Sunday, May 5, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல் குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அஷ் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு...

ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல் குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அஷ் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய “வஸிய்யத்” உபதேசம்.

தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
وصيّة قطب الأكبر أبي الحسن الشاذلي رضي الله عنه،
 
الولادة 591 – الوفاة 656
قال سيّدنا الشّيخ أبو الحسن الشّاذلي رضي الله عنه، كُنْ مُتمسِّكا بهذه الصّفات الحميدة تَفُزْ بسعادة الدارين، لا تَتَّخِذَنْ مِن الكافرين وليّا، ولا مِن المؤمنين عدوّا، وارحلْ بزَادِكَ من التّقوى فى الدنيا، وعُدَّ نفسكَ من المَوتَى، واشهد لله تعالى بالوحدانيّة، ولرسولِه صلّى الله عليه وسلّم بالرِّسالة، وحسْبُك عملٌ صالح وإن قلَّ، وقُلْ آمنتُ بالله وملائكته وكُتُبِه ورُسلِه واليوم الآخر والقدر خيره وشرّه من الله تعالى،
فمن كان مُتمسِّكًا بهذه الصِّفات الحميدة ضَمِنَ الله عزّ وجلّ له أربعةً فى الدنيا، الصِّدقَ فى القول، والإخلاصَ فى العمل، والرِّزقَ كالمطر، والوِقايةَ من الشرِّ، وأربعةً فى الآخرة، المغفرةَ العُظمى، والقُربةَ الزُّلفى، ودخولَ جنّة المَأْوَى، واللُّحوقَ بالدّرجة العُليا،
وإن أردت الصِّدق فى القول فدَاوِمْ على قراءة ‘ إنَّا أنزلناه فى ليلة القدر ‘، وإن أردت الرِّزقَ كالمطر فداوِمْ على قراءة ‘ قل أعوذ بربّ الفلق ‘، وإن أردت السّلامَةَ من شرِّ النّاس فداوم على قراءة ‘ قل أعوذ بربّ الناس ‘ ، وإن أردت جَلْبَ الخَيرِ والرِّزقَ والبركةَ فداوم على قراءة ‘ بسم الله الرحمن الرحيم المَلِكِ الحقِّ المُبينِ، نِعْمَ المَولَى ونِعمَ النّصير ‘، واقرأ سورة الواقعة، وسورة يس، فإنّه يأتيك الرزق كالمطر،
وإن أردت أن يجعل الله لك من كلِّ همٍّ فَرَجًا، ومِن كلِّ ضِيْقٍ مَخرجًا، ويرزُقَكَ من حيثُ لا تَحْتَسِبُ فالزَمِ الإستغفار،
وإن أردت أن تأمَنَ ممّا يَرُوْعُكَ وَيُفَزِّعُكَ فقُلْ ‘ أعوذ بكلمات الله التامّات مِن شرِّ غَضَبِه ومِن شرِّ عقابِه، ومن شرِّ هَمَزَاتِ الشّياطينِ وأن يحضرون،
ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல் குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அஷ் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய “வஸிய்யத்” உபதேசம்.
 
தோற்றம்: 591 ஹிஜ்ரீ
மறைவு: 656 ஹிஜ்ரீ
 
அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
பின்வரும் புகழப்பட்ட தன்மைகளை நீ இறுகப் பிடித்து வாழ்ந்தால் ஈருலக நற்பாக்கியங்களும் உனக்கு கிடைக்கும்.
 
காபிர்கiளில் எவரையும் தலைவனாக – அதிகாரியாக ஆக்கிக் கொள்ளாதே! “முஃமின்”களில் எவரையும் விரோதியாக ஆக்கிக் கொள்ளாதே! இறையச்சம் எனும் சாதத்தை கையில் எடுத்து இவ்வுலகில் பயணம் செய். உன்னை நீ மரணித்தவர்களில் ஒருவனாக கணக்கெடுத்துக் கொள்! அல்லாஹ் ஒருவன் என்று சாட்சி சொல். நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் றஸூல் என்று ஏற்றுக் கொள். குறைவாக இருந்தாலும் நல்லமல் உனக்குப் போதும். “ஆமன்து” என்ற பாடத்தை ஓதிக் கொள். அதாவது அல்லாஹ்வைக் கொண்டும், மலக்குகள் கொண்டும், வேதங்கள் கொண்டும், திருத்தூதர்கள் கொண்டும், மறுமை நாள் கொண்டும், நன்மை, தீமை என்பன அல்லாஹ்வின் ஏற்பாடு என்றும் நம்பிக் கொள்.
 
