Thursday, May 2, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கழிர் நபீ அவர்களும், இஸ்கந்தர் துல்கர்னைன் அரசரும்.

கழிர் நபீ அவர்களும், இஸ்கந்தர் துல்கர்னைன் அரசரும்.

தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
ஆன்மிகம், லௌகீகம் இரண்டுக்கும் இரண்டு அரசர்கள்.
 
இவர் யார்? إبتلاء الأخيار எனும் நூலாசிரியர் கூறுகையில் அல்இஸ்கந்தர் என்பது பெயர் என்றும், “துல்கர்னைன்” என்பது (இரு கொம்புகள் உள்ளவர் அல்லது இரண்டு நூறாண்டுள்ளவர்) அவரின் பட்டம் என்றும் கூறியுள்ளார்.
 
இவர் வியப்பு மிக்க வரலாறுடையவர் ஆவார். இவரின் தந்தை உலகப் பிரசித்தி பெற்ற வானவியல் ஆய்வாளராயிருந்தார்.

كان أبوه أعلمَ أهلِ الأرض بعِلم النّجوم، ولم يراقب أحدٌ الفَلَكَ مَا رَاقَبَهُ، وكان قد مدّ الله تعالى له فى الأجل،
இவர் போல் உலகில் நட்சத்திர அறிவுள்ளவர் எவரும் இருக்கவில்லை. நீண்டகாலம் வாழும் நற்பாக்கியத்தை அல்லாஹ் இவருக்கு வழங்கியிருந்தான்.
 
فقال ذات ليلةٍ لزوجتِه، قد قتلني السّهرُ، فدَعِيْنِيْ أَرقدُ ساعةً، وانظُري إلى السّماء، فإذا رأيتِ قد طلع فى هذا المكان نَجْمٌ – وأشار بيده إلى موضع طُلوعِه – فَنَبِّهِيْنِيْ حتّى اَطَئَكِ، فَتَعَلِّقِيْ بولد يعيش إلى آخر الدّهر،
ஒரு நாள் இரவு தனது மனைவியிடம், தூக்கம் என்னைக் கொல்கிறது. அதாவது எனக்கு தூக்கம் மிகைத்து விட்டது. சொற்ப நேரம் நான் உறங்குகிறேன். நீ வானத்தைப் பார்த்து அவதானித்துக் கொண்டிரு. வானில் இன்ன இடத்தில் ஒரு நட்சத்திரம் உதித்தால் என்னை எழுப்பிவிடு. நான் அவ்வேளை உன்னுடன் உடலுறவு கொள்வேன். அவ்வேளை நீ கர்ப்பிணியானால் பிறக்கும் குழைந்தை நீண்ட காலம் வாழும் என்று கூறி வானில் குறித்த நட்சத்திரம் உதிக்கும் இடத்தையும் தனது கையால் சுட்டிக் காட்டினார்.
 
وكانتْ اُختُها تسمع كلامَه، ثمّ نام أبو الإسكندر، فجعلت اُختُ زوجته تراقب النَّجْمَ، فلمّا طلع النّجمُ أعلمتْ زوجَها بالقِصَّة، فوَطِئَها، فَعَلَقَتْ منه بالخضر، فكان الخضِرُ – الخِضْرُ – ابنَ خالةِ الإسكندر، ووزيرَه،
“இஸ்கந்தர் துல்கர்னைன்” என்பவரின் தந்தை வானவியல் ஆய்வாளர் தனது மனைவியிடம் நட்சத்திரம் உதித்தல் பற்றிச் சொன்ன செய்தியை அவளின் சகோதரி – இவரின் மதினி – இரகசியமாக செவிமடுத்துக் கொண்டிருந்தாள்.
 
