Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸூபீகளின் அவல நிலைகள்.

ஸூபீகளின் அவல நிலைகள்.

தொகுப்பு: ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய ஸூபீ மகான்களில் பலர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இன்னும் பலர் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். இன்னும் சிலர் உயிரோடு வன விலங்குகளுக்கு உணவாக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் சிலர் பொருளாதாரத் தடை செய்யப்பட்டுள்ளார்கள். இன்னும் அதிகமானோர் மக்கள் மத்தியில் உரையாற்றக் கூடாதென்று தடை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு ஸூபீ மகான்கள் பல்வேறு கோணங்களில் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் ஸூபீகளிற் பலர் மூடிய வாயைத் திறக்காமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். இன்னும் பலர் தமது நாடுகளை விட்டும் வெளியேறி வேறு நாடுகளுக்குச் சென்று தம்மை யாரென்று காட்டிக் கொள்ளாமல் இலைமறை காய் போல் வாழ்ந்து மரணித்துள்ளார்கள். இன்னும் பலர் நோயாளிகள் போல் நடித்து மருத்துவமனைகளை தமது மரணம் வரை தமது வீடாக்கிக் கொண்டார்கள்.
 
இவர்கள் இவ்வாறு துன்புறுத்தப்படுவதற்கு பிரதான காரணமாயிருந்தவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம், ஸூபிஸ ஞானம் தெரியாத உலமாஉகள் என்பதே வரலாறு கூறும் உண்மையாகும். இந்த மகான்கள் இறையியல் தத்துவங்களைப் பேசப் பேச பொது மக்கள் அவர்களின் பேச்சால் கவரப்பட்டு அவர்களிடம் மண்டியிட்டிருந்ததைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத போலி மார்க்க அறிஞர்களே அவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு சதி செய்துள்ளார்கள்.
 
இன்று இலங்கை நாட்டின் பல பகுதிகளிலும் சமாதி கொண்டுள்ள ஸூபீகளிலும், இறைஞானிகளிலும் அதிகமானோர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களேயாவர். ஆய்வு செய்தால் உண்மை தெளிவாகும்.
 
இவ்வாறு துன்புறுத்தப்பட்டவர்களின் முழு விபரங்களையும் நான் ஒன்று திரட்டிக் கொண்டிருக்கிறேன். இன்னும் முற்றுப் பெறவில்லை.
 
அவர்களின் வரலாறுகளைத் தேடித் திரட்டுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. ஏனெனில் அவர்களின் வரலாறுகள் எழுதப்பட்ட நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அவற்றைக் கூட நமது நாட்டில் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. அவற்றை அறபு நாடுகளிலிருந்தே பெற வேண்டியுமுள்ளது. இன்ஷா அல்லாஹ்.
 
இறைஞானி இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்களின் اَلطَّبَقَاتُ الْكُبْرَى , اليواقيت என்ற நூல்களிலிருந்தும் இமாம் யாபிஈ அவர்களின் نَشْرُ الْمَحَاسِ என்ற நூலில் இருந்தும், இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் எழுதிய تَلْبِيْسُ إِبْلِيْسْ என்ற நூலில் இருந்தும் நான் பெற்ற ஸூபீகளிற் சிலரின் குறிப்புகளை இங்கே தருகிறேன்.
 
முதலில் அவர்களின் பெயர்களை அறபு மொழியில் பதிவு செய்துவிட்டு தமிழில் விபரமாக எழுத நாடியுள்ளேன்.
 
أسماء بعضِ المتصوّفين الّذين قُتِلُوا وزُنْدِقُوا وكُفِّرُوا،
يقول عبد الوهّاب الشّعراني فى طبقاته 1 – 15، 16، 17 واليواقيت والجواهر، ويقول محمود عبد الرؤوف القاسم فى كتابه الكشف عن حقيقة الصوفيّة:
أبو يزيد البسطامي، نُفِي من بلده سبع مرّات،
ذو النّون المصـريّ، أنّهم وشوا به إلى بعض الحُكّام، وحَمَلوه من مصـر إلى بغداد مَغلُولا مقيّدا، سافر معه أهل مصـر، يشهدون عليه بالزّندقة،
سمنون المحبّ، وقع له محنة عظيمة، ثمّ إنّ الخليفة أمر بضـرب عُنقِ سمنون وأصحابه، فمنهم من هَرُبَ، ومنهم من تَوَارَى سِنين،
أبو سعيد الخراز، أفتى العلماء بتكفيره،
سهل بن عبد الله، اُخرج من بلده تُسْتر، إلى البصرة، ونسبوه إلى قبائحَ وكفّروه،
منصور حلّاج، قُتل، قصّته مشهورة، سأذكرها فى آخر هذا الموضوع،
سيّد الطائفة جُنيد البغدادي، شهدوا عليه حين كان يُقرِّر فى علم التوحيد، ثمّ إنّه تستَّرَ بالفقه،
أخرِج محمد بن الفُضيل البَلخِي من بلخَ،
عَقَدُوا للشّيخ عبد الله بن أبي جمرةَ مجلسا فى الردّة عليه، فلَزِمَ بيتَه، فلم يخرج إلّا للجمعة حتّى مات،
أخرج الحكيم الترمذي مِن تُرمُذْ، حين صنّف كتاب ‘ عِلَلُ الشريعة ‘ وكتاب ‘ خَتْمُ الأولياء ‘ وأنكروا عليه،
أنكر زُهّادُ الرَّازِ وصوفيتُها على يوسف بن الحسين، وتكلّموا فيه، ورمَوه بالعَظائم،
أخرجوا أبا الحسن البوشَنْجِيْ، وأنكروا عليه وطردوه،
أخرجوا أبا عثمان المغربي من مكّة، وطاف به العَلَوِيّة، (أي أحفاد علي بن أبي طالب) على جَمَل فى أسواق مكة بعد ضربه على رأسه ومنكبيه،
وشهدوا على الإمام سُبكي بالكفر مرارا،
الإمام أبو بكر النّابلسـي، أخرجوه من المغرب مُقيّدا إلى مصـر، وشهدوا عليه عند السلطان، فأُخِذَ وسُلِخَ وهو حيٌّ، أو قُتل ثم سُلخ،
أخرج الشّيخ أبو مَدْين المَغْربي مِن بَجَايةَ، مات وهو فى طريقه إلى القتل،
أخرج أبو القاسم النّصراباذي من البصرة وأنكروا عليه،
أخرج أبو عبد الله الشّجريّ صاحب أبي حفص الحدّاد،
شهدوا على أبي الحسن الحُصري بالكفر،
تكلّموا فى ابن سمنون وغيره بالكلام الفاحش حتّى مات، فلم يحضروا له جنازة،
تكلّموا فى الإمام أبي القاسم بن جميل بالعظائم إلى أن مات،
أفتوا بتكفير الإمام الغزّالي وأحرقوا كتابه ‘ الإحياء ‘ وكان من جملة مَن أنكر على الغزّالي وأفتى بتحريق كتابه القاضي عِياض وابن رُشدٍ،
أخرجوا أبا الحسن الشّاذلي من بلاد المغرب بجماعته، ثمّ كاتَبُوا نائب الإسكندريّة بأنّه سيَقْدُمُ عليكم مَغْرِبِيٌّ زنديق،
رموا الشّيخ أحمد بن الرفاعي بالزندقة والإلحاد،
قتلوا الإمام أبا القاسم بن قَسِيٍّ،
قتلوا ابن بَرَّجان (شيخ ابن عربي أو شيخ شيخه) والخوليّ والمرجانيّ، فشهدوا عليهم بالكفر،
وأمّا الشيخ محي الدين ابن عربي وسيّدي عُمر بن الفارض، فلم يَزَل المنكرون ينكرون عليهما إلى وقتنا هذا،
أنكروا على الشّيخ عبد الحقّ بن سبعين، وأخرجوه من بلاد المغرب، وأرسلوا نَجَّابًا بدرج مكتوب أمامه يُحذِّرُون أهل مصر منه،
أبو نعيم الإصفهاني، أخرجه أهل إصفهان ومنعوه من الجلوس فى الجامع،
عبد السلام بن مشيش، شيخ أبى الحسن الشّاذلي، قُتل فى بلاد المغرب، قصّته مشهورة، وهو أستاذ الأقطاب الأربعة،
محمد الرُّوَيْجِلْ العُريان، قتله العثمانيّون، حين دخوله مصر،
أبو العباس أحمد المُلثَم، كفّروه،
أبو الفتح الواسطي، كان مُبتَلًى بالإنكار عليه، مات فى الإسكندريّة، حوالي سنة 580 هـ،
عبد الله بن محمد العريشي المرجاني، اُمتحن، وأفتى العلماء بتكفيره، قُتل فى تُونس سنة 669هـ،
محمد القَونِوِيْ (صدر الدين) صاحب ابن عربي وابن زوجته ، كان مُبتلًى بالإنكار عليه، مات فى قونيّة سنة 672 هـ،
وشهددوا على الشّبلي بالكفر مرارا (اليواقيت والجواهر) 1 -13
أنكر على سيّدي إبراهيم الجَعْبري وسيّدي حُسين الجامي،
أبو عبد الله الحسين بن مكّيّ الصّبيحيّ، كفّره أبو عبد الله الزّبيدي، وهيَّجَ عليه العامّة،
أبو العبّاس أحمد بن عطاء الله ، رُفع إلى السلطان ونُسب إلى الكفر والزندقة، فقُتل ضربا بخُفِّه،
أبو حمزة الصّوفي، كفّروه، (يقول ابن الجوزي فى تَلْبِيْسِه – (اسم كتابه تلبيس إبليس) إنّهم قتلوه ونادوا على فرسه ‘هذا فرس الزِّنديق ‘
أبو الحسن النّوري، شهدوا عليه بالكفر،
عَدِيُّ بن مسافر، شيخ الطريقة العدويّة، التي هي الآن ‘ اليزيديّة ‘ نُبِشَ قبره وأحرق ما فيه مرّتين، مرّة سنة 652 هـ على يد أمير المَوصِلْ، ومرّة سنة 817 هـ على يد جماعات كبيرة من الأكراد،
أبو حيّان التوحيدي، نُفي لسوء عقيدته، وكان من شِيرَازْ، وهو شيخ الصوفيّة،
شهاب الدين السّهروردي، المقتول، قُتل فى حلب على الزندقة، سنة 587 هـ،
لسان الدين بن الخطيب، وزير غرناطة، قتل على الزندقة، بسبب كتابه فى التصوّف (روضة التعريف) سنة 776 هـ،
منقول من كتاب (الكشف عن حقيقة الصوفية، ص 843 للشيّخ محمود عبد الرؤوف القاسم)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments