலமுல் அஜ்ஸாம் சூக்கும உலகுத்தவராஜர் வரை-
நபிமார், வலீமார், நல்லடியார்களைச் சுமக்கும் பேழை ஷம்ஸ்!
என்ன கோடி தவம் செய்தோம் நாம் ???
பொய்யான உலகினில் மெய்யான மெஞ்ஞானம் மோதிடும்
அஞ்ஞான ஐயம் அறுத்திடும் அகமியப்போதினி ஷம்ஸ்!
வீடியோ ஓடியோ உலமாக்கல் குரல் கணீரென – தொடர்
ஆட்டிகல், பத்ரிய்யா வாசலில் மனந்து வரும் மஜ்லிஸ் நிகழ்வுகள்,
எழுதுகரம் கொண்டு எட்டிப்பிடிக்க முடியாத இதய வாசலை
இவைகொண்டு தட்டித்திறக்கிறாய் ஷம்ஸ்!
நீ பெற்ற பெயர் குரு நாதரின் இரவல் அன்றோ?
முற்றத்து மல்லிகை மனப்பது போல் “ஷம்ஸுல் உலமா” வின்
கடைக்கண் பார்வை பட்டவன் நீயல்லோ ஷம்ஸ்!
உன் பிறப்பை நானறியேன் – ஆயினும் இம்மாதம்
என் குரு நாதர் பிறந்த நாள் நான் அறிவேன்.
தனிக்கொடி கொண்டு பறக்கிறாய் !
அது அபுல் இர்பான் ஆசியினால்
தத்துவம் கூறி சிறகடிக்கிறாய்!
அது ஷம்ஸுல் உலமா மிஸ்பாஹியினால்!
– புஸ்தானுல் ஆஷிகீன் –