இஸ்கந்தரின் தந்தை உறங்கிவிட்டார். அவரின் மனைவியின் சகோதரியான மதினி குறித்த நட்சத்திரத்தை அவதானித்துக் கொண்டிருந்தாள். நள்ளிரவில் தனது கணவனை எழுப்பி – விழிப்பூட்டி அவள் மறைந்து நின்ற கேட்ட இரகசியத் தகவலை தனது கணவனிடம் விபரமாகக் கூறினாள். அதாவது நட்சத்திரம் உதித்துவிட்டது. வானவியலாளரும், மனைவியும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வோம் என்று தனது கணவனிடம் சொன்னாள். அதாவது இந்த நேரம் நாம் உடலுறவு கொண்டு அத்தகைய ஒரு குழந்தையைப் பெற்றெடுப்போம் என்று அவரிடம் கூறினாள். அதாவது அவரை உடலுறவுக்கு அழைத்தாள். அவரும் சம்மதித்து உடலுறவு நடந்தது. அதில் பிறந்த குழந்தைதான் இன்று வரை “ஹயாத்” உயிருடன் வாழ்கின்ற “ஹயாத்து நபீ” என்று ஆண்களாலும், அதிகமாக பெண்களாலும் அழைக்கப்பட்டு வருகின்ற “களிர்” அல்லது “கிழ்று” அலைஹிஸ்ஸலாம் அவர்களாவர்.
 
பிறந்த குழந்தை கழிர் என்பவர் இஸ்கந்தர் என்பவரின் சாச்சியின் மகனும், அவரின் அமைச்சருமாவார்.
 
فلمّا استيقظَ أبو الإسكندر رأى النّجمَ قد نَزَلَ فى غير البُرْجِ الّذي يرقبُه، فقال لزوجته لِمَ لَمْ تُنَبِّهِيْنِيْ ؟ فقالت اسْتَحْيَيْتُ واللهِ، فقال لها أَمَا تَعْلَمِيْنَ أنِّي اُراقِبُ هذا النّجم منذ أربعين سنةً؟ والله لقد ضيَّعْتِ عمري فى غيرِ شيئ، ولكنّ السّاعة يطلع فى إثرِه نجمٌ فأطئُكِ فَتَعَلِّقِيْنَ بولد يملِكُ قَرْنَيِ الشمسِ، فما لَبِتَ أنْ طَلَعَ، فواقعها، فعلقت بالإسكندر،ووُلد الإسكندرُ وابن خالتِه الخضـر فى ليلة واحدة، ثمّ إنّ الإسكندر فتحَ اللهُ عليه بتمْكِينِهِ فى الأرض وفتح البلاد، وكان من أمره ما كان،
இஸ்கந்தரின் தந்தை வானவியலாளர் கண் விழித்து நட்சத்திரத்தை பார்த்த போது அவர் எதிர் பார்த்த கோட்டிலிருந்து வேறு பாதைக்கு அது இறங்கியிருந்தது. இதைக் கண்ட இஸ்கந்தரின் தந்தை நட்சத்திர ஆய்வாளர் தனது மனைவியிடம் கேட்ட போது அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு வெட்கமாயிருந்தது என்று கூறினார்.
 
அப்போதவர், நான் இந்த நட்சத்திரம் உதிப்பதை நாற்பதாண்டுகளாக எதிர்பார்த்து வந்தவன் என்பது உனக்குத் தெரியாதா? நீ என் வாழ்க்கையை வீணாக்கிவிட்டாய் என்று மனைவியிடம் கூறிவிட்டு இப்போது ஒரு நட்சத்திரம் உதிக்கப்போகிறது. உதித்ததும் நான் உன்னுடன் உடலுறவு கொள்வேன். இதில் கர்ப்பமாகி ஒரு குழந்தை பிறக்கும். அக்குழந்தை உலகை ஆளும் என்று கூறி அவளுடன் உடலுறவு கொண்டார். அதன் மூலம் பிறந்த குழந்தைதான் உலகையாண்ட இருவரில் ஒருவரான “சிக்கந்தர் துல் கர்னைன்” என்பவராவார்.
 
இஸ்கந்தர் துல்கர்னைன் என்பவரும், அவரின் சாச்சியின் மகன் கழிர் என்பவரும் ஒரே இரவில் பிறந்தவர்களாவர்.
 
