15 ஆயிரம் இலங்கை ரூபாய் அன்பளிப்பு!
பின்வரும் ஐந்து கேள்விகளுக்கும் சரியான விடை எழுதியனுப்பும் முதல் நபருக்கு மட்டும் 15 ஆயிரம் ரூபாயும், இந்தியா – நாஹூர் ஷரீபில் அடக்கம் பெற்றுள்ள காரணக்கடல் குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் பாதுஷா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித “கப்ர் ஷரீப்” மீது பல மணி நேரங்கள் வைக்கப்பட்டு அருள் பெற்ற இந்தியப் பணம் இருபது ரூபாயும் அன்பளிப்பாக வழங்கப்படும். இந்தப் பணம் எவரிடம் உள்ளதோ அவருக்கு ஈருலக நற்பேறும் கிடைக்கும்.
கேள்விகள்:
01.
أَنَا الْحَقُّ – “அனல் ஹக்” நானே மெய்ப் பொருள் என்று கூறிய இமாம் மன்சூர் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்களைக் கொலை செய்த கொலை காரனின் பெயர் என்ன?
02. இமாம் மன்சூர் ஹல்லாஜ் அவர்கள் கொலைக் களத்திற்கு கொண்டு வரப்பட்ட போது அங்கு வைக்கப்பட்டிருந்த வாள், கத்தி, ஆணி போன்றவற்றைப் பார்த்து சிரித்து விட்டு, நான் இரண்டு “றக்அத்” தொழுவதற்கு எனக்கு “முஸல்லா” தருபவர் யார் என்று அங்கு கூடியிருந்த மக்களிடம் கேட்ட போது அவர்களுக்கு “முஸல்லா” வழங்கியவரின் பெயர் என்ன?
03. இமாம் ஹல்லாஜ் அவர்களைக் கொல்ல வேண்டுமென்று உலமாஉகளால் வழங்கப்பட்ட “பத்வா” மார்க்கத் தீர்ப்பில் கையெழுத்திட 06 தடவைகள் மறுத்துக் கொண்டிருந்த ஒரு மகான் 07ம் தடவையில் கையெழுத்திட்டார். அவரின் பெயர் என்ன?
04. இமாம் ஹல்லாஜ் அவர்களின் உடல் எரிக்கப்பட்ட பின் அதன் சாம்பல் என்ன செய்யப்பட்டது?
05. இமாம் ஹல்லாஜ் அவர்கள் “அனல் ஹக்” நானே மெய்ப் பொருள் என்று சொன்னதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டது சரியா? பிழையா? எதுவாயினும் அதற்கான சுருக்கமான விளக்கம் கூறப்பட வேண்டும்.
முக்கிய குறிப்பு: பதில் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். அதில் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விபரமும் குறிப்பிட வேண்டும்.
முகவரி:
அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பேரவை.
BJM பில்டிங், BJM வீதி, காத்தான்குடி 06.
#வெற்றியாளர்!
கேட்கப்பட்ட 05 கேள்விகளுக்கும் பதில் எழுதி அனுப்பிய 46 நபர்களில் 11 பேர் மாத்திரமே சரியான விடைகளை எழுதி அனுப்பியிருந்தார்கள். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட நிபந்தனையின்படி சரியான விடையை எழுதி அனுப்பும் முதல் நபர் தெரிவு செய்யப்படுவார் என்ற அடிப்படையில் பின்வரும் நபர் அதிர்ஷ்டசாலியாக தெரிவு செய்யப்படுகிறார்.
மௌலவீ HM அப்துர் றஷீத் றப்பானீ
அல்அமீன் வீதி, புதிய காத்தான்குடி 06.
அவர் எழுதிய சரியான விடைகள்.
01. அபுல் ஹாரித்
02. இமாம் அபூ பக்ர் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ்.
03. இமாம் ஜுனைத் அல்பக்தாதீ றஹிமஹுல்லாஹ்.
04. “தஜ்லா” நதியில் சாம்பலை எறியப்பட்டது.
05. கொலை செய்தது பிழையேயாகும்.
காரணம்: அவர்கள் பேசிய கருத்து சரியா? பிழையா? என்று ஆராயப்பட்டு அதை அவர்கள் என்ன நிலையில் சொன்னார்கள் என்பதை ஆராய்ந்து அறிந்ததன் பிற்பாடே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.