எவன் மேற்கண்ட புகழப்பட்ட தன்மைகளை இறுகப் பற்றிக் கொண்டானோ அவனுக்கு நான்கு விடயங்களை அல்லாஹ் கொடுக்கின்றான். அவை உண்மை பேசுதல், வணக்கத்தில் “இக்லாஸ்” கலப்பில்லாத தூய்மை, மழை போன்ற ரிஸ்க் – உணவு, தீமையிலிருந்து பாதுகாப்பு, இந் நான்கு நற்பாக்கியங்களும் அவனுக்கு அல்லாஹ் கொடுப்பான். இந் நான்கும் இவ் உலகில் கிடைப்பவையாகும்.
 
இவனுக்கு மறுமையில் நான்கு விஷேடங்களை அல்லாஹ் வழங்குகிறான். அவை மகத்தான பாவ மன்னிப்பு, இறை நெருக்கம், “மஃவா” எனும் சுவர்க்கம் செல்லுதல், உயர் பதவி கிடைத்தல், இந் நான்கு பாக்கியங்களையும் மறுமையில் அல்லாஹ் இவனுக்கு வழங்குகிறான்.
 
பேச்சில் நீ உண்மை சொல்வதை நாடினால் “இன்னா அன்ஸல்னாஹு பீ லைலதில் கத்ர்” என்ற அத்தியாயத்தை தொடர்ந்து ஓதி வா!
 
உணவு மழை போல் கிடைப்பதற்கு நீ விரும்பினால் “குல்அஊது பிறப்பில் பலக்” என்ற திரு அத்தியாயத்தை தொடராக ஓது. மனிதர்களின் தீமையிலிருந்து பாதுகாப்புப் பெற நீ நாடினால் “குல் அஊது பிறப்பின்னாஸ்” என்ற அத்தியாயத்தை விடாமல் ஓது. நன்மையும், உணவும், “பறகத்” அருளும் கிடைக்க வேண்டுமென்று நீ விரும்பினால் “பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீமில் மலிகில் ஹக்கில் முபீன் – நிஃமல் மவ்லா வநிஃமன் நஸீர்” என்பதையும், “வாகிஆ” அத்தியாயம், யாஸீன் அத்தியாயம் ஆகியவற்றையும் தினமும் ஓதி வா! உணவும், பொருளாதாரமும் மழைபோல் உன் வீட்டில் இறங்கும்.
 
உனக்கு ஏற்படுகின்ற துக்கத்திலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் நீ விடுபட விரும்பினாலும், அல்லாஹ் நீ நினைக்காமலேயே உனக்கு பொருளாதார வசதி தர வெண்டுமென்று நீ விரும்பினாலும் தவறாமல் “இஸ்திக்பார்” பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்! “அஸ்தஃபிறுல்லாஹல் அளீம்” என்று தொடர்ந்து ஓதி வா!
 
உனக்கு திடுக்கிடும் சம்பவங்களும், பயமும் வராதிருக்க நீ விரும்பினால் “அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மாதி குல்லிஹா மின் ஷர்ரி ஙழபிஹீ வஇகாபிஹீ, வமின் ஷர்ரி ஹமஸாதிஷ் ஷயாதீனி வஅன் யஹ்ழுறூன்” என்று ஓதிக் கொள்! (தொடரும்)
 
குறிப்புக்கள்:
 
மேலே தமிழில் எழுதியுள்ள அறபு வசனங்களை – அறபியில் எழுதியுள்ள வசனங்களோடு சரி பார்த்து மொழிய வேண்டும். சில அறபு எழுத்துக்களுக்கான “மக்றஜ்” உச்சரிப்பை தமிழில் எழுத முடியாதுள்ளது.
 
மேற்கண்ட ஓதல்களையும், அடுத்த தொடரில் நான் பதிவிடவுள்ள ஓதல்களையும் நேமமாக ஓதி வருவது வியாபாரத் தொடர்புள்ளவர்களுக்கு சாத்தியக் குறைவானதாகும். இவர்கள் எல்லா ஓதல்களையும் ஓதாமல் ஓதல்களில் அவர்களுக்கு அவசியமானதை தேவையானதை மட்டும் தெரிவு செய்து ஓதிக் கொள்ள வேண்டும்.
 
தொழிலுக்குப் போகாத நாட்களில் மட்டும் அனைத்தையும் ஓதிக் கொள்ள வேண்டும். தொழிலின்றி வீட்டிலேயே இருப்பவர்கள் அனைத்தையும் கட்டம் கட்டமாக ஓதி முடிக்கலாம்.
 
மேற்கண்ட தேவைகளுக்கு ஆங்கில வைத்தியர்களிடமோ, நாட்டு வைத்தியர்களிடமோ மருந்து எடுக்க முடியாது.
 
உதாரணமாக வறுமை நீங்கிப் பொருளாதாரம் பெருகுதல், அச்சமில்லாமற் போதல், துக்கம், கவலை இல்லாமற் போதல் போன்ற நோய்களுக்கு ஆன்மிக மருந்து மட்டுமே பயன் தரும்.
 
சுருக்கம் என்னவெனில் ஒரு முஸ்லிம் ஐந்து நிமிடமாவது “அவ்றாத்” ஓதுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். ஓய்வுள்ள நேரங்களில் ஆண்கள் ஒன்று கூடிக் கொண்டு ஊர் பலாய், வம்புகள் பேசியும், பிறர் பற்றிப் புறம் பேசியும் நேரத்தைக் கழிப்பதை தவிர்த்து “அவ்றாத்” ஓதுவது நூறு வீதம் நன்மை தரக் கூடியதாகும்.
 
இவ்விடயத்தில் பெண்கள் மிகக் கவனமாயிருந்து கொள்ளுதல் அவசியமாகும். பெண்கள் கூடினால் பேசத் தேவையில்லை. பிறரைப் பற்றிய ஆய்வுகள்தான் நடக்கும். ஆகையால் பெண்கள் தமது ஓய்வுள்ள நேரத்தை வீணாக்கி விடாமல் பயனுள்ளதாக்கி கொள்ளுதல் வேண்டும்.
 
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஸஹாபா பெண்மணிகள் தமது ஓய்வு நேரத்தை “அவ்றாத்” ஓதுவதில் கழித்துள்ளார்கள் என்பதற்கு பல நபீ மொழிகள் ஆதாரங்களாக உள்ளன.
 
ஒரு சமயம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண் அல்லாஹ்வின் றஸூலே! என் வீட்டில் தங்களின் திருப் பாதம் பட வேண்டுமென்று விரும்புகிறேன் என்றார். நபீயவர்கள் தோழர்களுடன் உள்ளே சென்றபோது பெரிய முடுச்சுகளும், சிறிய முடுச்சுகளும் இருந்தன. அது பற்றி பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வினவிய போது “அவ்றாத்” ஓதும்போது எண்ணிக் கொள்வதற்காக பேரீத்தங் கொட்டைகளை வைத்துள்ளேன் என்று அந்தப் பெண்மணி கூறினார். அப்போது பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நான் சொல்லித் தருகின்ற “அவ்றாத்” ஓதலையும் ஓதுங்கள் என்று கூறி சில ஓதல்களைச் சொல்லிக் கொடுத்தார்கள்.
 
قِرَاءَةُ الْأَوْرَادِ دَيْدَانُ الصَّالِحِيْنَ وَالصَّالِحَاتِ
“அவ்றாத்” ஓதுதல் நல்லடியார்களான பெண்களினதும், ஆண்களினதும் வழக்கம் என்று ஒரு பழமொழி உண்டு. இவ்வழக்கம் நமது ஆயிஷாக்களிடமும், ஹப்ஸாக்களிடமும் இல்லாதிருப்பது வேதனைக்குரியது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments