Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்வெற்றி கிடைத்தால் அல்லாஹ்வைத் துதியுங்கள்!

வெற்றி கிடைத்தால் அல்லாஹ்வைத் துதியுங்கள்!

إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا

அன்புக்குரிய ஸூபிஸ சமுகமே!
ஸூபிஸ உலமாஉகளே!

தொகுப்பு: ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.

நீங்கள் அனைவரும் ஐந்து நேரமும் தொழ வேண்டும். முடிந்த வரை “ஸுன்னத்” ஆன தொழுகைகளையும் பேணிக் கொள்ள வேண்டும். “ஹலால்” ஆன வழியில் உழைக்க வேண்டும். “ஹறாம்” ஆன வழியில் உழைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தொழில் செய்யும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் இஸ்லாமிய நூல்கள் வாசிக்க வேண்டும். அதோடு பொது அறிவு தொடர்பான நூல்களையும் படிக்க வேண்டும்.

புறம் பேசுதல், கோள் சொல்லுதல், ஒற்றுமையாக வாழ்பவர்களுக்கிடையில் கோள் சொல்லி அவர்களை மூட்டி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஸூபிஸ அமைப்பு தவிர வேறெந்த வழிகெட்ட அமைப்புகளுடனும் இணைந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். வஹ்ஹாபிஸ வழி கேட்டில் ஒரு துளியேனும் அருந்தாமல் இருக்க வேண்டும். ஸூபிஸத்திற்கு எதிரான கருத்துகளுக்கு செவி சாய்க்காமல் இருக்க வேண்டும். வஹ்ஹாபிஸ பீக்குழியில் விழுந்து விடாமல் இருக்க வேண்டும். நீங்களும், உங்கள் ஹாலும் என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டும். வம்பளந்து திரிவோருடன் நட்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். பிறர் பாடம் பார்ப்பதை உடனே நிறுத்த வேண்டும். எவருடனும் சண்டை செய்யாமல் இருக்க வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களையும் மனிதர்களாய்ப் பார்க்க வேண்டும். அவர்களை மதிக்க வேண்டும். காபிர்கள் உறவு கரண்டைக் காலின் கீழ் என்ற இத்துப் போன தத்துவத்தை தூக்கியெறிய வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்கள், வஹ்ஹாபிகள் மற்றும் வழி கெட்ட கொள்கைவாதிகளில் எவராவது நோயுற்றால் அவரை நலன் விசாரிக்கச் செல்ல வேண்டும். அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், அல்லது அவர்கள் ஒரு தண்டனைக்குள்ளானால் அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும்.

ஸூபிஸ சமுகத்தைச் சேர்ந்தவர்களே! ஸூபிஸம் உங்கள் வாயில் மட்டும் இருக்காமல் உங்கள் வாழ்விலும் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் நல்லதைச் செய்ய வேண்டும். தீயதை விட வேண்டும். போதை வஸ்த்து எதுவாயினும் அதை முற்றாகத் துறக்க வேண்டும். வெறுக்கவும் வேண்டும். எந்த ஓர் உயிராயினும் அதற்கு இரக்கம் காட்ட வேண்டும்.


مَنْ دَخَلَ فِيْمَا لَا يَعْنِيْهِ لَقِيَ مَا لَا يُرْضِيْهِ

தனக்குத் தேவையற்ற விடயத்தில் தலை போட்டவன் துன்பத்தை அணைத்துக் கொள்வான் என்ற தத்துவத்தை சிரமேற் கொண்டு வாழ வேண்டும்.

பின்வரும் ஏழு பேர்களின் “பத்துஆ”வுக்கு – சாபத்திற்கு பாத்திரமாகிவிடாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

وَسَبْعَةٌ لَا يَرُدُّ اللهُ دَعْوَتَهُمْ
مَظْلُوْمٌ وَالِدٌ ذُوْ صَوْمٍ وَذُوْ مَرَضٍ
وَدَعْوَةٌ لِأَخِيْ بِالْغَيْبِ ثُمَّ نَبِيْ
لِأُمَّةٍ ثُمَّ ذُوْ حَجٍّ بِذَاكَ قُضِيْ

ஏழு பேர்களின் “துஆ” வை அல்லாஹ் தட்டமாட்டான். அநீதி செய்யப்பட்டவன், பெற்றோர், நோன்பாளி, நோயாளி, தனது சகோதரனுக்கு மறைமுகமாக “துஆ” கேட்பவன், தனது சமுகத்திற்காக “துஆ” கேட்கும் ஒரு நபீ, ஏற்றுக் கொள்ளப்பட்ட “ஹஜ்” செய்தவன் ஆகியோர்.


إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ، وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا، فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا

நபீயே நாயகமே! அல்லாஹ்வின் உதவியும், மக்கா வெற்றியும் உங்களுக்கு கிடைத்து மனிதர்கள் சாரி சாரியாக “தீனுல் இஸ்லாம்” இஸ்லாம் மார்க்கத்தில் இணைவதை நீங்கள் கண்டால் அல்லாஹ்வைத் துதித்தும், அவனைப் புகழ்ந்தும், அவனிடம் பாவ மன்னிப்பும் கேளுங்கள். அல்லாஹ் பாவத்தை மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் உள்ளான். (ஸூறதுந் நஸ்ர் 1-3)

ஸூபிஸ சமுகமே! அரசாங்கம் வஹ்ஹாபிஸ அமைப்புகளைத் தடை செய்தது ஸுன்னீகளுக்கும், ஸூபீகளுக்கும், தரீகாவாதிகளுக்கும் அல்லாஹ் செய்த உதவியும், அவன் வழங்கிய வெற்றியுமாகும். இவை மட்டும்ல்ல. முஸ்லிம்கள் பிளவு படாமல் வாழ்வதற்கு கிடைத்துள்ள பெரும் அருளுமாகும்.

எனவே, உங்களில் எவரும் தோல்வியால் துவண்டு போயுள்ள அவர்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையிலும் இறங்காமலும், அவர்களின் உள்ளங்கள் புண்படும் வகையில் நடக்காமலும் அல்லாஹ் செய்த உதவிக்காக அவனைப் புகழ்ந்து கொண்டும், அவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொண்டும், அவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டும் அமைதியாக வாழ வேண்டுமென்று உங்கள் அனைவரையும் அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.

இலங்கைத் திரு நாட்டில் வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!

வஹ்ஹாபிஸம் வழிகேடென்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் எழுதியும், பேசியும் வருகிறேன். இறுதியாக நான் எழுதி வெளியிட்ட “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற 1654 பக்கங்கள் கொண்ட நூல் வெளி வருவதற்கு பல மாதங்களுக்கு முன்னிருந்தே இந்நூல் வெளியானால் இந்நாட்டில் வஹ்ஹாபிஸம் இருக்காதென்று கூறி வந்துள்ளேன். இன்று நடந்துள்ளதென்ன? சிந்தியுங்கள்.

எனக்கும், எனது கருத்தைச் சரி கண்ட உள் நாடு, வெளிநாடு ஸூபிஸ முஸ்லிம்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் வழங்கப்பட்ட “பத்வா” என்ற தீர்ப்பினால் மனமொடிந்தும், உள்ளம் உருகியும் போன பல இலட்சம் மக்களின் பிரார்த்தனை வீண் போகாது. அவர்கள் உயர்த்திய, இன்றும் உயர்த்திக் கொண்டிருக்கின்ற கரங்கள் வெற்றுக் கரங்களாக மாறாது. ஸூபிஸ மக்களின் மன வேதனை “பத்வா” வழங்கிய முல்லாக்களை வேருடன் வெட்டி எறியும் என்பதை “பத்வா” வழங்கிய முல்லாக்கள் விளங்காமலிருப்பது அவர்களின் அறியாமையும், மனமுரண்டுமேயாகும். இறைவன் நீதிவான்களுக்கெல்லாம் நீதிவான் என்பதை உணராமலிருப்பது தங்களைத் தாங்களே படுகுழியில் தள்ளும் செயலாகும். பத்வா வழங்கியோர் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். இன்றேல் இந்த விவகாரம் ஐ. நா வரை செல்லும் என்பதை அவர்கள் திட்டமாக நம்ப வேண்டும். முட்டிய பின் குனிவதை விட முட்டுமுன் குனிவதே சாலச் சிறந்தது.

எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments