Sunday, May 5, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இஸ்லாமிய வரலாற்றில் ஓர் இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை காவு கொண்ட கொரோனா.

இஸ்லாமிய வரலாற்றில் ஓர் இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை காவு கொண்ட கொரோனா.

(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)

இவை “கொரோனா” என்ற பெயரில் அறியப்படாமல் “தாஊன்” என்ற பெயரால் அறியப்பட்டவையாகும்.

قال أبو الحسن المَدائِنيُّ (كانتِ الطّواعينُ المَشهورةُ العِظام في الإسلام خمسةٌ ، طَاعُوْنْ شِيْرُ وَيْهْ ، بالمَدائِن في عهد رسول الله صلّى الله عليه وسلّم سنةَ ستٍّ من الهجرة ، ثم طاعونُ عَمْوَاسْ في زمن عمر بن الخطاب كان بالشام ، مات فيه خمسةٌ وعشرُون ألفا، ثم طاعونُ في زمنِ بْنِ الزُّبَيْرِ في شوّال سنة تِسعٍ وسِتّين ، وهو طاعون الجارف، مات في ثلاثة أيّام في كلّ يوم سبعونَ ألفا، مَات فيه لأنس بن مالك رضي الله عنه ثلاثة وثمانون ابنا، وقيل ثلاثةٌ وسبعون ابنا ، ومات لعبد الرحمن بن أبي بكرة أربعُونَ إبنا ، ثم طاعون الفَتَياتِ في شوّال سنة سَبع وثمانين، ثم طاعونُ سنةَ إحدى وثلاثين ومأةٍ في رجب ، واشتدَّ في شهر رمضان ، وكان يُحْصَى في سِكَّةِ المِرْبَد في كلّ يوم ألفُ جنازة ، ثم خَفَّ في شوّالٍ ، وكان بالكُوفة طاعون سنة خمسين، وفيه تُوُفِّـيَ المغيرة بن شعبة ،

وذكر ابن قُتيبةَ في كتابه ”المعارف” (ص – ٦٠١ ) عن الأصمعِيّ في عَدَد الطّواعينِ نحوَ هذا ، وفيه زيادةٌ ونقصانٌ.
قال وسُمِّي طَاعونُ الفَتَيَات ، لأنّه بدأَ في العَذَارَى بالبَصَرَة وواسِطَ والشّام والكُوفة ، ويُقال له ”طاعون الأشراف” لِمَا مَاتَ فيه من الأشراف، قال ولم يَقَعْ في المدينة ولا مكّةَ طاعون قط ، (الأذكار – ص – ٢٦٦ )
இஸ்லாமிய வரலாற்றில் இன்று தொற்று நோயென்று பரவலாகப் பேசப்படுகின்ற பயங்கர நோய் ஐந்து தரம் ஏற்பட்டுள்ளது.

ஒன்று – طَاعُوْنْ شِيْرُوَيْهْ – தாஊன் ஷீறுவைஹ். இது ஹிஜ்ரீ 6ம் வருடம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் உயிரோடிருந்த காலத்தில் “மதாயின்” என்ற இடத்தில் ஏற்பட்டது. “மதாயின்” என்பது இறாக் நாட்டிலுள்ள “தஜ்லா” நதிக்கருகில் உள்ளது.

இரண்டு – طَاعُوْنْ عَمْوَاسْ – “தாஊன் அம்வாஸ்”. இதை “இம்வாஸ்” என்றும் சொல்லலாம். இது ஹிஜ்ரீ 18 – கி – பி 640ல் ஏற்பட்டது. இந்நோயால் முஸ்லிம்களில் 25 ஆயிரம் பேர் அல்லது 30 ஆயிரம் பேர் மரணித்தனர். இது உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் “ஷாம்” தற்போதைய சிரியாவில் நடந்தது. நபீ தோழர்களில் சுமார் 30 பேர்களும் இதன் போது மரணித்தனர். இந்த விபரம் ஏற்கனவே பதிவானதாகும்.

மூன்று – طَاعُوْنْ الجَارِفْ – “தாஊனுல் ஜாரிப்”. இது இப்னுஸ்ஸுபைர் அவர்களின் காலத்தில் “ஷவ்வால்” மாதம் ஹிஜ்ரீ 69ல் நடந்தது. இதன்போது மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரம் பேர் மரணித்தனர். இமாம் மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் அன்புக்குரிய மகன் “அனஸ் இப்னு மாலிக்” றழியல்லாஹு அன்ஹு அவர்களின் குழந்தைகளில் 83 ஆண் பிள்ளைகள் மரணித்தனர். 73 பேர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதே போல் அப்துர் றஹ்மான் இப்னு அபீ பக்றா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் 40 ஆண் மக்களும் மரணித்தனர்.

நான்கு – طَاعُوْنْ الفَتيَات – “தாஊனுல் பதயாத்”. இது இறாக் நாட்டின் பஸறா, வாஸித், கூபா போன்ற ஊர்களிலும், “ஷாம்” சிரியாவிலும் ஏற்பட்டது. இதில் நபீ தோழர்களிற் பலரும், பிரசித்தி பெற்ற பல தலைவர்களும் மரணித்ததால் طَاعُوْنْ الأشراف – “தாஊனுல் அஷ்றாப்” என்றும் இது அழைக்கப் படுகிறது. இது ஹிஜ்ரீ வருடம் 87ல் நடைபெற்றது.

ஐந்து – இன்னும் ஒன்று. இதன் பெயர் அறியப்படவில்லை. இது ஹிஜ்ரீ 131ல் றஜப் மாதம் நடைபெற்றது. நமழான் மாதம் இதன் வேகம் – அகோரம் கடுமையானதால் ஒட்டகங்கள் கட்டும் ஏரியாவில் ஒரே நாளில் ஆயிரம் “ஜனாஸா” மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இவ்வாறு இஸ்லாமிய வரலாற்றில் ஐந்து பெரிய நிகழ்வுகள் நடந்துள்ளன. பல்லாயிரம் முஸ்லிம்கள் மரணித்துள்ளனர். மொத்தம் ஓர் இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் மரணித்துள்ளார்கள்.

இன்னுமொரு “தாஊன்” பக்தாத் – “கூபா” பகுதியில் ஹிஜ்ரீ 50ம் ஆண்டு நடந்துள்ளது. இதன் போது பிரசித்தி பெற்ற நபீ தோழர் முஙீறத் இப்னு ஷுஉபா மரணித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்விபரங்கள் இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல் அத்கார்” என்ற நூல் 266ம் பக்கத்தில் உள்ளது.

இலங்கைவாழ் இறையடியார்களே!

அடியார்களுக்கு நம்பிக்கை யானைக்குத் தும்பிக்கை என்று மக்கள் சொல்வதுண்டு. இதேபோல் “கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” என்றும் சொல்வதுண்டு.

இறையடியார் எவராயினும், குறிப்பாக முஸ்லிம்கள் இறைவன் மீது அசையாத, எவராலும் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

.وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ
இறைவன் நாடாமல் நீங்கள் நாடுவதில்லை. (இறைவன் நாடினால்தான் உங்களாலும் நாட முடியும்)
திருக்குர்ஆன் – (81 – 29), (76 – 30)

எனவே இறைவன் நாடியது நிச்சயமாக நடந்தே தீரும், அவன் நாடாதது ஒரு போதும் நடக்காது என்ற நம்பிக்கையோடு வாழவேண்டும்.

கொரோனா என்ற பயங்கர நோயால் நாம் மட்டும் பாதிக்கப்படவில்லை. நமக்கு முன் வாழ்ந்த முஸ்லிம்களும், மற்றவர்களும் பாதிக்கப்பட்டும், பல உயிர்களை இழந்துமே உள்ளனர்.

நபீ தோழர் – ஸஹாபீ – அனஸ் பின் மாலிக் அவர்கள் இமாம் மாலிக் அவர்களின் அன்பு மகன் ஆவார். இவரின் ஆண் மக்களில் 83 பேர் ஒரே நாளில் மரணித்திருந்தும் அவர்கள் அசையாமலிருந்ததும், அப்துர் றஹ்மான் இப்னு அபீ பக்ர் அவர்களின் மக்களில் 40 பேர் ஒரே நாளில் மரணித்திருந்தும் கூட அவர்கள் அசையாமலும், நம்பிக்கை இழக்காமலும் இருந்தது நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

(பொறுத்தார் அரசாள்வார்)

குறிப்பு : இமாம் அனஸ் பின் மாலிக் றழியல்லாஹு அன்ஹு பற்றிய விபரம் மிக விரைவில் பதிவாகும்.

——————————————————————————————————————–.

THE PANDEMIC THAT GENOCIDED MORE THAN ONE HUNDRED THOUSANDS MUSLIMS IN ISLAMIC HISTORY

(Composed by – As Sheik Moulavee Alhaj A. Abdur Rauff.Misbahee-Bahjee)

These were known as “THAAOON” instead of the word CORONA

قال أبو الحسن المَدائِنيُّ (كانتِ الطّواعينُ المَشهورةُ العِظام في الإسلام خمسةٌ ، طَاعُوْنْ شِيْرُ وَيْهْ ، بالمَدائِن في عهد رسول الله صلّى الله عليه وسلّم سنةَ ستٍّ من الهجرة ، ثم طاعونُ عَمْوَاسْ في زمن عمر بن الخطاب كان بالشام ، مات فيه خمسةٌ وعشرُون ألفا، ثم طاعونُ في زمنِ بْنِ الزُّبَيْرِ في شوّال سنة تِسعٍ وسِتّين ، وهو طاعون الجارف، مات في ثلاثة أيّام في كلّ يوم سبعونَ ألفا، مَات فيه لأنس بن مالك رضي الله عنه ثلاثة وثمانون ابنا، وقيل ثلاثةٌ وسبعون ابنا ، ومات لعبد الرحمن بن أبي بكرة أربعُونَ إبنا ، ثم طاعون الفَتَياتِ في شوّال سنة سَبع وثمانين، ثم طاعونُ سنةَ إحدى وثلاثين ومأةٍ في رجب ، واشتدَّ في شهر رمضان ، وكان يُحْصَى في سِكَّةِ المِرْبَد في كلّ يوم ألفُ جنازة ، ثم خَفَّ في شوّالٍ ، وكان بالكُوفة طاعون سنة خمسين، وفيه تُوُفِّـيَ المغيرة بن شعبة ،

This pandemic has occurred five times in Islamic history.

One. طَاعُوْنْ شِيْرُوَيْهْ
“Thaaoon Seeruvasth” occurred at Mathaayin near Thajla River Bank in Iraq in Hijrae 6th while holy prophet (pbuh) was alive.

Two. طَاعُوْنْ عَمْوَاسْ
Thaoon Amvaaz also called Imvaaz occurred in SHAAM now Syriya in Hijrae 18th – 840 AD; during the regime of Hazrath Umar (RA), killed twenty thousand or thirty thousand people due to its impact.

Three. طَاعُوْنْ الجَارِفْ
Thaoonul Jaarib occurred during the time of Ibnuzzubair in Shawwaal month- Hijrae 69th. It lasted three days; seventy thousand people died per day. 83 male children (also said 73 children) of Anaz Ibn Maliq- Son of Imam Maliq (RA) died and 40 male children of Abdur Rahman Ibn Abee Baqra also died.

Four. طَاعُوْنْ الفَتيَات
“Thaaoonul Fathaayaath” occurred in Hijrae 87 in the cities such as Bazra, Waazith and Koofa
in Iraq and in Shaam (Syriya). This is also called (ARABIC)
“Thaoonul Ashraaf” since many companions of Nabee (pbuh) and famous leaders also died.

Five.
Another pandemic its name is not known; occurred in Ramzan month – Hijrae 131. Since the spread was so speed, 1000 janazas have fallen in a single day itself in an area where the camels are kept tying.

Five huge occurrences have occurred so in Islamic history and more than hundred thousands of people have died.

Another “Thaoon” has occurred in Koofa of Iraq in Hijrae 50. It is remarkable that famous companion of Nabee (pbuh) Muheerath Ibnu Shoofa died.

All these details are in page 266 of the book “AL ATHKAAR” of Imam Navaee ( RA)

GOOD SERVANTS LIVE IN SRI LANKA!

It is said that the God will not give up those who have faith of certitude on God.
All the good servants of God particularly the Muslims must be with the faith of certitude.

.وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ

“Unless the god aspires, you do not aspire.”( You can aspire if only the God adpires) Holy Qur’aan (81-29) ,(76-30)

Therefore, we should live with hope of what the God aspires will surely occur. What he does not aspire will never happen.

Due to the pandemic CORONA, not only we have got the impact but our Muslim ancestors and others also have met this impact and died.

The companion of Nabee (pbuh) Anas bin Maaliq is the son of Imam Maaliq (RA). In spite of his 83 male children died he was with unshakable certitude. In addition, Abdur Rahman Ibn Abee Bakra- though his 40 male children died in a single day he too was with certitude.

Let this history be a good lesson to us.

ALL THINGS COME TO THOSE WHO WAIT.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments