Sunday, May 5, 2024
Homeநிகழ்வுகள்ஸூபிஸ சமூகத்தின் “மைல்கல்”லாக காணப்பட்ட “அல்ஜாமிஅதுல் மிஸ்பாஹிய்யா மகளிர் அறபுக் கல்லூரி” அங்குரார்ப்பணம்!

ஸூபிஸ சமூகத்தின் “மைல்கல்”லாக காணப்பட்ட “அல்ஜாமிஅதுல் மிஸ்பாஹிய்யா மகளிர் அறபுக் கல்லூரி” அங்குரார்ப்பணம்!

எமது ஸூபிஸ சமூகத்தின் தீராத் தாகமாக அனைவர் மனதிலும் காணப்பட்ட பெண்களுக்கான அறபுக் கல்லூரி ஒன்றை உருவாக்குவதில் கடந்த 03 வருடங்களாக காத்தான்குடி 06 தீன் நகர் மன்பஉல் கைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலின் நிர்வாக சபை, ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (தால உம்றுஹூ) அன்னவர்களின் ஆசிர்சவாதத்துடன் எடுத்த முயற்சியின் பலனாக நேற்று 17.03.2023 – வெள்ளிக்கிழமை அதன் அங்குரார்ப்பண நிகழ்வு “மன்பஉல் கைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலில்” இடம் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

குறித்த இந்நிகழ்வு மாலை 04.00 மணியளவில் ஆரம்பமாகி “மக்ரிப்” தொழுகைக்கான “அதான்” உடன் நிறைவுபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அதி சங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் கலந்து கொண்டதுடன், கொளரவ அதிதிகளாக சங்கைக்குரிய உலமாஉகள், காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் MIM ஜெஸீம் JP, காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் KLM பரீட் JP, மற்றும் அல்ஹாஜ் அப்துர் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் முகாமைச் சபை உறுப்பினர்கள், அதனுடன் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள், தனவந்தர்கள் கலந்து கொண்டதுடன், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமான பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
 
“பாதிஹா”வுடன் ஆரம்பமான நகழ்வில் மன்பஉல் கைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலின் உப செயலாளர் மௌலவீ AAM பாஹிம் றப்பானீ BA அவர்களால் வரவேற்புரையும், “மன்பஉல் கைறாத்” பள்ளிவாயலுடன் தொடர்பான வரலாறுகள் தொடர்பான தலைமை உரையும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்கள் அறபுக் கல்லூரியின் முக்கியத்துவம், மற்றும் உலக வரலாற்றில் அறபுக் கல்லூரிகளின் பங்களிப்பு தொடர்பாகவும், நமது கல்லூரியின் நோக்கம் பற்றியும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் செயலாளர் சங்கைக்குரிய மௌலவீ KRM ஸஹ்லான் றப்பானீ BBA அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் KLM பரீட் JP அவர்கள் எமது பிரதேசத்தில் அறபுக் கல்லூரி ஒன்று உருவாக்கப்படுவது இன்றியமையாதது எனும் தொனியில் “அல் ஜாமிஅதுல் மிஸ்பாஹிய்யா” உருவாக்கப்படுவதை வாழ்த்தி சிறிது நேரம் உரை நிகழ்த்தினார். அடுத்ததாக நிகழ்வின் பிரதம அதிதி அதி சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் சமூகத்தில் பெண்கள் மார்க்கக் கல்வி கற்பதன் முக்கியத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி மிக அழகாக உரை நிகழ்த்தினார்கள்.
 
இறுதியாக மன்பஉல் கைறாத் பள்ளிவாயலின் செயலாளர் MIM நஸீம் JP அவர்களால் எமது கல்லூரியின் கீழ்த்தள வேலைக்காக உத்தேசிக்கப்பட்ட சுமார் 03 கோடி ரூபாய் நிதியை மஹல்லா வாசிகள், தனவந்தர்கள் மூலம் நீண்ட கால அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் முறை பற்றி விபரிக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் “ஸலவாத்”துடன் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments