Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை! ஸூபிஸம் என்றால் என்ன?

“அத்தஸவ்வுப்” ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை! ஸூபிஸம் என்றால் என்ன?

தொடர்: 01

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

الحمد لله الّذي مَلَأَ قُلُوبَ أَوْلِيَائِهِ بِمَحَبَّتِهِ، واخْتَصَّ أرواحَهم بِشُهُوْدِ عَظَمَتِه، وَهَيَّأَ أسرارَهم لِحَمْلِ أَعْبَاءِ مَعْرِفَتِهِ، فقُلُوبُهم فى رَوضاتِ جَنَّاتِ مَعْرِفَتِه يَحْبَرُون، وأرواحُهم فى رِياض مَلَكُوْتِه يَتَنَزَّهُوْنَ، وأسرارُهم فى بِحَار جَبَرُوْتِه يَسْبَحُون، فَاسْتَخْرَجَتْ أفكارُهم يواقيتَ العلوم، ونَطَقَتْ أَلْسِنَتُهم بِجَواهِر الحِكَم وَنَتَائِجِ الفُهُوم، فسُبْحَانَ مَنِ اصْطَفَاهُم لِحَضْرَتِه، وَاخْتَصَّهُم بِمَحَبَّتِه، فَهُمْ بين سَالِكٍ ومجذُوب، ومُحِبٍّ وَمَحْبُوْبٍ، أفناهُم فى مَحَبَّةِ ذَاتِه، وأَبْقَاهم بشُهودِ آثَارِ صفاتِه، والصلاة والسلام على سيّدنا محمد منبع العلوم والأنوار، ومعدن المعارف والأسرار، ورضي الله تعالى عن أصحابه الأبرار، وأهل بيته الأطهار، أما بعد،

فعلْم التصوف من أجَلِّ العلوم قَدْرًا، وأعظمِها مَحَلًّا وَفَخْرًا، وأسناها شمسا وبدرا، وكيف لا؟ وهو لُباب الشـريعة ومنهاج الطريقة، ومنه تُشرق أنوارُ الحقيقة،
மேற்கண்ட அறபு வரிகள் என் கற்பனைத் தோட்டத்தில் பூத்த மலர்கள் அல்ல. இவை إيقاظ الهمم فى شرح الحكم “ஈகாழுல் ஹிமம் பீ ஷர்ஹில் ஹிகம்” எனும் அஷ் ஷெய்கு அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு அஜீபதல் ஹஸனீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தோட்டத்தில் மலர்ந்த ஞான மலர்களாகும்.

மேற்கண்ட நூல் குறித்த மகான் அவர்களால் “ஹிகம்” அல்லது “ஹிகம் இப்னு அதாயில்லாஹ்” என்ற நூலின் விரிவுரை நூலுக்குரிய பெயராகும்.


இதன் மூலமான ஹிகம் எனும் நூல், ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அஸ்ஸெய்யித் – அஷ் ஷெய்கு அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் நேரடி முதலாவது கலீபா அஷ் ஷெய்கு அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் முதலாவது நேரடி கலீபா தாஜுத்தீன் இப்னு அதாயில்லாஹ் அவர்களால் “ஹிகம்” என்ற பெயரில் எழுதப்பட்ட ஸூபிஸ தத்துவ நூலாகும். இதன் விரிவுரை நூல்தான் “ஈகாளுல் ஹிமம்” எனும் நூலாகும்.

மேற்கண்ட மூன்று மகான்களும் இஸ்லாமிய உலகில் பிரசித்தி பெற்ற “குத்பு”மார்களாவர். இவர்கள் மூவரும் “வஹ்ததுல் வுஜூத்” எனும் “மெய்ப் பொருள் ஒன்று” என்ற இறை ஞான தத்துவத்தை – அல்லது “எல்லாம் அவனே” என்ற மறை தத்துவத்தை வெளிரங்கமாகவும், பகிரங்கமாகவும் பேசியும், எழுதியும் வந்த மகான்களாவர்.

இதனால் பொறாமைக் காரர்களின் சதியால் இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ அவர்கள் மொறோக்கோவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள். போலிகளான பொறாமைக் காரர்கள் அவர்களுக்கு “சிந்தீக்” என்று பட்டமும் கொடுத்தார்கள். எனினும் அல்லாஹ் எதிரிகளின் சதியிலிருந்து அவர்களைக் காப்பாற்றிவிட்டான்.

இதேபோல் “ஹிகம்” நூலாசிரியரான இப்னு அதாயில்லாஹ் அவர்களும் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்கள். (பார்க்க அல்யவாகீத், பாகம் 01, பக்கம்13)

ولِكُلِّ علمٍ حَدٌّ، أي تَعْرِيْفٌ، وَمَوْضُوْعٌ، واسمٌ، واستِمْدادٌ، وحُكْمُ الشَّارِعِ فِيْهِ، وَتَصَوُّرُ مَسَائِلِهِ، وَفَضِيْلَةٌ، وَنِسْبَةٌ، وَثَمَرَةٌ، وإلى هذه الأمور أشار شاعر بقوله،

إِنَّ مَبَادِى كُلِّ فَنٍّ عَشَرَة – اَلْحَدُّ وَالْمَوْضُوْعُ ثُمَّ الثَّمَرَة
وَنِسْبَةٌ وَفَضْلُهُ وَالْوَاضِعُ – اَلْاِسْمُ وَالْإِسْتِمْدَادُ حُكْمُ الشَّارِعِ
مَسَائِلُ وَالْبَعْضُ بِالْبَعْضِ اِكْتَفَى – وَمَنْ دَرَى الْجَمِيْعَ حَازَ الشَّرَفَا

ஆரம்பத்திலிருந்து தொடராக أما بعد வரை எழுதிய அறபு வரிகளுக்கான மொழியாக்கத்தின் சுருக்கத்தை எழுதத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அவ்வரிகள் இறைஞானத்தின் சிறப்பையும், இறைஞானிகளின் அகமியங்களையுமே கூறுகின்றன. விபரம் அவசியம் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது ஸூபிஸ ஞானத்தை முறைப்படி அறிந்தவர்களிடமும் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

“அத்தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தின் மகிமை:

ஸூபிஸம் என்பது அறிவுகளில் மிகவும் சிறந்ததும், தரமானதுமாகும். பெருமை மிக்கதும், மிகவும் வலுப்பமானதுமாகும். அறிவுகளின் ஆதவன், சந்திரன் என்றும் சொல்லலாம். ஏன் இவ்வாறு சொல்ல முடியாது? ஸூபிஸ ஞானம்தான் “ஷரீஆ” எனும் வித்தினுள்ளே இருக்கின்ற அதன் பருப்பாகவும், “தரீகா”வின் வழியாகவும் உள்ளது. அது மட்டுமல்ல. ஸூபிஸ ஞானம் மூலமே எதார்த்தத்தின் ஒளிகள் ஒளிர்கின்றன. ஸூபிஸமின்றேல் இஸ்லாம் இல்லை.

பத்து அடிப்படைகள்:

எந்தவொரு “இல்ம்” கலையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு பத்து அடிப்படைகள் நிச்சயமாக இருக்கும். அதேபோல் “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ கலைக்கும் பத்து அடிப்படைகள் உள்ளன. அவை ஸூபிஸம் பேசுகின்றவர்களும், ஸூபிஸக் கலையில் ஆர்வமுள்ளவர்களும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய அம்சங்களாகும்.

சஹ்றானின் குண்டு வெடிப்பின் பிறகு வஹ்ஹாபிகளும், இரு முகமுள்ளோரும் ஸூபிஸம் எனும் முகக் கவசம் போடத் தொடங்கியுள்ளார்கள். “ஸூபீ” என்ற சொல்லின் வரைவிலக்கணம் கூடத் தெரியாத புதிதாக இஸ்லாமில் இணைந்தவர்கள் கூட தம்மை பரம்பரை ஸூபீகள் என்று சொல்வது விந்தையாகவும், வேதனையாகவும் உள்ளது.

பத்து அம்சங்களும் தொடராக வெளி வரும். நுகர விரும்புவோர் தொடராக நுகரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஸூபிஸ சமுகமே!

إِنَّ اللهَ لَا يَمَلُّ حَتَّى لَا تَمَلُّوْا
“நிச்சயமாக அல்லாஹ் சடையமாட்டான். சோர்ந்துவிடவுமாட்டான் நீங்கள் சடையும் வரை” என்பது நபீ மொழி. وَالسَّعْيُ مِنَّا وَالْإِتْمَامُ مِنَ اللهِ முயற்சி செய்வது எமது கடமை. முடித்துத் தருவது அல்லாஹ்வின் நியாயமாகும். நானும், நீங்களும் அல்லாஹ்வுக்காகவே வாழ்கிறோம். எமக்கு எது போனாலும் கவலை இருக்கலாகாது. ஏனெனில் எமக்கென்று ஒன்றுமே இல்லை. எல்லாமே அவனின் உடைமைகளே! எந்த நாட்டு மன்னனுக்கும் மகுடாதிபதிக்கும் ஓர் அங்குல நிலம் கூட சொந்தமானதல்ல. இப்பூமியில் மனிதன் படைக்கப்படுமுன் இதில் உரிமை கொண்டாட எவருமிருக்கவில்லை. அவன் மட்டுமே உரிமையாளனாயிருந்தான். அவனிடம் பணம் கொடுத்து நிலம் வாங்கியவன் எவனுமில்லை. இன்று உலகில் வாழும் எவனுக்கும் எதுவும் சொந்தமானதல்ல. பிறருடைமையை எடுத்துக் கொண்டு எம் உடைமை என்பவர்களே இப்பூமியில் வாழ்கின்றனர். நாமும் அவனின் உடைமைகளே! நமது என்பதும் அவனின் உடைமையேயாகும்.

நாம் அவனுக்காக வாழ்வோம். அவனாக முழுமையாக முயற்சிப்போம். நான் நானல்ல. நானும் அவனே என்ற உணர்வோடு வாழ்ந்து அதே உணர்வில் அவனைச் சந்திப்போம்.

தொடரும்….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments