29வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரியின் திருக்கொடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள்
அஜ்மீர் அரசர், கரீப் நவாஸ், ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 29வது வருடமாக ஹாஜாஜீ மகா கந்தூரி இன்று 03.06.2015 (புதன்கிழமை) பி.ப 05.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஹாஜாஜீ மகா கந்தூரியின் திருக்கொடியேற்றத்துக்கான முன்னேற்பாடுகளின் தொகுப்பு.
Read Moreகொள்கை விளக்கக் கருத்தரங்கு
மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தினரால் ஸூபிஸ, சுன்னத வல் ஜமாஅத் கொள்கை சார்ந்த இளைஞர்கள், மாணவர்களுக்கான கொள்கை விளக்கக் கருத்தரங்கு 17.05.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி. 01.30 மணிவரை காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மௌலவீ MSA. ஸாஹ்ஜஹான் றப்பானீ அன்னவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தின் உறுப்பினர் மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA Hons. அன்னவர்களும், மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தின் தலைவர் மௌலவீ MJM.ஜஹானீ றப்பானீ அன்னவர்களும் விளக்க
Read Moreமிஃறாஜ் இரவும், ஸலவாத் மஜ்லிஸும்
றஜப் பிறை 27ம் இரவான 16.05.2015 அன்று (சனிக்கிழமை) மிஃறாஜுடைய இரவை கண்ணியம் செய்யும் முகமாக அன்று காத்தான்குடி- 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் விஷேட ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகள் தரிசன நிகழ்வும் நடைபெற்றது. அன்றைய தினம் பி.ப 04.00 மணி தொடக்கம் இரவு 08.00 மணிவரை பெண்களுக்கும், இரவு 09.00 மணிதொடக்கம் 11.30 மணிவரை ஆண்களுக்கும் அகிலத்தின் பேரொளி, பேரொளிப்பிழம்பு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ
Read Moreபுகாரீ தமாம் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு
38வது வருடமாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 16.04.2015 அன்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 29நாட்கள் ஓதப்பட்டு வந்த ஸெய்யிதுனா முஹம்மத் இப்னு இஸ்மாயில் அல் புகாரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட புனித ஸஹீஹுல் புகாரீ தமாம் மஜ்லிஸ் 15.05.2015 வெள்ளிக்கிழமை அன்று இரு அமர்வுகளாக நடைபெற்றது. முதலாம் அமர்வு – காலை 10.00 மணிதொடக்கம் 11.30 வரையும் இரண்டாம் அமர்வு – அஸர் தொழுகையின் பின் ஆரம்பமாகி இரவு 09.00 மணிவரை நடைபெற்றது.
Read Moreஅஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத் P.P.S.S. முஹம்மத் புஹாரீ நல்ல கோயாத் தங்கள் வருகை
அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்கு அப்துர் றஸீத் கோயாத்தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் மருமகனும், ஜாமிஅஹ் மின்ஹாஜிய்யஹ் அதிபருமான அஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத் P.P.S.S. முஹம்மத் புஹாரீ நல்ல கோயாத்தங்கள் அன்னவர்கள் 13.05.2015 (புதன்கிழமை) அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலுக்கு பி.ப 05.00 மணியளவில் வருகை தந்தார்கள். அன்னாருடன் ஜாமிஅஹ் மின்ஹாஜிய்யஹ்வின் உஸ்தாத்மார்களும், மாணவர்களும், ஜாமிஅஹ்வின் நிர்வாகிகளும் சமுகம் தந்தனர். தங்களது வருகையில் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களை சந்தித்தும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
Read Moreஇமாம் ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவு தினம்
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் வந்துதித்த இமாமுனா ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 11.05.2015 (திங்கட்கிழமை) அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையின் பின் அன்னாரின் பேரிலான மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் அன்னாரின் அகமிய நிலைகளைப் பற்றி சங்கைக்குரிய மௌலவீ அப்துல் மஜீத் றப்பானீ அன்னவர்களால் மார்க்க உபன்னியாசமும் நடைபெற்றது. இறுதியா துஆ ஓதப்பட்டு, தபர்றுக் விநியோகத்துடன் இனிதே ஸலவாத்துடன் மஜ்லிஸ் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
Read More29வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அழைப்பிதல்
கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக வருடாந்தம் நடைபெறும் 29வது வருட ஹாஜாஜீ மா கந்தூரி திருக்கொடியேற்றம் – 03.06.2015 (புதன் கிழமை)
Read More