சிக்கந்தர் துல்கர்னைன் உலகையாண்ட மன்னரானார். கழிர் – கிழ்று – அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆன்மிக வானில் உதிக்கும் நபீயாக அல்லது வலீயாக ஆனார்.
 
கழிர் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் நபீயா? வலீயா? என்பதில் ஆய்வாளர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் அவர்களை நபீ என்பர். இன்னும் சிலர் வலீ என்பர். எதார்த்தம் அல்லாஹ் அறிந்ததே! எனினும் “கழிர்” அலைஹிஸ்ஸலாம் இன்னும், இன்றும் உயிரோடுள்ளார்கள்.
 
இருவரின் வரலாறும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
 
இஸ்கந்தர் துல்கர்னைன் நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் போல் உலகம் முழுவதையும் ஆட்சி செய்த பெரும் அரசர்.
இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்பதில் வரலாற்றாசிரியர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
 
வஹ்ப் இப்னு முனப்பஹ் எனும் வரலாற்றாசிரியர் அவர்கள் கூறுகையில் அவர் “றூம்” என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவர் பருவ வயதை அடைந்ததும் அல்லாஹ் இவரை இந்தப் பரந்த பூமி முழுவதையும் ஆளும் அரசராக்கி அறிவுரைகளும் வழங்கினான் என்றும் கூறியுள்ளார்கள்.
 
இவர் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தவர் என்றும், அவர்களை எதிர்த்த அட்டூழியம் நிறைந்த ஓர் அரசனைக் கொன்றொழித்தவர்கள் என்றும் சொல்லப்படுகின்றது.
 
உலகம் முழுவதையும் ஆட்சி செய்த வல்லரசர்கள் நால்வர். இருவர் விசுவாசிகள் – முஸ்லிம்கள். இருவர் காபிர்கள் – முஸ்லிம்கள் அல்லாதவர்கள்.
 
நபீ ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவர்களும் இஸ்கந்தர் துல்கர்னைன் அலைஹிஸ் ஸலாம் அவர்களும் விசுவாசிகள். இப்றாஹீம் நபீ அவர்களை எதிர்த்த நும்றூத் என்பவனும், புக்து நஸ்ர் என்பவனும் காபிர்களாவர்.
 
ஐந்தாவது ஒருவர் ஸெய்யிதுனா மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களாவர். இறுதி நாள் நெருங்கும் வேளை அவர்கள் வருவார்கள். இப்போது அவர்கள் இல்லை. பிறந்துதான் அவர்கள் வருவார்கள். அவர்கள்தான் அந்நாளில் மக்களை வழிகெடுக்க வருகின்ற “தஜ்ஜால்” என்பவனை கொலை செய்வர்கள்.
 
இவ்விருவரும் (சிக்கந்தர் துல்கர்னைன், “கழிர்”) இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தவர்கள் என்றும், நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தவர்கள் என்றும் வரலாற்றாசிரியர்களில் பலர் கூறுகின்றார்கள்.
 
சிக்கந்தர் துல்கர்னைன் என்பவர் உலகுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நீதி, நேர்மையுள்ள ஓர் அரசராவார்கள்.
 
“கழிர்” அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்வினால் அனுப்பி வைக்கப்பட்ட நபீ அல்லது வலீ ஆவார்கள்.
 
கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி இன்னும் எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்!
 
கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உலகம் முழுவதையும் சுற்றி வருகின்ற ஒரு நபீ அல்லது ஒரு மெய்ஞ்ஞானி ஆவார்கள்.
 
முறைப்படியும், விதிப்படியும் முயற்சி செய்தால் அவர்களைக் காண முடியும். “கதிர்காமம்” என்ற ஊர் அவர்கள் வந்து போன ஊரென்பதற்கு சாத்தியம் உண்டு. “கழிர்” என்ற அறபுச் சொல்தான் “கதிர்” என்று மாறியுள்ளது.
 
எனது கட்டுரைகளை நுகர்கின்ற எவராயினும் எனக்காக ஒரு நொடி நேரம் இரு கரமேந்துமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments